கிடைக்காது! OnePlus TVகள் மீது இதை விட "வெறித்தனமான" ஆபர் இனி கிடைக்காது!
உங்களுக்கு என்ன வேண்டும்? கேள்விக்கான பதில் வேண்டுமா? அல்லது ஒன்பிளஸ் டிவிகள் மீது அணுக கிடைக்கும் சலுகைகள் வேண்டுமா?
அதாவது "நவராத்திரி பண்டிகை நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், ஒன்பிளஸ் நிறுவனம் எதற்காக தீபாவளி சிறப்பு விற்பனையை நடத்துகிறது?" என்கிற கேள்விக்கு பதில் தேடுவதை விட..
அதே சிறப்பு விற்பனையில் அணுக கிடைக்கும் TV Offer-களை அள்ளுவது தான் புத்திசாலித்தனம் என்று நாங்கள் நினைக்கிறோம்!

நீங்களும் அதையே நினைத்தால்?
உங்களுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே மிச்சம் இருக்கிறது! ஏனெனில், சீன தொழில்நுட்ப நிறுவனமான ஒன்பிளஸின் பண்டிகை கால விற்பனையானது வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதியோடு முடிவடைகிறது.
நினைவூட்டும் வண்ணம், ஒன்பிளஸ் நிறுவனத்தின் Diwali Sale (தீபாவளி சேல்) ஆனது கடந்த செப்டம்பர் 22, 2022 முதல் நடக்கிறது!

OnePlus TV வாங்க இதைவிட அருமையான நேரம் அமையாது!
ஒன்பிளஸின் தீபாவளி சிறப்பு விற்பனையின் கீழ், ஸ்மார்ட்போன்களின் மீது கிடைக்கும் ஆபர்களை விட ஸ்மார்ட் டிவிகள் மீது கிடைக்கும் சலுகைகள் தான் அதிகமாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது!
இன்னும் சொல்லப்போனால், கிட்டத்தட்ட அனைத்து வகையான ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் மீதும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. என்னென்ன டிவி மாடல்கள் மீது என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது? என்கிற விரிவான விவரங்கள் இதோ:

32-inch OnePlus TV Y1S மீது கிடைக்கும் சலுகைகள்:
32-இன்ச் அளவிலான OnePlus TV Y சீரீஸ் மாடல் ஆனது ரூ.21,999 க்கு பதிலாக ரூ.12,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
இந்த சலுகையின் கீழ் நீங்கள் ஆக்சிஸ் பேங்க் கார்டுகளைப் பயன்படுத்தினால் ரூ.3,000 வரை உடனடி தள்ளுபடியையும் பெறலாம்.
ஒன்பிளஸின் ரெட் கேபிள் கிளப் மெம்பர்களுக்கு ரூ.2,000 என்கிற கூடுதல் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
32-இன்ச் மாடலை போன்ற 43 இன்ச் மாடல் மீட்டும் சலுகைகள் கிடைக்கின்றன!

32-inch OnePlus TV Y1S Edge மீது கிடைக்கும் சலுகைகள்:
ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது ரூ.23,999க்கு பதிலாக ரூ.13,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.
நீங்கள் ஆக்சிஸ் பேங்க் கார்டுகளை பயன்படுத்தும் பட்சத்தில், உங்களுக்கு ரூ.2000 வரையிலான உடனடி தள்ளுபடியும் கிடைக்கும்.
மேலும், ரெட் கேபிள் கிளப் மெம்பர்களுக்கு கூடுதலாக ரூ.2,000 என்கிற தள்ளுபடியும் கிடைக்கும். இதே ஸ்மார்ட் டிவியின் 43-இன்ச் மாடல் மீதும் சலுகைகள் கிடைக்கின்றன!

43-inch OnePlus TV Y1S Pro மீது கிடைக்கும் சலுகைகள்:
ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த ப்ரோ மாடல் ஆனது ரூ,39,999 க்கு பதிலாக ரூ. 26,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
வழக்கம் போல, ஆக்சிஸ் பேங்க் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரூ.3,000 வரையிலான உடனடி தள்ளுபடியை பெறலாம்.
ரெட் கேபிள் கிளப் சலுகையை பொறுத்தவரை, ரூ.2,000 என்கிற கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். மேலும் இதே ஸ்மார்ட் டிவி மாடலின் 50-இன்ச் மாடல் மீதும் "இதே போன்ற" சலுகைகள் அணுக கிடைக்கிறது!

50-inch OnePlus TV U1S மீது கிடைக்கும் சலுகைகள்:
ஒன்பிளஸ் தீபாவளி விற்பனையின் போது, இந்த ஸ்மார்ட் டிவி ரூ.49,999 க்கு பதிலாக ரூ.34,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.
நீங்கள் ஆக்சிஸ் பேங்க் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ,5000 வரையிலான உடனடி தள்ளுபடியையும் பெறலாம் மற்றும் ரெட் கேபிள் கிளப் மெம்பராக இருந்தால் ரூ.2,000 என்கிற கூடுதல் தள்ளுபடியையும் பெறலாம்.
50-இன்ச் மாடலை போலவே, OnePlus TV U1S சீரீஸின் கீழ் வாங்க கிடைக்கும் 55-இன்ச் மற்றும் 65-இன்ச் மாடல்கள் மீது சலுகைகள் உண்டு!

OnePlus TV Q1 சீரீஸ் மீது கிடைக்கும் சலுகைகள்:
இந்த சிறப்பு விற்பனையின் போது, ஒன்பிளஸின் க்யூ1 சீரீஸ் ஆனது ரூ.84,999 க்கு பதிலாக ரூ.74,900 க்கு வாங்க கிடைக்கும். இது 55-இன்ச் அளவிலான 4K டிஸ்ப்ளேவை பேக் செய்யும் ஒரு ஆண்ட்ராய்டு டிவி ஆகும்.
இப்போது புரிகிறதா? சிறப்பு விற்பனையின் பெயரை விட, அதன் வழியாக அணுக கிடைக்கும் சலுகைகள் தான் முக்கியம் என்று!

OnePlus 10R-இன் புதிய பிரைம் ப்ளூ எடிஷனை வாங்கவும் இதுதான் சரியான நேரம்!
ஏனென்றால், புதிய OnePlus 10R பிரைம் ப்ளூ எடிஷன் ஆனது ரூ.3,000 என்கிற உடனடி தள்ளுபடியின் கீழ் வாங்க கிடைக்கிறது. இதற்காக நீங்கள் SBI கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டும்!
மேலும், நீங்களொரு அமேசான் ப்ரைம் மெம்பர் என்றால், Oneplus 10R ப்ரைம் ப்ளூ எடிஷனை வாங்குவதற்காக நீங்கள் Amazon Pay-வை பயன்படுத்தினால் உங்களுக்கு ரூ.500 என்கிற கூடுதல் இன்ஸ்டன்ட் கேஷ்பேக்கும் கிடைக்கும்!


Click it and Unblock the Notifications