ரூ.5,999 முதல் ரூ.10 ஆயிரம் வரை: தரமான எல்இடி டிவி வாங்க விருப்பமா? இதோ பட்டியல்.!
இந்தியாவில் தற்போது எல்இடி டிவிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக சில நிறுவனங்கள் கம்மி விலையில் தரமான டிவிகளை அறிமுகம் செய்து வருகின்றன என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இப்போது கம்மி விலையில் வெளிவரும் டிவிகளில் கூட மேம்பட்ட வசதிகள் இருக்கிறது.

குறிப்பாக கடைகளில் சென்று டிவிகளை வாங்குவதை விட ஆன்லைன் மூலம் வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் இப்போதுரூ.5,999 முதல் ரூ.10,000-க்குள் கிடைக்கும் அசத்தலான எல்இடி டிவிகளின் பட்டியலைப் பார்ப்போம்.

5.24-இன்ச் கோடாக் எச்டி ரெடி எல்இடி டிவி (24HDX100S)
பிளிப்கார்ட் தளத்தில் 24-இன்ச் கொண்ட கோடாக் எச்டி ரெடி எல்இடி டிவி (24HDX100S) மாடலை ரூ.5,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக
தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.
குறிப்பாக 1366 x 768 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300 நிட்ஸ் ப்ரைட்னஸ் போன்ற பல சிறப்பு அம்சங்களுடன்வெளிவந்துள்ளது கோடாக் எச்டி ரெடி எல்இடி டிவி மாடல். அதேபோல் இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.
மேலும் 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் ஆதரவு, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான
கோடாக் எல்இடி டிவி.

4. 32-இன்ச் MarQ By Flipkart எச்டி ரெடி எல்இடி டிவி
32-இன்ச் கொண்ட MarQ By Flipkart எச்டி ரெடி எல்இடி டிவி மாடலை ரூ.8,499-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்டவங்கி கார்டுகளை கொண்டு இந்த டிவியை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.
அதேபோல் இந்த டிவி 1366 X 768 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 250 நிட்ஸ் ப்ரைட்னஸ், 4000:1 ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு
வசதியுடன் வெளிவந்துள்து.
குறிப்பாக யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் எனப் பல சிறப்புஅம்சங்களை கொண்டுள்ளது இந்த 32-இன்ச் MarQ By Flipkart எச்டி ரெடி எல்இடி டிவி.

3. 32-இன்ச் தாம்சன் Alpha எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி (32Alpha007BL)
32-இன்ச் கொண்ட தாம்சன் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.9,999-விலையில் வங்க முடியும். மேலும்தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இன்னமும் குறைவான விலையில் வாங்கலாம்.
யூடியூப், பிரைம் வீடியோ போன்ற ஆப்ஸ்களை இந்த தாம்சன் டிவியில் பயன்படுத்த முடியும். அதேபோல் லினக்ஸ் இயங்குதளம் மூலம் இந்த
ஸ்மார்ட் டிவி இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

32-இன்ச் தாம்சன் Alpha டிவியின் சிறப்பு அம்சங்கள்
32-இன்ச் தாம்சன் Alpha எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி மாடல் ஆனது 1366 x 768 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
குறிப்பாக இந்த டிவியில் 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளது. பின்பு குவாட்கோர் பிராஸசர்-V45 x 4, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட்,வைஃபை வசதி போன்றபல அட்டகாசமான வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

2.32-இன்ச் iFFALCON F52 எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (32F52)
பிளிப்கார்ட் தளத்தில் 32-இன்ச் கொண்ட iFFALCON F52 எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலின் விலை ரூ.10,999-ஆகஉள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடிகிடைக்கும்.
மேலும் யூடியூப், நெட்ஃபிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற பல ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். குறிப்பாக ஆண்ட்ராய்டுஇயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த iFFALCON டிவி

iFFALCON F52 எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி அம்சங்கள்
1366 x 768 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 16 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், கூகுள் அசிஸ்டன்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, 220 நிட்ஸ் ப்ரைட்னஸ்,
போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.
அதேபோல் எச்டிஎம்ஐ போர்ட்,யுஎஸ்பி போர்ட், புளூடூத், 64-பிட் பிராசஸர்,டால்பி ஆடியோ ஆதரவு உள்ளிட்ட அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளதுஇந்த 32-இன்ச் கொண்ட iFFALCON F52 எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி.

1.Infinix 32Y1 ஸ்மாரட் டிவி
Infinix 32Y1 ஸ்மாரட் டிவி மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.8,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்தடிவி 1366 x 768 பிக்சல்ஸ்,60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பெசல்-லெஸ் ஃப்ரேம் என்ற அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது.
அதேபோல் 250 நிட்ஸ் ப்ரைட்னஸ், 1200 (Typ) கான்ட்ராஸ்ட் ரேஷியோ, Linux இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த இன்பினிக்ஸ் டிவி.
512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த Infinix 32Y1 ஸ்மார்ட் டிவி. பின்பு யூடியூப், பிரைம் வீடியோ, ஜீ 5, ஈரோஸ் நவ், ஹங்காமா, ப்ளெக்ஸ், YuppTVபோன்ற ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்களை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் 32Y1 ஸ்மார்ட் டிவி.
20W ஸ்பீக்கர்கள் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த இன்பினிக்ஸ் டிவி. மேலும் வைஃபை, 3 எச்டிஎம்ஐ போர்ட்,2 யுஎஸ்பி போர்ட், லேன், ஆப்டிகல், MiraCast போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி.


Click it and Unblock the Notifications