ரூ.10,000-க்குள் கிடைக்கும் தரமான ஸ்மார்ட் டிவிகள்.! மிஸ் பண்ணாதீங்க.!

|

ஸ்மார்ட் டிவிக்கள் மிகவும் அவசியமான கேஜெட்களில் ஒன்றாக மாறிவிட்டன. ஏனெனில் மாணவர்களுக்கு கல்வி சார்ந்த பயன்பாடுகளுக்கும் உதவியாக இருக்கிறது இந்த ஸ்மார்ட் டிவிகள். குறிப்பாக பல்வேறு நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன.

டிவிகள் என்றாலே சற்று விலை

குறிப்பாக ஸ்மார்ட் டிவிகள் என்றாலே சற்று விலை உயர்வாக தான் இருக்கும் என்று நினைக்கக் கூடாது, பட்ஜெட் விலையில் கூடஸ்மார்ட் டிவிகள் இருக்கிறது. அதன்படி பானாசோனிக், கோடக், குரோமா, மைக்ரோமேக்ஸ் மற்றும் பல பிராண்டுகளிலிருந்துரூ.10,000-க்குள் கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலைப் பார்ப்போம்.

கோடக் 32HDXSMART 32-இன்ச் எல்இடி எச்டி ரெடி டிவி

கோடக் 32HDXSMART 32-இன்ச் எல்இடி எச்டி ரெடி டிவி

கோடக் நிறுவனத்தின டிவி மாலடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதன்படி அன்மையில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த கோடக் 32HDXSMART 32-இன்ச் எல்இடி எச்டி ரெடி டிவி ஆனது ரூ.10,000-விலையில் கிடைக்கும். மேலும் நெட்ஃபிக்ஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் பல பயன்பாடுகளை ஆதரிக்கிறது இந்த ஸ்மார்ட் டிவி. குறிப்பாக ஆண்ட்ராய்டு அடிப்படையில் வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட் டிவி 20வாட் ஸ்பீக்கர் ஆதரவுகளை கொண்டுள்ளது.

இரைச்சலிலிருந்து தப்பிக்க புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கிய சிங்கப்பூர்.!இரைச்சலிலிருந்து தப்பிக்க புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கிய சிங்கப்பூர்.!

சேன்யோ ((Sanyo) XT-24S7000F 24-இன்ச் எல்இடி எச்டி ரெடி டிவி

சேன்யோ ((Sanyo) XT-24S7000F 24-இன்ச் எல்இடி எச்டி ரெடி டிவி

இந்தியாவில் பிரபலமான பிராண்ட் சேன்யோ ஆகும். இந்நிறுவனம் சேன்யோ XT-24S7000F 24-இன்ச் எல்இடி எச்டி ரெடி டிவி மாடலை ரூ.10,000-விலையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த டிவி டிவி கேமிங் கன்சோல் ஆதரவுடன் வருவதால் இது ஒரு நல்ல தேர்வாகும், பின்பு இயக்கத்திற்கும் அருமையாக இருக்கும் இந்த டிவி மாடல்.

கெவின் (Kevin) K56U912 32-இன்ச் எல்இடி எச்டி ரெடி டிவி

கெவின் (Kevin) K56U912 32-இன்ச் எல்இடி எச்டி ரெடி டிவி

கெவின் K56U912 32-இன்ச் எல்இடி எச்டி ரெடி டிவி ஆனது பட்ஜெட் பிரிவில் பெற மற்றொரு நல்ல விலை ஸ்மார்ட் டிவி ஆகும். ஸ்மார்ட் டிவி 60Hz refresh rate மற்றும் 178டிகிரி கோணத்தையும் வழங்குகிறது, இது ஒரு சிறந்த டிவி பார்க்கும் அனுபவத்தை அளிக்கிறது.

சேன்யோ(Sanyo) XT-32A081H 32-இன்ச் எல்இடி எச்டி ரெடி டிவி

சேன்யோ(Sanyo) XT-32A081H 32-இன்ச் எல்இடி எச்டி ரெடி டிவி

சேன்யோ(Sanyo) XT-32A081H 32-இன்ச் எல்இடி எச்டி ரெடி டிவி ஆனது சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் ரூ.10,000-விலையில்விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்டிவி சிறந்த பார்வை அனுபவத்தை வழங்குகிறது.

குரோமா (Croma) CREL7318 32-இன்ச் எல்இடி எச்டி-ரெடி டிவி

குரோமா (Croma) CREL7318 32-இன்ச் எல்இடி எச்டி-ரெடி டிவி

குரோமா (Croma) CREL7318 32-இன்ச் எல்இடி எச்டி-ரெடி டிவி ஆனது 20W டூயல் ஸ்பீக்கர்கள் போன்ற சில சிறந்த அம்சங்களை வழங்குகிறது. மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த சாதனத்தின் விலை ரூ.10,000-ஆக உள்ளது.

பானாசோனிக் VIERA TH-22F200DX 22-இன்ச் எல்இடி ஃபுல் எச்டி டிவி

பானாசோனிக் VIERA TH-22F200DX 22-இன்ச் எல்இடி ஃபுல் எச்டி டிவி

பானாசோனிக் VIERA TH-22F200DX 22-இன்ச் எல்இடி ஃபுல் எச்டி டிவி ஆனது 1920 X 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்தபாதுகாப்பு அம்சத்துடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக சிறந்த ஒலி ஆதரவு மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்
அடக்கம். குறிப்பாக மலிவு விலையில் வாங்கச் சிறந்தது இந்த அட்டகாசமான பானாசோனிக் ஸ்மார்ட் டிவி.

குரோமா CREL7071 24-இன்ச் எல்இடி எச்டி-ரெடி டிவி

குரோமா CREL7071 24-இன்ச் எல்இடி எச்டி-ரெடி டிவி

குரோமா CREL7071 24-இன்ச் எல்இடி எச்டி-ரெடி டிவியும் சிறந்த பார்வை அனுபவங்களை வழங்குகிறது. கூடுதலாக இந்த ஸ்மார்ட் டிவி ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தும் உள்ளமைக்கப்பட்ட கேம்களை வழங்குகிறது. மேலும் அனைத்து இடங்களிலும் வைத்து பயன்படுத்தும் வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட் டிவி.

மைக்ரோமேக்ஸ் 20E8100HD 20-இன்ச் எல்இடி எச்டி-ரெடி டிவி

மைக்ரோமேக்ஸ் 20E8100HD 20-இன்ச் எல்இடி எச்டி-ரெடி டிவி

இந்த பட்டியலில் கூடுதலாக மைக்ரோமேக்ஸ் 20E8100HD 20-இன்ச் எல்இடி எச்டி-ரெடி டிவியும் உள்ளது. இந்த அட்டகாசமான டிவிஆனது சிறந்த வடிவமைப்பு மற்றும் சிறந்த பார்வை அனுபவத்தை வழங்குகிறது. குறிப்பாக ரூ.10,000-விலையில் விற்பனைக்குவந்துள்ளது இந்த ஸ்மார்ட் டிவி.

இன்டெக்ஸ் Avoir Splash Plus 32-இன்ச் எல்இடி எச்டி ரெடி டிவி

இன்டெக்ஸ் Avoir Splash Plus 32-இன்ச் எல்இடி எச்டி ரெடி டிவி

இன்டெக்ஸ் Avoir Splash Plus 32-இன்ச் எல்இடி எச்டி ரெடி டிவி ஆனது ரூ.10,000-விலையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவி மாடல் 60Hz refresh rate, 20வாட் ஸ்பீக்கர் உட்பட பல்வேறு ஆதரவுகளை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

பிபிஎல் T32BH23A 32-இன்ச் எல்இடி எச்டி ரெடி டிவி

பிபிஎல் T32BH23A 32-இன்ச் எல்இடி எச்டி ரெடி டிவி

பிபிஎல் T32BH23A 32-இன்ச் எல்இடி எச்டி ரெடி டிவி ஆனது பயனர்களுக்கு யூ.எஸ்.பி போர்ட்கள், எச்.டி.எம்.ஐ போர்ட்டுகள் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை வழங்குகிறது.மேலும் பயனர்கள் பிரத்யேக ஆடியோ மற்றும் வீடியோ அனுபவத்திற்காக பிரத்யேக ஆடியோ ஜாக் இதில்பெறுகிறார்கள். குறிப்பாக பட்ஜெட் விலையில் இந்த டிவி மாடல் வெளிவந்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Best Smart TVs And LED TVs Under Rs. 10,000: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X