அதிருது இந்திய மார்க்கெட்.. JioTele ஓஎஸ்.. 36W ஸ்பீக்கர்கள்.. மலிவு விலையில் QLED டிவி அறிமுகம்.. எந்த மாடல்?
ப்ளூபங்க்ட் (Blaupunkt) நிறுவனம் இந்தியாவில் புதிய 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஜியோடெலி ஓஎஸ் (JioTele OS) கொண்ட 32 ஸ்மார்ட் டிவி தான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் இந்த டிவி மலிவு விலையில் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவியின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ப்ளூபங்க்ட் 32 இன்ச் ஜியோடெலி ஓஎஸ் ஸ்மார்ட் டிவி அம்சங்கள் ( Blaupunkt 32 inch JioTele OS smart TV specifications): எச்டி ரெடி QLED டிஸ்பிளே உடன் இந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் எச்டிஆர் சப்போர்ட், 350 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் ப்ளூபங்க்ட் 32 இன்ச் ஜியோடெலி ஓஎஸ் ஸ்மார்ட் டிவி மாடல் பெசல்-லெஸ் டிசைன் (Bezel-Less Design) கொண்டுள்ளது. பின்பு இந்த டிவி சக்திவாய்ந்த ஆம்லாஜிக் பிராஸசர் (Amlogic processor) உடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராஸசர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதி கொண்டுள்ளது ப்ளூபங்க்ட் 32 இன்ச் ஜியோடெலி ஓஎஸ் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் ஜியோடெலி ஓஎஸ் மூலம் இந்த புதிய டிவி இயங்குகிறது. குறிப்பாக ஜியோ ஸ்டோர் மூலம் இந்த ஸ்மார்ட் டிவயில் 400க்கும் மேற்பட்ட OTT ஆப்கள், 400 லைவ் டிவி சேனல்கள், 300க்கும் மேற்பட்ட ஜியோ கேம்ஸ் என அனைத்தையும் பயன்படுத்த முடியும். மேம்பட்ட ஏஐ அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன.
வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் ரிமோட் உடன் ப்ளூபங்க்ட் 32 இன்ச் ஜியோடெலி ஓஎஸ் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. நெட்பிளிக்ஸ், யூடியூப், ஜியோசினிமா மற்றும் ஹாட்ஸ்டார் ஆகியவற்றிற்கான பிரத்யேக பட்டன்கள் இந்த ஸமார்ட் ரிமோட்டில் உள்ளன. மேலும் இந்த டிவி இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, பெங்காலி, கன்னடம் மற்றும் குஜராத்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் குரல் தேடலை ஆதரிக்கிறது.
ப்ளூபங்க்ட் 32 இன்ச் ஜியோடெலி ஓஎஸ் ஸ்மார்ட் டிவி ஆனது 36W ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் வெளிவந்துள்ளது. ஆகவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் ஸ்டாண்டர்ட், ஸ்போர்ட், மூவி மற்றும் மியூசிக் உள்ளிட்ட பல ஆடியோ அம்சங்கள் இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவியில் உள்ளன.
குறிப்பாக இந்த ப்ளூபங்க்ட் 32 இன்ச் ஜியோடெலி ஓஎஸ் ஸ்மார்ட் டிவி மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ப்ளூபங்க்ட் நிறுவனம். மேலும் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன.
ப்ளூபங்க்ட் 32 இன்ச் ஜியோடெலி ஓஎஸ் ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.9,699-ஆக உள்ளது. ஜனவரி 22 முதல் இந்த டிவி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி மலிவு விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








