50-இன்ச், 55-இன்ச் TV-லாம் கொஞ்சம் ஓரம்போ.. Redmi-யின் 86-இன்ச் டிவி அறிமுகம்! என்ன விலை?

|

ரெட்மி நிறுவனம் புதிய 86-இன்ச் ஸ்கிரீன் கொண்ட ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்86 (Redmi Smart TV X86) மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக நாம் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி.

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்86

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்86

ஆனால் இப்போது ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்86 ஆனது சீனாவில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இந்த 86-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது அல்ட்ரா-க்ளியர் ஸ்க்ரீன், மெட்டல் பாடி, ஃபுல்-ஸ்கிரீன் டிசைன் போன்றவற்றின் மூலம் ஒரு தியேட்டர் அனுபவத்தை கொடுக்கிறது என்றே கூறலாம்.

டிக்கெட்டே விற்கலாம் போல: தியேட்டர் தர அனுபவம்., அட்டகாச சோனி 4கே அல்ட்ரா எச்டி பிராவ்யா ஸ்மார்ட்டிவி அறிமுகம்.டிக்கெட்டே விற்கலாம் போல: தியேட்டர் தர அனுபவம்., அட்டகாச சோனி 4கே அல்ட்ரா எச்டி பிராவ்யா ஸ்மார்ட்டிவி அறிமுகம்.

தெளிவாகப் பார்க்க முடியும்

தெளிவாகப் பார்க்க முடியும்

அதேபோல் 4K அல்ட்ரா-ஹை-டெபினிஷனில் 1 பில்லியன் கலர் ட்ரூ டோன் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இதன் மூலம் காட்சிகளை மிகவும் தெளிவாகப் பார்க்க முடியும். மேலும் DTS-HD ஆதரவு கொண்ட ஸ்பீக்கர்கள் உடன் இந்த ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?

60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

86-இன்ச் டிஸ்பிளே கொண்ட ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்86 மாடல் ஆனது 3840×2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4கே ஆதரவு, MEMC Motion technology உள்ளிட்ட தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..

குவாட்-கோர் பிராசஸர்

குவாட்-கோர் பிராசஸர்

புதிய 86-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்86 மாடலில் கார்டெக்ஸ் ஏ55 குவாட்-கோர் பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் எச்டிஆர் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்.

Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..

தியேட்டர் அனுபவம்

தியேட்டர் அனுபவம்

குறிப்பாக DTS மற்றும் HD ஆதரவு கொண்ட 2 x 10W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த 86-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி. எனவே ஒரு தியேட்டர் அனுபவம் கிடைக்கும் என்றே கூறலாம். அதேபோல் MIUI TV OS மூலம் இயங்குகிறது இந்த அட்டகாசமான ரெட்மி 86-இன்ச் ஸ்மார்ட் டிவி.

உங்க போன் ரொம்ப ஹேங் ஆகிறதா? இல்ல மெதுவா இயங்குகிறதா? அப்போ உடனே 'இதை' செய்யணும்..உங்க போன் ரொம்ப ஹேங் ஆகிறதா? இல்ல மெதுவா இயங்குகிறதா? அப்போ உடனே 'இதை' செய்யணும்..

16ஜிபி ஸ்டோரேஜ்

மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. எனவே நீங்கள் நினைத்த செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

18வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு: சைக்கிள் கவுன்டர் கருவி- பெட்ரோல் விலை உயர்ந்தா சைக்கிள் ஓட்டுவோம்!18வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு: சைக்கிள் கவுன்டர் கருவி- பெட்ரோல் விலை உயர்ந்தா சைக்கிள் ஓட்டுவோம்!

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

2 யுஎஸ்பி போர்ட், 2 எச்டிஎம்ஐ போர்ட், AV: 1, ATV/DTMB: ​​1, S/PDIF: 1, ஈதர்நெட், டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, Infrared போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி.

பாதுகாப்பாக இருக்க சிறந்த செயலி: பெண்களுக்கு மிக அவசியம்- டிராக், எஸ்ஓஎஸ், டேட்டா, பேட்டரி பாதுகாப்பு!பாதுகாப்பாக இருக்க சிறந்த செயலி: பெண்களுக்கு மிக அவசியம்- டிராக், எஸ்ஓஎஸ், டேட்டா, பேட்டரி பாதுகாப்பு!

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்86 விலை

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்86 விலை

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்86 மாடலின் விலை 5,299 yuan (இந்திய மதிப்பில் ரூ.56,822) ஆக உள்ளது. மேலும் இதன் விற்பனை அக்டோபர் 31-ம் தேதி அன்று தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவி விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Big Screen Lovers Skip 50 inch 55 inch TV Models Because Redmi introduced 86 inch Smart TV Check Price: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X