கண்ண மூடிக்கிட்டு இந்த Washing Machine-ஐ வாங்கலாம்! வெறும் ரூ.10000-க்கு செமி ஆட்டோமேட்டிக், டாப் லோடிங்!
உங்களில் சிலர் மட்டுமே "என்னது வெறும் ரூ.10,000 க்கு வாஷிங் மெஷி-ஆ!" என்று ஷாக் ஆவீர்கள். மீதமுள்ள அனைவருமே "ரூ.10,000 க்கும் குறைவான விலையில் கிடைக்கும் வாஷிங் மெஷின்களை (Washing Machines Under Rs.10000) எல்லாம் நம்பி வாங்கலாமா? என்கிற சந்தேகத்தையே எழுப்புவார்கள்!
அந்த சந்தேகத்திற்கான விடையோடு சேர்த்து.. இப்போதைக்கு (டிசம்பர் 2023) இந்திய சந்தையில் ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் 8 பெஸ்ட் வாஷிங் மெஷின்களின் (Top Washing Machines) பட்டியலையும், அவற்றின் விலை நிர்ணயம் மற்றும் முக்கிய அம்சங்களை பற்றியும் பார்த்து விடலாம்.

மலிவான விலையில் கிடைக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக ரூ.10,000 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படும் வாஷிங் மெஷின்களை கண்களை மூடிக்கொண்டு புறக்கணிப்பது புத்திசாலித்தனம் அல்ல. உங்களுக்கு சரியாக என்ன தேவை என்பதை புரிந்துகொண்டாலே பட்ஜெட்-விலையில் ஒரு நல்ல வாஷிங் மெஷின்களை வாங்கி விடலாம்.
பெரும்பாலும் ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் மாடல்கள் சுமார் 6 - 7 கிலோ கெப்பாசிட்டி கொண்டதாகவும், சிறிய வீடுகள் அல்லது தனிநபர்களுக்கு ஏற்றதாக இருக்கும். மேலும் இவைகள் ஸ்டாண்டர்ட் வாஷ் புரோகிராம்கள் மற்றும் பேஸிக் ஆன அம்சங்களை மட்டுமே கொண்டிருக்கும். அதாவது ஹை-எண்ட் (அதிக விலை) மாடல்களில் காணப்படும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் இதில் இல்லாமல் போகலாம்.

ஒட்டுமொத்தமாக "விலைக்கு ஏற்ற அம்சங்கள் தான் கிடைக்கும்!" என்கிற எதார்த்தத்தை ஏற்றுக்கொண்ட எவரும் ரூ.10,000 க்குள் கிடைக்கும் வாஷிங் மெஷின்களை நம்பி வாங்கலாம். அதெல்லாம் சரி.. எந்த நிறுவனத்தின் வாஷிங் மெஷினை வாங்குவது என்று தெரியவில்லையா? கவலை வேண்டாம்! கீழ்வரும் 8 பெஸ்ட் பட்ஜெட் விலை மாடல்களில் ஒன்றை தேர்வு செய்யவும்.
01. வேர்ல்பூல் 7 கிலோ சூப்பர்ப் ஆட்டம் வாஷிங் மெஷின் (Whirlpool 7Kg Superb Atom Washing Machine): 5 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங் மற்றும் டர்போஸ்க்ரப் தொழில்நுட்பத்துடன் (TurboScrub Technology) வரும் இந்த வேர்ல்பூல் மாடல் ஒரு செமி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் (Semi Automatic Top Loading) வாஷிங் மெஷினாகும்.

02. வேர்ல்பூல் 6 கிலோ சூப்பர்ப் ஆட்டம் வாஷிங் மெஷின் (Whirlpool 6Kg Superb Atom Washing Machine): இது மேற்கண்ட 7கிலோ மாடலின் 6கிலோ வேரியண்ட் ஆகும். 5 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங் மற்றும் டர்போஸ்க்ரப் தொழில்நுட்பத்துடன் வரும் இந்த வேர்ல்பூல் மாடலும் கூட ஒரு செமி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷினாகும்.
03. சாம்சங் 6 கிலோ வாஷிங் மெஷின் (Samsung 6 kg Washing Machine - WT60R2000LL/TL): 5 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங் மற்றும் ஏர் டர்போ ட்ரையிங் (Air Turbo Drying) வரும் இந்த சாம்சங் மாடல் ஒரு செமி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷினாகும்.
04. பானாசோனிக் 6.5 கிலோ வாஷிங் மெஷின் (Panasonic 6.5 kg - NA-W65L7ARB 2023 மாடல்): 5 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங் மற்றும் சக்திவாய்ந்த மோட்டார், ஆக்டிவ் ஃபோம் சிஸ்டம் (Active Foam System) உடன் வரும் இந்த பானாசோனிக் மாடல் ஒரு செமி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷினாகும்.
05. சாம்சங் 6.5 கிலோ வாஷிங் மெஷின் (Samsung 6.5 kg Washing Machine - WT65R2200LL/TL): 5 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங் மற்றும் ஏர் டர்போ ட்ரையிங் உடன் வரும் இந்த சாம்சங் மாடல் ஒரு செமி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷினாகும்.
06. டாடாவின் வோல்டாஸ் பெக்கோ 7.2 கிலோ வாஷிங் மெஷின் (Tata Voltas beko 7.2 Kg Washing Machine 2023 மாடல்): ஃபாஸ்ட் ட்ரை டெக்னாலஜி (Fast Dry technology) உடன் வரும் இந்த டாடா மாடல் ஒரு செமி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷினாகும்.
07. ஹையர் 7 கிலோ வாஷிங் மெஷின் (Haier 7Kg Washing Machine - HTW70-1187BTN): 5 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங் உடன் வரும் இந்த ஹையர் மாடல் ஒரு செமி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷினாகும். இது ஒயிட் & மெரூன் கலரில் வாங்க கிடைக்கிறது
08. கேண்டஸ் 8.5 கிலோ வாஷிங் மெஷின் (Candes 8.5 kg Washing Machine - CTPL85PL1SWM): மோட்டார் மீது 5 ஆண்டுகள் உத்திரவாதம் மற்றும் மல்டி வாஷிங் மெத்தேட் (Multi washing method) உடன் வரும் இந்த கேண்டஸ் மாடல் ஒரு செமி ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷினாகும்.


Click it and Unblock the Notifications








