Home
Gadgets

சும்மா கிழி.. ரூ.1999 போதும்.. LED டிஸ்பிளே.. டர்போ சார்ஜிங்.. QUAD மைக்.. 50 மணி நேரம் பேக்கப்.. எந்த மாடல்?

எல்இடி டிஸ்பிளே மட்டுமல்லாமல், டூயல் பேரிங், பேஸ் டீமன் டெக்னாலஜி, கேமிங் மோட், ஃபிளிங்க்பேர் டெக்னாலஜி, 50 மணி நேர பிளேபேக், டர்போவோல்ட் ஃபாஸ்ட் சார்ஜிங், ஹைபிரிட் ஏஎன்சி போன்ற நம்ப முடியாத பீச்சர்களை வெறும் ரூ.1999 பட்ஜெட் இயர்பட்டில் ப்ளூபங்க்ட் (Blaupunkt) நிறுவனம் கொடுத்துள்ளது. ப்ளூபங்க்ட் பிடபுள்யூ300 மோக்சா பிளஸ் (Blaupunkt BTW300 Moksha Plus) மாடலை இந்திய மார்கெட்டில் களமிறக்கி இருக்கிறது. இந்த இயர்பட்டில் என்னென்ன பீச்சர்கள் வருகின்றன? விலை மற்றும் விற்பனை எப்படி?

ப்ளூபங்க்ட் நிறுவனம் அடிமட்ட விலையில் டிவிகளை விற்பனை செய்துவருவது தெரியும். ஆனால், அந்த நிறுவனம் இயர்பட்ஸ் மாடல்களையும் இப்போது களமிறக்க தொடங்கி இருக்கிறது. இந்த மாடல்களிலும் அடிமட்ட விலையில் பக்கா டெக்னாலஜிகள் மற்றும் பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த வரிசையில் ப்ளூபங்க்ட் பிடபுள்யூ300 மோக்சா பிளஸ் சேர்ந்துள்ளது.

சும்மா கிழி.. ரூ.1999 போதும்.. LED டிஸ்பிளே.. டர்போ சார்ஜிங்.. மாடல்?

பிரீமியம் டிசைனில் கேமிங் பிரியர்கள் மற்றும் மியூசிக் பிரியர்களுக்கான பீச்சர்களை கம்மியான விலையில் கொடுத்து இருக்கிறது. டர்போவோல்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட பேட்டரி மற்றும் எல்இடி டிஸ்பிளே இரண்டும் கஸ்டமர்களை கவரும் விதமாக இருக்கிறது. கூடவே, ஏஎன்சி டெக்னாலஜி, பிளிங்க்பேர் டெக்னாலஜி போன்றவற்றையும் கொடுத்து வரவேற்பை எகிற செய்துள்ளது.

ப்ளூபங்க்ட் பிடபுள்யூ300 மோக்சா பிளஸ் அம்சங்கள் (Blaupunkt BTW300 Moksha Plus Specifications): இந்த ப்ளூபங்க்ட் மாடலானது ப்யூர் பிளாக் கலரில் டிரெண்ட்டிங் டிசைன் பாடி கொண்டிருக்கிறது. சார்ஜிங் கேஸில் எல்இடி டிஸ்பிளே (LED Display) வருகிறது. இந்த டிஸ்பிளேவானது பேட்டரி சார்ஜிங் மற்றும் பேட்டரி ஸ்டேட்டஸ் விவரங்களை மட்டுமே கொடுக்கக் கூடியது.

டர்போவோல்ட் சார்ஜிங் (TurboVolt Charging) சப்போர்ட் மற்றும் சிங்கிள் சார்ஜில் 50 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கிறது. ஆகவே, ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்துவிட்டால், 2 நாட்களுக்கும் மேல் பேக்கப் பெற்று கொள்ளலாம். வாய்ஸ் கால்களுக்காக ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) டெக்னாலஜியுடன் குவாட் மைக் (Quad Mic) கிடைக்கிறது.

ஆகவே, பேக்கிரவுண்ட் நாய்ஸ் இல்லாமல் வாய்ஸ் கால்களை பேசி கொள்ளலாம். இந்த ப்ளூபங்க்ட் பிடபுள்யூ300 மோக்சா பிளஸ் மாடலில் வாய்ஸ் கால்களுக்கு மட்டுமல்ல, டிரைவர்களிலும் பக்கா டெக்னாலஜி கிடைக்கிறது. டீப் பேஸ் மற்றும் ஆடியோ வேரியேஷன் எதிர்பார்க்கும் மியூசிக் பிரியர்களுக்கு பேஸ் டீமன் டெக்னாலஜி (Bass Demon Technology) டிரைவர்கள் கிடைக்கிறது.

இந்த மாடலில் கேமிங் பிரியர்களுக்கு லோவ் லேட்டன்சி கொடுக்கும் விதமாக கேமிங் மோட் (Gaming Mode) வருகிறது. மேலும், சார்ஜிங் கேஸ் ஓப்பன் செய்யப்பட்ட உடனேயே ஆட்டோமேட்டிங் கனெக்டிவிட்டி கொடுக்கும்படி பிளிங்க்பேர் டெக்னாலஜி (BlinkPair Technology) கிடைக்கிறது. மல்டி டிவைஸ்களில் கனெக்ட் செய்து கொள்வதற்காக டூயல் பேரிங் (Dual Pairing) வருகிறது.

இந்த பேரிங் மூலம் ஒரே நேரத்தில் மொபைல் மற்றும் டேப்லெட் அல்லது லேப்டாப் போன்ற 2 டிவைஸ்களில் கனெக்ட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ப்ளூபங்க்ட் பிடபுள்யூ300 மோக்சா பிளஸ் மாடலில் ஸ்வெட் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன் கிடைக்கிறது. ஆகவே, வொர்க் அவுட் மற்றும் சைக்கிளிங் போன்ற ஆக்விட்டிகளின் போதும் பயன்படுத்த முடியும்.

இவ்வளவு பீச்சர்களை கொண்டிருந்தும், இந்த ப்ளூபங்க்ட் பிடபுள்யூ300 மோக்சா பிளஸ் மாடலின் விலை ரூ.1999ஆக மட்டுமே இருக்கிறது. இந்திய மார்கெட்டில் வெளியாகி விற்பனைக்கும் வந்துவிட்டது. அமேசான் (Amazon) மற்றும் ப்ளூபங்க்ட் ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். பட்ஜெட்டில் பக்கா இயர்பட்ஸ் வேண்டுமானால், இது டாப் ஆப்ஷனில் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Blaupunkt BTW300 Moksha Plus With LED Display Launched Under Rs 2000 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X