ஆஃபர்ல அள்ளிட்டு போவீங்க.. மட்ட ரேட்ல 43 இன்ச் Android TV.. டால்பி டிஜிட்டல் பிளஸ்.. 48W சவுண்ட்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) இப்போது பல்வேறு பிராண்ட்களின் ஸ்மார்ட்டிவிகளுக்கு நம்ப முடியாத தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இதில் ப்ளூபங்க்ட் 43 இன்ச் ஆண்ட்ராய்டு டிவியானது அடிமட்ட விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த டிவி குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த பிளிப்கார்ட் விற்பனையில் ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் 43 இன்ச் ஆண்ட்ராய்டு டிவி (Blaupunkt CyberSound 43 inch Android TV) மாடலுக்கு 43 சதவீத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இப்போது, ஆர்டர் செய்யதால் ரூ.16,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த விலை போக குறிப்பிட்ட கார்டுகளுக்கு ரூ.1,250 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.15,649 பட்ஜெட்டில் இந்த டிவியை வாங்கி கொள்ளலாம்.

ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் 43 இன்ச் டிவி அம்சங்கள் (Blaupunkt CyberSound 43 inch TV Specifications): ரியல்டெக் (Realtek) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் (Android 11 OS) கிடைக்கிறது. ஃபுல்எச்டி (Full HD) ரெசொலூஷன் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கிறது. மேலும், 60Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் (HDR) விவிட் கலர்கள் உள்ளிட்ட பட்ஜெட்டுக்கு ஏற்ப பீச்சர்களை கொடுத்து இருக்கிறது.
கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) சப்போர்ட்டுடன் இந்த ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் 43 இன்ச் டிவி வருகிறது. வழக்கமாக கிடைக்கும் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), நெட்ஃபிளிக்ஸ் (Netflix) மற்றும் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி ஆப்களும் கிடைக்கின்றன.
டால்பி டிஜிட்ட் பிளஸ் (Dolby Digital Plus) மட்டுமல்லாமல், 48W சவுண்ட் அவுட்புட் கிடைக்கிறது. 2 ஸ்பீக்கர்களில் அவுட்புட் பெற்று கொள்ளலாம். இந்த ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் 43 இன்ச் டிவியில் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி கிடைக்கிறது. ஆண்ராய்டு ஓஎஸ் கிடைப்பதால், அதற்கு ஏற்ப பல்வேறு கனெக்டிவிட்டி மற்றும் ஸ்மார்ட் பீச்சர்களை கொடுக்கிறது.
வயர்லெஸ் ரெடி (Wireless Ready), ஆட்டோ பவர் ஆஃப் (Auto Power Off) கிடைக்கிறது. மேலும், கேம் மோட் (Game Mode), ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) பீச்சர்களும் கிடைக்கின்றன. இந்த ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் 43 இன்ச் டிவியின் வயர்லெஸ் கனெக்டிவிட்டிகளை பார்க்கையில் ப்ளூடூத் (Bluetooth), பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல போர்ட்களை பார்க்கையில், 3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட் (USB Ports) கிடைக்கிறது. இந்த டிவிக்கு ஸ்மார்ட் ரிமோட் (Smart Remote) கிடைக்கிறது. ஆகவே, கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் அதில் வருகிறது. அதேபோல நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப், கூகுள் பிளே போன்ற ஷார்ட்-கட் கீகளும் அந்த ஸ்மார்ட் ரிமோட்டில் இடம்பெற்றுள்ளன.
இந்த ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் 43 இன்ச் டிவியானது 43CSG7105 மாடலாகும். அதேபோல சைபர்சவுண்ட் ஜி2 சீரிஸ் (CyberSound G2 Series) மூலம் வாங்கி கொள்ளலாம். டால்பி டிஜிட்டல் பிளஸ், 48W சவுண்ட் அவுட், 1 ஜிபி ரேம் மற்றும் 43 இன்ச் எல்இடி டிஸ்பிளே போன்ற பீச்சர்கள் இந்த கம்மியான பட்ஜெட்டுக்கு பரவாயில்லையே என்றே தோன்ற வைக்கிறது.


Click it and Unblock the Notifications








