Home
Gadgets

ரேட்டுனா இதுதான் ரேட்.. 65 இன்ச் டிவி.. QLED டிஸ்பிளே.. 70W ஆடியோ.. 4 ஸ்பீக்கர்.. டால்பி அட்மோஸ்.. எந்த டிவி?

கியூஎல்இடி டிவி மாடல்களானது எல்சிடி மற்றும் எல்இடி டிவிகளைவிட எப்போதும் விலை அதிகமாக இருக்கும். அதுவும் 55 இன்ச் அல்லது 65 இன்ச் டிவி என்றால், ரூ.60,000 கம்மியாக கிடைப்பது குதிரைக்கொம்பாகவே இருக்கும். ஆனால், ப்ளூபங்க்ட் நிறுவனம், 65 இன்ச் கியூஎல்இடி டிவியை நம்ப முடியாத பட்ஜெட்டில் களமிறக்கி இருக்கிறது. இதுபோக 70W ஆடியோ, டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி டிஜிட்டல் பிளஸ் போன்ற பிரீமியம் பீச்சர்களை வாரி வழங்கி இருக்கிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

ப்ளூபங்க்ட் 2025 புது எடிஷன் (Blaupunkt 2025 New Edition) மாடல்கள் இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன. இதில் 4K ரெசொலூஷனுடன் 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் டிவிகள் கியூஎல்இடி டிஸ்பிளே மாடல்கள் வருகின்றன. அதேபோல எச்டி ரெடி ரெசொலூஷன் கொண்ட 32 இன்ச் கியூஎல்இடி டிவி, ஃபுல்எச்டி ரெசொலூஷன் கொண்ட 40 இன்ச் கியூஎல்இடி டிவி வந்துள்ளது.

ரேட்டுனா இதுதான் ரேட்.. 65 இன்ச் டிவி.. QLED டிஸ்பிளே.. 70W ஆடியோ!

ப்ளூபங்க்ட் 2025 புது எடிஷன் 4K கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Blaupunkt 2025 New Edition 4K QLED TV Specifications): இந்த எடிஷனில் 55 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் டிஸ்பிளே கொண்ட மாடல்கள் வருகின்றன. எச்டிஆர்10 (HDR10), வைடு கலர் காமட் (Wide Color Gamut) கிடைக்கிறது. இதில் 55 இன்ச் மற்றும் 65 இன்ச் மாடல்களில் 70W ஆடியோ அவுட்புட் கிடைக்கிறது.

4 ஸ்பீக்கர்கள் பேக் செய்துள்ளது. 50 இன்ச் மாடலில் 50W ஆடியோ கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, டிஸ்பிளே மற்றும் ஆடியோ அவுட்புட் பிரீமியமாக எதிர்பார்க்கலாம். ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் (Android TV OS) கிடைக்கிறது. வழக்கமான கூகுள் டிவி பீச்சர்களை கொடுக்கிறது.

ஆகவே, பிளே ஸ்டோர் (Play Store), கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), குரோம்காஸ்ட் (Chromecast) மற்றும் கூகுள் ஆப்கள் கிடைக்கின்றன. குவாட் கோர் ஏஐ பிகியூ (Quad Core AI PQ) சிப்செட் கிடைக்கிறது. இதுபோக வை-பை (Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth) போன்ற வயர்லெஸ் மற்றும் எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி (USB), ஏவி (AV) போன்ற வயர்டு கனெக்டிவிட்டி பீச்சர்களும் கிடைக்கின்றன.

ப்ளூபங்க்ட் 2025 புது எடிஷன் எச்டி கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Blaupunkt 2025 New Edition HD QLED TV Specifications): பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்ற பீச்சர்களுடன் 32 இன்ச் மற்றும் 40 இன்ச் மாடல்கள் கிடைக்கிறது. 32 இன்ச் டிவியில் எச்டி ரெடி ரெசொலூஷன், 40 இன்ச் டிவியில் ஃபுல்எச்டி ரெசொலூஷன் வகுகிறது. 48W ஆடியோ அவுட் மற்றும் டால்பி டிஜிட்டல் பிளஸ் சப்போர்ட் கிடைக்கிறது.

முந்தைய மாடல்களில் பார்த்த ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ், கூகுள் பீச்சர்கள் மற்றும் ஆப்கள் கிடைக்கின்றன. அதேபோல யுஎஸ்பி, எச்டிஎம்ஐ, வை-பை, ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டிகள் வருகின்றன. மேலும், டைட்டானியம் கிரே கலரில் கிடைக்க இருக்கிறது. பெசல்-லெஸ் டிசைனில் வாங்கி கொள்ளலாம். இப்போது, இந்த டிவிகளின் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

32 இன்ச் மாடலின் விலை ரூ.10,999ஆகவும், 40 இன்ச் மாடலின் விலை ரூ.15,499ஆகவும் இருக்கிறது. 50 இன்ச் மாடலின் விலை ரூ.27,999ஆகவும், 55 இன்ச் மாடலின் விலை ரூ.31,999ஆகவும் இருக்கிறது. டாப் எண்ட் மாடலான 65 இன்ச் டிவியின் விலை ரூ.44,999ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் புக்கிங் செய்ய கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் கியூஎல்இடி டிவி வரவேற்கத் தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Blaupunkt 2025 New Edition QLED TVs Launched With 50 To 65 inch Display Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X