சிங்கிள் சார்ஜில் 240 நிமிடங்கள் ஓடும் ட்ரிம்மர்! அதுவும் வெறும் ரூ.999-க்கு!
ஒரு ட்ரிம்மர், சிங்கிள் சார்ஜில் 240 நிமிடங்கள் என்கிற ரன் டைம்-ஐ வழங்குகிறது என்றால்.. அதுவும் ரூ.1000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாட்டர் ப்ரூப் திறனுடன் வருகிறது என்றால்.. அதை எப்படி உங்ககிட்ட ஷேர் பண்ணாம இருக்க முடியும்?
அதென்ன ட்ரிம்மர்? நல்ல பிராண்ட்-ஆ? நம்பி வாங்கலாமா? 240 நிமிடங்கள் ரன் டைம் மற்றும் வாட்டர் ப்ரூப் திறனை தவிர்த்து, இந்த ட்ரிம்மர் வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

நம்பி வாங்கலாமா? என்கிற கேள்விக்கே இடமில்லை!
ஏனெனில், இது Realme Techlife-இன் Dizo நிறுவனத்தின் ட்ரிம்மர் ஆகும்! அறியாதோருக்கு டிஸோ என்பது ரியல்மியின் துணை நிறுவனம் ஆகும்.
டிஸோ பிராண்டின் கீழ் ஆடியோ தயாரிப்புகள், மொபைல் போன்கள், வாட்ச் மற்றும் பெர்சனல் கேர் தயாரிப்புகள் வாங்க கிடைக்கிறது.

அந்த பட்டியலில் 4-in1 Dizo Trimmer Kit சேர்ந்துள்ளது!
டிஸோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் தயாரிப்பாக டிஸோ ட்ரிம்மர் கிட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Dizo Trimmer Kit ஆனது ஒரு 4-in-1 க்ரூமிங் மற்றும் ஸ்டைலிங் டிவைஸ் ஆகும்.
240 நிமிடங்கள் வரை "இயக்க நேரத்தை" வழங்கும் இந்த 4-இன்-1 மல்டி-க்ரூமிங் கிட் ஆனது நம்ப முடியாத மற்றும் விலையை மீறிய பல அம்சங்களை கொண்டுள்ளது.

பல அளவுகளில் ட்ரிம் செய்யலாம்!
டிஸோ டிம்மர் கிட் ஆனது 0.5 மிமீ உட்பட மொத்தம் 40 லெங்த் (Length) விருப்பங்களுடன் வருகிறது. அதாவது வாடிக்கையாளர்ககள் தங்களுக்கு விருப்பமான நீளத்திற்கு மீசை மற்றும் தாடியை ட்ரிம் செய்துகொள்ள முடியும்.
மேலும் இதை பயன்படுத்துவதும் மிகவும் எளிது என்பதால், டிஸோ ட்ரிம்மரை டீன் ஏஜ் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் என யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்!

துரு பிடிக்கும் என்கிற பயமே வேண்டாம்!
ஏனெனில், இந்த DIZO டிரிம்மர் கிட்டில் கிரேடு 420 துருப்பிடிக்காத எஃகு பிளேட்ஸ் உள்ளன.
தாடி மற்றும் மீசையை தவிர்த்து இந்த டிஸோ ட்ரிம்மர் மூலம் தலை, காது மற்றும் மூக்கு உள்ளிட்ட உடல் முடிகளையும் சீர் செய்ய முடியும்.

பெரிய பேட்டரி.. நீளமான ரன் டைம்!
டிசோ டிரிம்மர் கிட் ஆனது 1,300எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது, நிறுவனத்தின் கூற்றுப்படி, இது 240 நிமிடங்கள் வரையிலான இயக்க நேரத்தை வழங்கும்.
இதை 100% சார்ஜ் செய்த பின், வாரத்திற்கு இரண்டு முறை என, ஒரு ட்ரிம்மிங் செஷனுக்கு 10 நிமிடங்கள் என இதை பயன்படுத்தினால், டிஸோ ட்ரிம்மர் கிட் ஆனது மூன்று மாதங்களுக்கு இயங்கும்.
இது டைப்-சி சார்ஜிங்கை ஆதரிக்கிறது, ஆக இதை எந்தவொரு ஸ்மார்ட்போன் சார்ஜரை கொண்டும் சார்ஜ் செய்யலாம்.

எல்இடி லைட்டின் அர்த்தங்கள்!
டிஸோ ட்ரிம்மர் கிட் ஆனது ஒரு எல்இடி இன்டிகேட்டர் வழியாக பேட்டரி சதவீதத்தை காட்டுகிறது.
உதாரணமாக, பச்சை நிறத்தில் இருக்கும் போது, பேட்டரி 40 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை இருக்கிறது என்று அர்த்தம்.

பேட்டரி குறைவாக இருந்தால்?
ஆரஞ்சு நிற குறியீடானது 20 சதவீதம் - 40 சதவீதம் பேட்டரியைக் குறிக்கிறது. சிவப்பு என்றால் அதில் 10 சதவீதம் - 20 சதவீதம் மட்டுமே பேட்டரி உள்ளது என்று அர்த்தம்.
இதன் எல்இடி இண்டிகேட்டர் ஆனது சிவப்பு நிறத்தில் மூன்று முறை ஒளிர தொடங்கினால், அது 10% க்கும் குறைவான பேட்டரியை கொண்டுள்ளது என்று அர்த்தம். ஒளிர்வதை நிறுத்தினால், பேட்டரி இல்லை என்று அர்த்தம்.

Travel Lock போன்ற ஸ்மார்ட் அம்சங்களும் அடக்கம்!
இந்த டிஸோ டிரிம்மர் கிட் ஆனது டிராவல் லாக் போன்ற ஸ்மார்ட் செயல்பாடுகளை வழங்குகிறது. பவர் பட்டனை 3-வினாடிகளுக்கு அழுத்துவதன் மூலம் டிரிம்மரை எளிதாக இயக்கலாம் / முடக்கலாம்.
டிராவல் லாக் செய்யப்பட்டு இருக்கும் போது "எந்தவொரு வெளிப்புற சக்தியின்" காரணமாகவும் அது தற்செயலாக ஆன் (ON) ஆகாது!

தண்ணீரில் கழுவலாம்!
இதில் ஆட்டோ ஸ்விட்ச் ஆஃப் எனப்படும் மற்றொரு அம்சமும் உள்ளது. இது தற்செயலாக ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்ட 10 நிமிடங்களுக்கு பிறகு தானாகவே டிரிம்மரை ஆஃப் (OFF) செய்யும்.
கடைசியாக, இந்த டிரிம்மர் ஐபிஎக்ஸ்5 மதிப்பீட்டை பெற்றுள்ளது. ஆக தண்ணீரை பயன்படுத்தி இதை நீங்கள் வாஷ் செய்யலாம்!

விலை மற்றும் விற்பனை:
டிஸோ ட்ரிம்மர் கிட் (Dizo Trimmer Kit) ஆனது இன்று முதல், அதாவது ஆகஸ்ட் 23 ஆம் தேதி மதியம் 12:00 மணி முதல் பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான Flipkart வழியாக வாங்க கிடைக்கும்.
முன்னரே குறிப்பிட்டபடி, இதன் விலை ரூ.999 ஆகும். ஆனால் இதுவொரு அறிமுக விலை நிர்ணயம் ஆகும்; அதாவது சிறிது காலம் கழித்து இதன் விலை அதிகரிக்கப்படலாம் என்று அர்த்தம். இது கருப்பு நிறத்தில் மட்டுமே வெளியாகி உள்ளது!


Click it and Unblock the Notifications