வீட்டுக்கு வீடு ஆர்டர்.. ரூ.25000 பட்ஜெட்ல 55 இன்ச் டிவி.. QLED டிஸ்பிளே.. டால்பி ஆடியோ.. 400+ டிவி சேனல்கள்!
பிளிப்கார்ட் தளத்தில் 55 இன்ச் ப்ளூபங்க்ட் கியூஎல்இடி டிவிக்கு (55 inch Blaupunkt QLED TV) தள்ளுபடி கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் கியூஎல்இடி டிஸ்பிளே போக டால்பி ஆடியோ, வாய்ஸ் அசிஸ்டன்ட், 400 டிவி சேனல்கள் போன்றவற்றை கொடுக்கிறது. ஜியோடெலி ஓஎஸ் கொண்ட இந்த ப்ளூபங்க்ட் கியூஎல்இடி டிவியின் முழு பீச்சர்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்கள் இதோ.
இந்த டிவியானது 34 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.26,999 பட்ஜெட்டில் வாங்க செய்ய கிடைக்கிறது. மேலும், ரூ.1,250 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.25,4999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஈஎம்ஐ வழியாக வாங்கினால், ரூ.2,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ரூ.25,000 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

ப்ளூபங்க்ட் 55 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Blaupunkt 55 inch QLED TV Specifications): இந்த டிவியில் 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. அல்ட்ரா எச்டி (Ultra HD) ரெசொலூஷன் கிடைக்கிறது. பெசல் லெஸ் டிசைனில் (Bezel Less Design) பிரீமியமாக இருக்கிறது.
ஜியோடெலி ஓஎஸ் (JioTele OS) மற்றும் அம்லாஜிக் சிப்செட் (Amlogic Chipset) கொடுக்கப்படுகிறது. இந்த டெலி ஓஎஸ் கிடைப்பதால், 3 மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) கிடைக்கிறது. 400+ லைவ் டிவி சேனல்கள் மற்றும் 300+ ஜியோகேம்ஸ் சலுகைகள் கிடைக்கிறது. இதை ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கேம்ஸ் (JioGames) ஆகிய ஆப்கள் மூலம் பயன்படுத்தி கொள்ளலாம்.
இதுபோக பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix) மற்றும் ஆப்பிள்டிவி (Apple TV) போன்ற ஓடிடி ஆப்களும் இன்-பில்ட்டாக கிடைக்கின்றன. மேலும், ஜியோஸ்டோர் (JioStore) வழியாக 200+ ஆப்களை அணுகி கொள்ளலாம். 2 ஜிபி ரேம் + 8 ஜிபி மெமரி சப்போர்ட் கொடுக்கிறது. இந்த ப்ளூபங்க்ட் 55 இன்ச் கியூஎல்இடி டிவிக்கு 48W சவுண்ட் அவுட்புட் கொடுக்கப்படுகிறது.
ஆகவே, 2 பாக்ஸ் ஸ்பீக்கர்களில் இந்த அவுட்புட் கிடைக்கும். சப்வூப்பர் கொடுக்கப்படவில்லை. இருப்பினும், டிஜிட்டல் நாய்ஸ் ஃபில்டர் (Digital Noise Filter) கிடைக்கிறது. மேலும், டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் ட்ரூசவுண்ட் (DTS Trusurround) சப்போர்ட் கிடைக்கிறது. சப்வூப்பர் இல்லையென்றாலும், டீப் மற்றும் பிக் பேஸ் அவுட்புட் கொடுக்க 2 பில்ட்-இன் பேக் டியூப்கள் கிடைக்கிறது.
ஆகவே, கியூஎல்இடி டிஸ்பிளேவுக்கு ஏற்ப ஆடியோ அவுட்புட் எதிர்பார்க்க முடிகிறது. இந்த ப்ளூபங்க்ட் 55 இன்ச் கியூஎல்இடி டிவிக்கு ஹலோ ஜியோ வாய்ஸ் அசிஸ்டன்ட் (Hello Jio Voice Assistant) கிடைக்கிறது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 10 இந்திய மொழிகளில் சப்போர்ட் கிடைக்கிறது. கேமிங் கன்ட்ரோல் கனெக்டிவிட்டி கிடைக்கிறது.
இதில் ப்ளூடூத் கன்ட்ரோலர், ப்ளூடூத் ஸ்பீக்கர், ப்ளூடூத் ஹெட்செட் மற்றும் ப்ளூடூத் கீபோர்ட் மற்றும் மவுஸ் கனெக்டிவிட்டி பெற்று கொள்ளலாம். 3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), 2 யுஎஸ்பி போர்ட் (USB Port) மற்றும் ஹெட்போன் ஜாக் (Headphone Jack) சப்போர்ட் உள்ளது. வை-பை, ப்ளூடூத் மற்றும் வயர்லெஸ் மிரரிங் கிடைக்கிறது. இதுவொரு 2025 எடிஷன் (BP55JQD0036) மாடலாகும்.


Click it and Unblock the Notifications








