Home
Gadgets

அலறுது சவுண்ட்.. 100W பவர் ஸ்பீக்கர்.. வயர்லெஸ் மைக் இலவசம்.. Blaupunkt-ன் 2 ப்ளூடூத் Speaker மாடல் விலை என்ன?

ப்ளூபங்க்ட் (Blaupunkt) நிறுவனம் இந்தியாவில் அதன் பூம்பாக்ஸ் ஸ்பீக்கர் (Blaupunkt Boombox speaker) சீரிஸ் வரிசையில் புதிதாக இரண்டு ப்ளூடூத் பார்ட்டி ஸ்பீக்கர்களை (Bluetooth party speakers) அறிமுகம் செய்துள்ளது. இதில் ப்ளூபங்க்ட் அட்டாமிக் க்நைட்ஸ் (Blaupunkt Atomik Knightz) மற்றும் ப்ளூபங்க்ட் அட்டாமிக் BB60 (Blaupunkt Atomik BB60) என்ற ஸ்பீக்கர் மாடல்களை இலவச வயர்லெஸ் மைக் (Wireless MIC) உடன் மாஸாக அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ப்ளூபங்க்ட் ப்ளூடூத் ஸ்பீக்கர்களின் (Blaupunkt Bluetooth Speakers) விலை மற்றும் அம்சங்களின் விபரங்களை இப்போது பார்க்கலாம்.

அவுட்டோர் ட்ரிப் போறீங்களா? இல்லை பார்ட்டி பண்ண பிளான் பண்ணுறீங்களா? அப்போ கண்டிப்பா இந்த ப்ளூபங்க்ட் அட்டாமிக் க்நைட்ஸ் (Blaupunkt Atomik Knightz) ஸ்பீக்கர் சாதனத்தை நீங்கள் வாங்கியே ஆகணும். காரணம், இது 100W சக்தி கொண்ட சவுண்ட் அவுட்புட் (100W Sound Output) உடன் காதுகளை அலறவிடுகிறது. அளப்பறையாய் பார்ட்டி செய்து என்ஜாய் செய்ய இந்த ப்ளூபங்க்ட் அட்டாமிக் க்நைட்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் சிறந்த தேர்வாக அமைகிறது.

அலறுது சவுண்ட்.. 100W பவர் ஸ்பீக்கர்.. வயர்லெஸ் மைக் இலவசம்..

ப்ளூபங்க்ட் அட்டாமிக் க்நைட்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் (Blaupunkt Atomik Knightz Bluetooth Speaker):
ப்ளூபங்க்ட் அட்டாமிக் க்நைட்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் (Blaupunkt Atomik Knightz Bluetooth Speaker) சாதனம் பாஸ் பூஸ்ட் பட்டன் (Bass Boost Button) உடன் குவாட் டிரைவர்ஸ் (Quad Drivers) உடன் டூயல் பாஸ் ரேடியேட்டர் (Dual Bass Radiators) அம்சங்களை இந்த சாதனம் கொண்டுள்ளது. இது 9 வகையான லைட் மோட் (9 Light Modes) உடன் IPX6 ஸ்பிளாஷ் ப்ரூப் (IPX6 Splashproof) அம்சத்துடன் வருகிறது.

இது 15,600mAh பேட்டரி (Battery) உடன் 2 நாள் வரை நீடிக்கும் பேட்டரி ஆயுளை டர்போவோல்ட் குயிக் சார்ஜிங் (TurboVolt quick charging) அம்சத்துடன் வழங்குகிறது. இந்த பார்ட்டி ஸ்பீக்கர் (Party Speaker) ஷோல்டர் ஸ்ட்ராப் (Built-in Shoulder Strap) உடன் இலவச கரயோகி வயர்லெஸ் மைக் (Karaoke Wireless Mic) சாதனத்துடன் வழங்குகிறது.

ப்ளூபங்க்ட் அட்டாமிக் BB60 ப்ளூடூத் ஸ்பீக்கர் (Blaupunkt Atomik BB60 Bluetooth Speaker):
ப்ளூபங்க்ட் அட்டாமிக் BB60 ப்ளூடூத் ஸ்பீக்கர் (Blaupunkt Atomik BB60 Bluetooth Speaker) சாதனம் 60W சவுண்ட் அவுட்புட் உடன் டூயல் ஸ்பீக்கர் (dual speaker) மற்றும் ரேடியேட்டர் ஆதரவுடன் RGB லைட் அம்சத்துடன் வருகிறது. இது 6000mAh பேட்டரி உடன் 10 மணிநேர பிளேடைம் நேரத்தை வழங்குகிறது. இதிலும் உங்களுக்கு இலவச வயர்லெஸ் மைக் கிடைக்கிறது.

ப்ளூபங்க்ட் அட்டாமிக் க்நைட்ஸ் ஸ்பீக்கர் (Blaupunkt Atomik Knightz Bluetooth Speaker) விலை ரூ. 14,999 ஆகும். அதேபோல், ப்ளூபங்க்ட் அட்டாமிக் BB60 ப்ளூடூத் ஸ்பீக்கர் (Blaupunkt Atomik BB60 Bluetooth Speaker) விலை ரூ. 7,999 என்று கூறப்பட்டுள்ளது. இவை தற்போது Blaupunkt வலைத்தளம் மற்றும் ஆன்லைன் தளங்கள் வழியாக வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Blaupunkt Atomik Knightz and Blaupunkt Atomik BB60 Boombox Party Bluetooth Speakers Price and Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X