Home
Gadgets

ஆரம்ப விலை ரூ.13,999.. Black Decker அறிமுகம் செய்த புதிய 4K ஸ்மார்ட் டிவிகள்.. என்னென்ன அம்சங்கள்?

இந்தியாவில் பிளாக் +டெக்கர் (Black+Decker) நிறுவனம் தனது முதல் 4கே கூகுள் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. மேலும் குறிப்பாக Indkal Technologies எனும் நிறுவனத்துடன் இணைந்து பிளாக் +டெக்கர் நிறுவனம் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஃபிரேம்லெஸ் டிசைன் உடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளது.

அதுவும் 32 இன்ச், 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச், 65 இன்ச் என ஐந்து அளவுகளில் பிளாக் +டெக்கர் ஏ1 சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள் (Black+Decker A1 Series Google TV) வெளிவந்துள்ளன. இதில் 32 இன்ச் மாடல் மட்டும் ஃபுல் எச்டி டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. மற்ற அனைத்து டிவிகளும் 4கே ஆதரவைக் கொண்டுள்ளன. இப்போது இந்த புதிய டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஆரம்ப விலை ரூ.13,999.. Black Decker அறிமுகம் செய்த புதிய 4K டிவிகள்..

பிளாக் +டெக்கர் ஏ1 சீரிஸ் 4கே கூகுள் டிவி அம்சங்கள் (black+decker a1 series 4k google tv Specifications): 3840 x 216 0பிக்சல் ரெசல்யூஷன் ஆதரவை வழங்குகின்றன இந்த புதிய டிவிகள். மேலும் எச்டிஆர் 10, எச்எல்ஜி, டால்பி விஷன், 4K அப்ஸ்கேலிங் (4K Upscaling) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளன இந்த புதிய டிவிகள். குறிப்பாக இந்த டிவிகள் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள். பின்பு மைக்ரோ டிம்மிங் டெக்னாலஜி (Micro Dimming Technology), 120 ஹெர்ட்ஸ் வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (Variable Refresh Rate) போன்ற தரமான அம்சங்களுடன் இந்த பிளாக் +டெக்கர் ஏ1 சீரிஸ் டிவிகள் வெளிவந்துள்ளன.

மேலும் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த டிவி இயங்குகிறது. ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.

கார்டெக்ஸ் ஏ75 பிளஸ், கார்டெக்ஸ் ஏ55 கோர்களுடன் சேர்ந்த DynamIQ Dual AI பிராசஸர் உடன் இந்த புதிய பிளாக் +டெக்கர் ஏ1 சீரிஸ் 4கே கூகுள் டிவிகள் இயங்குகின்றன. குறிப்பாக இந்த டிவிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த டிவிகளுக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

ஆரம்ப விலை ரூ.13,999.. Black Decker அறிமுகம் செய்த புதிய 4K டிவிகள்..

டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவைக் கொண்ட 36W சவுண்ட் அவுட்புட் இந்த டிவிகள் வழங்கும். மேலும் டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.2, எச்டிஎம்ஐ 2.1 போர்ட், யுஎஸ்பி 3.0 மற்றும் யுஎஸ்பி 2.0 போர்ட்கள், ஏவி இன்புட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய பிளாக் +டெக்கர் ஏ1 சீரிஸ் 4கே கூகுள் டிவிகளில் உள்ளன.

பிளாக் +டெக்கர் ஏ1 சீரிஸ் 32-இன்ச் டிவியின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. பின்பு இதன் 43-இன்ச் மாடலை ரூ.25,999 விலையிலும், 50-இன்ச் மாடலை ரூ.31,999 விலையிலும், 55-இன்ச் மாடலை ரூ.36,999 விலையிலும், 65-இன்ச் மாடலை ரூ.52,999 விலையிலும் வாங்க முடியும். இந்தியா முழுவதும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் Black+Decker A1 சீரிஸ் கூகுள் டிவி வாங்க கிடைக்கும்.

photo credit: blackdecker, smartprix

More from GizBot

Best Mobiles in India

English summary
black decker a1 series 4k google tv series launched in india: check specifications price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X