வீட்டுல இருக்குற எல்லோருக்கும் 1 வாங்கும் விலையில் அறிமுகமான Noise இயர்பட்ஸ்!
சூப்பர்-பட்ஜெட் விலையில்.. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரூ.1,500 க்குள் என்கிற பட்ஜெட்டில்.. ஒரு நல்ல டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸை வாங்க வேண்டும் என்கிற தேடலில் உள்ளீர்களா? ஆம் என்றால், இன்றோடு உங்கள் தேடல் முடிந்து விட்டது என்றே வைத்து கொள்ளுங்கள்!
ஏனென்றால் பிரபல ஆடியோ தயாரிப்பு நிறுவனமான நாய்ஸ் (Noise), நம்ப முடியாத விலைக்கு அதன் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

அதென்ன இயர்பட்ஸ்? அதன் விலை நிர்ணயம் என்ன? அதன் சிறப்பம்சங்கள் என்ன? அது எந்த இகாமர்ஸ் வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும்? இதோ விவரங்கள்:
நாய்ஸ் பட்ஸ் கனெக்ட்!
நாய்ஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் இயர்பட்ஸ் ஆக நாய்ஸ் பட்ஸ் கனெக்ட் (Noise Buds Connect) அறிமுகமாகி உள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி இதுவொரு டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் (TWS Earbuds) ஆகும். அதாவது ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் (True Wireless Stereo Earbuds) ஆகும்.
நாய்ஸ் பட்ஸ் கனெக்ட் இயர்பட்ஸின் விலை என்ன?
இந்தியாவில் நாய்ஸ் பட்ஸ் கனெக்ட் இயர்பட்ஸ் ரூ.1,299 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கார்பன் பிளாக், மின்ட் க்ரீன் மற்றும் ஐவரி ஒயிட் என மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்.
நாய்ஸ் பட்ஸ் கனெக்ட் இயர்பட்ஸின் எதன் வழியாக வாங்க கிடைக்கும்?
விருப்பமுள்ளவர்கள் நாய்ஸ் நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் வயர்லெஸ் இயர்பட்ஸை, நாய்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (Noise Website) வழியாக வாங்கலாம் அல்லது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா (Amazon India) வழியாகவும் கூட வாங்கலாம்!
நாய்ஸ் பட்ஸ் கனெக்ட் இயர்பட்ஸின் அம்சங்கள்:
லைட் வெயிட் டிசைனை, அதாவது மிகவும் இலகுவான வடிவமைப்பை பெற்றுள்ள நாய்ஸ் பட்ஸ் கனெக்ட் இயர்பர்ஸ் ப்ளூடூத் வெர்ஷன் 5.2-ஐ ஆதரிக்கின்றன.
இந்த இயர்பட்ஸ் இஎன்சி (Environmental Noise Cancellation - ENC) ஆதரவுடனான குவாட் மைக்குடன் (Quad Mic) வருகிறது. அதாவது இந்த இயர்பட்ஸ் வழியாக நடக்கும் போன் கால்களின் தேவையற்ற சுற்றுப்புற சத்தங்கள் அகற்றப்படும்.
மேலும் இந்த இயர்பட்ஸ் ஐபிஎக்ஸ்5 (IPX5) மதிப்பீட்டுடன் வருகின்றன; அதாவது இந்த இயர்பட்ஸ் வியர்வை மற்றும் நீரை எதிர்க்கும் திறனை கொண்டுள்ளது.
சார்ஜிங்கை பொறுத்தவரை, இந்த வயர்லெஸ் இயர்பட்ஸை ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணிநேரம் வரை மியூசிக் பிளேபேக்கை வழங்கும்.
அதுமட்டுமின்றி, இந்த இயர்பட்ஸில் உள்ள இன்ஸ்டாசார்ஜ் (Instacharge) சப்போர்ட்டால் வெறும் 10 நிமிட சார்ஜில் 120 நிமிட மியூசிக் பிளேபேக்கை வழங்க முடியும்.
ரக்டு வாட்ச் வேண்டுமா? அதுவும் இருக்கு!
சமீபத்தில், நாய்ஸ் நிறுவனம் அதன் புதிய ரக்டு ஸ்மார்ட்வாட்ச் (Rugged Smart Watch) ஒன்றையும் இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. அது நாய்ஸ் ஃபிட் ஃபோர்ஸ் (NoiseFit Force) ஸ்மார்ட் வாட்ச் ஆகும்.
ரூ.2,499 க்கு வாங்க கிடைக்கும் நாய்ஸ் ஃபிட் ஃபோர்ஸ் ஸ்மார்ட் வாட்ச், இம்பாக்ட்-ரெசிஸ்டென்ட் வடிவமைப்புடன் (Impact-resistant design) வருகிறது மற்றும் இந்த ரக்டு ஸ்மார்ட் வாட்ச்சை ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரையிலான பேட்டரி பேக்கப்பும் கிடைக்கும்!


Click it and Unblock the Notifications