இனி 100 இன்ச் டிவி எதுக்கு? டால்பி ஆடியோ.. 32ஜிபி மெமரி.. பட்ஜெட் விலையில் 4K ப்ரொஜெக்டர்.. பட்டியல் இதோ..
இந்தியாவில் ஸ்மார்ட் டிவிகளை விட ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் (Smart Projector) மாடல்களை வாங்க தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதாவது 55 இன்ச், 75 இன்ச் டிவிகள் ரூ.50,000 முதல் ரூ.75,000 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 100 இன்ச் டிவிகள் ரூ.1 லட்சத்திற்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் பல முன்னணி நிறுவனங்கள் பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல்களை பட்ஜெட் விலையில் விற்பனை செய்து வருகின்றன. அதுவும் 4கே தரத்தில் ப்ரொஜெக்டர்கள் (projectors) கிடைக்கின்றன. எனவே தான் 100 இன்ச் டிவிகைள வாங்குவதை விட 120 இன்ச் முதல் 150 இன்ச் வரை பெரிய திரை அனுபவத்தை வழங்கும் ப்ரொஜெக்டர்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ப்ரொஜெக்டர் மாடல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
1.போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் (Portronics Beem 500 Smart Projector) மாடல் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.19,999 விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த புரொஜெக்டர் மாடலை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. குறிப்பாக இதில் 120 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection)செய்து கொள்ள முடியும்.
8K அல்ட்ரா எச்டி ரெசல்யூஷன் சப்போர்ட், 6700 லூமென்ஸ் எல்இடி லேம்ப் (6700 Lumens LED lamp), 2ஜிபி ரேம், 32ஜிபி ஸ்டோரேஜ், கீஸ்டோன் கரெக்ஷன் (Keystone Correction), ஆட்டோ போகஸ் (Auto Focus), ப்ரீ-லோட் செய்யப்பட்ட ஓடிடி ஆப் (pre-loaded OTT apps) வசதி உள்ளிட்ட அம்சங்கள் போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் ப்ரொஜெக்டரில் உள்ளன.
இதுதவிர அம்லாஜிக் டி972 சிப்செட் (Amlogic T972 Chipset), இன்டலிஜென்ஸ் ஆட்டோமேட்டிக் அப்ஸ்டகில் அவாய்டன்ஸ் (Intelligent Automatic Obstacle Avoidance) சப்போர்ட், வாய்ஸ் எனேபிள்டு ரிமோட் கண்ட்ரோல் (Voice Enabled Remote Control), ஆண்ட்ராய்டு 9 (Android 9), புளூடூத், வைஃபை, I/O போர்ட்கள், ஏயூஎக்ஸ்(AUX), எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட் உள்ளிட்ட போன்ற தரமான அம்சங்கள் இந்த போர்ட்ரானிக்ஸ் மாடலில் உள்ளது.
2. இ கேட் டஸ்டர் 7எக்ஸ் டஸ்ட் ப்ரூஃப் ஆட்டோமேட்டிக் ஆண்ட்ராய்டு ப்ரொஜெக்டர் (E GATE Duster 7X Dust Proof Automatic Android Projector) ஆனது அமேசான் தளத்தில் ரூ.16,990 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மூலம் 300 இன்ச் மெகா ஸ்க்ரீன்(300 Inch Mega Screen) பயன்படுத்த முடியும்.
அதேபோல் 1080 பிக்சல், 4கே எச்டிஆர் பிளஸ் எச்எல்ஜி ஆதரவு, ட்ரூ ஐஎஸ்ஒ, டஸ்ட் ப்ரூஃப் லைட் என்ஜின், 4 பில்லியன் கலர்ஸ், குவாட் கோர் சிபியு, 2ஜிபி ரேம், 32ஜிபி மெமரி, ப்ரீ-லோட் செய்யப்பட்ட ஓடிடி ஆப் (pre-loaded OTT apps), கீஸ்டோன், 12W ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த இ கேட் டஸ்டர் 7எக்ஸ் மாடலில் உள்ளன.
3.ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 18 (ZEBRONICS PIXAPLAY 18) ஸ்மார்ட் வெர்ட்டிக்கல் ப்ரொஜெக்டர் ஆனது அமேசான் தளத்தில் ரூ.16,599 விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்கினால் 1250 தள்ளுபடியும் கிடைக்கும். குறிப்பாக இந்த ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் 200 இன்ச் ஸ்க்ரீன் சைஸ் (200 inch Screen Size)கொடுக்கும்.
அதேபோல் 4கே சப்போர்ட், டால்பி ஆடியோ, 7000 லூமென்ஸ் (Lumens), 1000:1 கான்ட்ராஸ்ட், ஹை-பிரைட்னஸ்(High Brightness), எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், புளூடூத் வி5.1, வைஃபை, குவாட் கோர்ட் பிராசஸர் ( (Quad core processor), ப்ரீ-லோட் செய்யப்பட்ட ஓடிடி ஆப் (pre-loaded OTT apps)உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 18 மாடல் வெளிவந்தது.
4.யாபர் ப்ரோ வி9 வைஃபை 6 புளூடூத் ப்ரொஜெக்டர் (YABER PRO V9 WiFi 6 Bluetooth Projector) ஆனது அமேசான் தளத்தில் ரூ.14,990 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் 300 ஸ்க்ரீன் சைஸ் கொடுக்கும். 4கே சப்போர்ட், 500 ஏஎன்எஸ்ஐ, ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (Auto Keystone Correction) உள்ளிட்ட அம்சங்கள் இந்த யாபர் மாடலில் உள்ளன.
மேலும் 16000 லுமென்ஸ் பிரைட்னஸ், எச்டிஐஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், புளூடூத் 5.0, வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய வைஃபை ப்ரொஜெக்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
5.எக்ஸ்எலெக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 2 (XElectron iProjector 2) மாடல் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.19,930 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக 250 இன்ச் வரையிலான ஸ்க்ரீன் சைஸ் கொடுக்கும் இந்த எக்ஸ்எலெக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 2 மாடல். அதேபோல் 4கே எச்டிஆர் சப்போர்ட் (4K HDR Support) ஆதரவு இதில் உள்ளது.

2ஜிபி ரேம், 32ஜிபி மெமரி, ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ போகஸ் (Auto Focus), 20000 லுமென்ஸ் பிரைட்னஸ் (Lumens), ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம், ப்ரீ-லோட் செய்யப்பட்ட ஓடிடி ஆப் (pre-loaded OTT apps), எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த எக்ஸ்எலெக்ட்ரான் மாடலில் உள்ளன.
அதேபோல் இந்த பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல்களை வாங்கினாலும் கூடவே 5.1 ஸ்பீக்கர் சிஸ்டம், வூப்பர் (Woofer), சவுண்ட்பார் (Soundbar) போன்ற எதாவது ஒரு ஸ்பீக்கர்களை வாங்குவது நல்லது. அப்போது தான் ஒரு தியேட்டர் அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








