ஆடிப்போகும் ஆஃபர்.. வெறும் ரூ.22,499 போதும்.. 50 இன்ச் QLED டிவி.. 4K வீடியோ.. DOLBY ஆடியோ.. எந்த மாடல்?
ரூ.25,000 பட்ஜெட்டை விட கம்மியான விலைக்கு 50 இன்ச் டிவி வாங்க திட்டம் போட்டவர்களுக்கு, 4K சப்போர்ட் கொண்ட கியூஎல்இடி டிஸ்பிளே, டால்பி அட்மோஸ் ஆடியோ, 60W ஸ்பீக்கர்கள் போன்ற பிரம்மாண்ட அம்சங்களை கொண்ட ப்ளூபங்க்ட் டிவி ஆஃபரில் விற்பனைக்கு வந்துள்ளது.
ப்ளூபங்க்ட் 50 இன்ச் கியூஎல்இடி அம்சங்கள் (Blaupunkt 50 Inch QLED TV Specification): இந்த டிவி 50 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவொரு 4K அல்ட்ரா எச்டி (Ultra HD) மாடலாகும். ஆகவே, வீடியோ குவாலிட்டி கிரிஸ்டல் கிளியர் தரத்தில் இருக்கும். அதோடு 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 178 வியூ ஆங்கிள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிவியின் ஆடியோ அம்சங்களும் தரமாகவே வருகின்றன. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டிடிஎஸ் (DTS) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதோடு 60W அவுட்புட் கொண்ட 4 ஸ்பீக்கர்கள் வருகின்றன. அதுமட்டுமல்லாமல், சைபர்சவுண்ட் ஜென் 2 டெக்னாலஜி (CyberSound Gen 2 Technology) மற்றும் 3டி ஆடியோ சப்போர்ட் கொண்டுள்ளது. இது மியூசிக் பிரியர்களை எளிதில் கவருக்கூடிய வகையில் சிறந்த ஆடியோ அவுட்புட் கொடுக்கக்கூடியது. இந்த டிவியில் மூன்று எச்டிஎம்ஐ (HDMI), 2 யுஎஸ்பி (USB) மற்றும் ஆர்எஃப் இன்புட் (RF Input) ஆகிய கனெக்டிவிட்டி வருகிறது.
அதோடு பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth) மற்றும் ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொபைல் (Mobile), லேப்டாப் (Laptop) மற்றும் பிசி (PC) ஆகியவற்றுடன் கனெக்ட் செய்துகொள்ள முடியும். இந்த ப்ளூபங்க்ட் 50 இன்ச் கியூஎல்இடி டிவியானது, கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்டுள்ளது.

ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் வருகிறது. இதன் மூலம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (YouTube), அமேசான் பிரைம் (Amazon Prime) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் மற்றும் கேமிங் ஆப்களை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இந்த டிவி பெசல்-லெஸ் டிசைன் (Bezel-less Design) கொண்டுள்ளது. இந்த ப்ளூபங்க்ட் 50 இன்ச் கியூஎல்இடி டிவியில் 1 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி வருகிறது. இதற்கு ஸ்மார்ட் ரிமோட் (Smart Remote) கன்ட்ரோல் வருகிறது. வால் மவுண்ட் மற்றும் டேபிள் டாப் ஸ்டான்ட் டைப் கொண்டிருக்கிறது. இந்த டிவிக்கு 1 வருட வாரண்டி வழங்கப்படுகிறது.
அதேபோல 6 மாதங்களுக்கான அசசரிஸ் வாரண்டி கிடைக்கிறது. இந்த ப்ளூபங்க்ட் 50 இன்ச் கியூஎல்இடி டிவி 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட 50QD7010 மாடலாகும். பிளாக் (Black) கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது. இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த டிவியின் விலை ரூ.26,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது, இந்த விலையில் பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுடி வழங்கப்படுகிறது.

எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.2,500 உடனடி தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. அதோடு ரூ.2,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த இந்த ப்ளூபங்க்ட் 50 இன்ச் கியூஎல்இடி டிவியை வெறும் ரூ.22,499க்கு வாங்கிக்கொள்ளலாம். கம்மியான பட்ஜெட்டில் 50 இன்ச் கியூஎல்இடி 4K டிவி வேண்டும் என்றால், இந்த டிவியை லிஸ்டில் வைத்துக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications