தள்ளுபடியில் தத்தளிக்கும் 10 வாஷிங் மெஷின்கள்.. வெறும் ரூ.10,000 போதும்!
என்னப்பா? Amazon வலைதளத்தில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டிவிகள் மீது மட்டும் தான் ஆபர்கள் கிடைக்கிறதா?
நடந்து கொண்டிருக்கும் கிரேட் இந்தியன் பெஸ்டிவலில் வாஷிங் மெஷின்கள் (Washing Machine) மீதெல்லாம் எந்த சலுகையும், தள்ளுபடியும் இல்லையா? என்று கேட்பவரா நீங்கள்?

யார் சொன்னது?
நீங்கள் வாஷிங் மெஷின்கள் மீதான ஆபர்களை தேடுகிறீர்கள் என்றால்.. கவலையை விடுங்கள்! நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்!
ஏனென்றால், அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையின் போது "தாறுமாறான" ஆபர் விலையின் கீழ் வாங்க கிடைக்கும் 10 டாப் லோடிங் வாஷிங் மெஷின்களின் பட்டியல் இதோ:

01. Samsung-இன் 8 கிலோ வாஷிங் மெஷின்:
Samsung WA80T4560BM/TL என்கிற மாடல் பெயரின் கீழ் விற்பனை செய்யப்படும் சாம்சங்கின் இந்த 8 கிலோ ஃபுல்லி ஆட்டோமெட்டிக் வாஷிங் மெஷினின் அசல் விலை ரூ. 28,500 ஆகும்.
ஆனால் இது ரூ.19,990 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. அதாவது அமேசானின் சிறப்பு விற்பனையின் கீழ் இது 30% என்கிற தள்ளுபடியை பெறுகிறது!

02. LG நிறுவனத்தின் 7 கிலோ வாஷிங் மெஷின்!
அமேசானில் LG T70SPSF2Z என்கிற மாடல் பெயரின் கீழ் விற்பனை செய்யப்படும் இந்த வாஷிங் மெஷின் ஆனது - 7 கிலோ ஃபுல்லி ஆட்டோமெட்டிக் டாப் லோட் வாஷிங் மெஷின் ஆகும்.
இது ரூ.19,000 என்கிற சலுகை விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.25,990 ஆகும்.

03. Bosch நிறுவனத்தின் 7.5 கிலோ வாஷிங் மெஷின்!
Bosch WOE753M0IN என்கிற மாடல் பெயரின் கீழ் வாங்க கிடைக்கும் இந்த வாஷிங் மெஷினின் அசல் விலை ரூ 34,990 ஆகும். அனால் இது அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவலின் போது ரூ 22,950 க்கு வாங்க கிடைக்கும்.
இதுவும் ஒரு Fully Automatic வாஷிங் மெஷின் ஆகும். மேலும் இந்த வாஷிங் மெஷின் ஆன்டி-டாங்கிள் புரோகிராமையும் ஆதரிக்கிறது.

04. LG நிறுவனத்தின் 10 கிலோ வாஷிங் மெஷின்!
அமேசான் வலைத்தளத்தில் LG T10SJMB1Z என்கிற மாடல் பெயரின் கீழ் வாங்க கிடைக்கும் இந்த 10 கிலோ எல்ஜி வாஷிங் மெஷினின் தள்ளுபடி விலை ரூ.25,500 ஆகும்; இதன் அசல் விலை ரூ.38,990 ஆகும்.
ஃபுல்லி ஆட்டோமெட்டிக் வாஷிங் மெஷின் ஆன இது டச் டிஸ்ப்ளே கண்ட்ரோல் மற்றும் TurboDrum, JetSpray+ போன்ற சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.

05. Haier நிறுவனத்தின் 6.5 கிலோ வாஷிங் மெஷின்!
Haier HWM65-AE என்கிற மாடல் பெயரின் கீழ் வாங்க கிடைக்கும் இந்த 6.5 கிலோ வாஷிங் மெஷினின் அசல் விலை ரூ.19,990 ஆகும்.
ஆனால் இது அமேசானில் ரூ.13,990 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. இதுவும் ஒரு ஃபுல்லி ஆட்டோமெட்டிக் டாப் லோட் வாஷிங் மெஷின் ஆகும்.

06. Godrej நிறுவனத்தின் 6 கிலோ வாஷிங் மெஷின்!
அமேசான் வலைத்தளத்தில் Godrej WTEON 600 என்கிற மாடல் பெயரின் கீழ் வாங்க கிடைக்கும் இந்த 6 கிலோ ஃபுல்லி ஆட்டோமெட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷினின் அசல் விலை ரூ.19,750 ஆகும்.
ஆனால் இது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக ரூ.13,590 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இது 31% என்கிற தள்ளுபடியை பெறுகிறது.

07. Panasonic நிறுவனத்தின் 6 கிலோ வாஷிங் மெஷின்
பானாசோனிக்கின் இந்த 6 கிலோ ஃபுல்லி ஆட்டோமெட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷின் ஆனது PanasonicNA-F60LF1HRB என்கிற மாடல் பெயரின் கீழ் வாங்க கிடைக்கிறது.
இது ரூ.13,490 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. ஆனால் இதன் அசல் விலை ரூ.19,750 ஆகும்.

08. Amazon Basics-இன் 6.5கிலோ வாஷிங் மெஷின்!
அமேசான் பேஸிக்ஸின் இந்த 6.5 கிலோ (AB2021INWM006) வாஷிங் மெஷின் ஆனது, தற்போது வெறும் ரூ.10,990 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 19,999 ஆகும்.
LED டிஸ்ப்ளே பேனலுடன் வரும் இதுவொரு ஃபுல்லி ஆட்டோமெட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷின் ஆகும்.

09. Whirlpool நிறுவனத்தின் 10.5 கிலோ வாஷிங் மெஷின்!
Whirlpool Ace XL என்கிற மாடல் பெயரின் கீழ் வாங்க கிடைக்கும் இது, 10.5 கிலோ செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் ஆகும்.
இதன் அசல் விலை ரூ. 25,450 ஆகும். ஆனால் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவலின் போது இது 32% என்கிற தள்ளுபடியை பெற்று ரூ.17,410 க்கு வாங்க கிடைக்கும்!

10. Lloyd நிறுவனத்தின் 7.5 கிலோ வாஷிங் மெஷின்
Lloyd LWMS75RA1 என்கிற மாடல் பெயரின் கீழ் அறியப்படும் இந்த 7.5 கிலோ செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினின் அசல் விலை ரூ 13,840 ஆகும்.
ஆனால், அமேசானில் நடக்கும் சிறப்பு விற்பனையின் கீழ் இது ரூ.9,490 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications