Home
Gadgets

கம்மி விலையில் வாங்கச் சிறந்த Smart Band: இதோ டாப் 5 லிஸ்ட்.!

தற்போது நமது ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. குறிப்பாக உடற்பயிற்சி, டயட் என பல்வேறு உடல் நலனை பேணும் முயற்சிகளை செய்கிறோம். அதேபோல் நம்மை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்க உடற்பயிற்சி பெரிதும் உதவுகிறது என்றே கூறலாம்.

 ஸ்மார்ட் பேண்ட்

அதேபோல் ஆரோக்கியத்தை கவனிப்பதும், உடற்தகுதியைக் கண்காணிப்பதும் போன்ற அனைத்திற்கும் ஸ்மார்ட் பேண்ட்களை பயன்படுத்துவது மிகவும்நல்லது. இப்போது இந்தியாவில் கம்மி விலையில் கிடைக்கும் சிறந்த Smart Band-களை பார்ப்போம்.

1.ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ

1.ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ

ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ மாடலை அமேசான் தளத்தில் ரூ.3,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இதய துடிப்பு சென்சார், ஆக்டிவிட்டி டிராக்கர்,ஸ்லீப் மாணிட்டர் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் 1.47-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த ஸ்மார்ட் பேண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் 368 × 194 பிக்சல்ஸ், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்தரெட்மி ஸ்மார்ட் பேண்ட்.

ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ பேட்டரி

ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ பேட்டரி

200 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ மாடல். அதிகபட்சம் 14 நாட்கள் பேட்டரி பேக்கப் கிடைக்கும்
என நிறுவனம் கூறுகிறது. மேலும் புளூடூத் 5.0, Apollo 3.5 பிராஸசர் போன்ற பல சிறப்பு அம்சங்களை வழங்குகிறது இந்த ரெட்மி பேண்ட்.

2.எம்ஐ ஸமார்ட் பேண்ட் 6

2.எம்ஐ ஸமார்ட் பேண்ட் 6

அமேசான் தளத்தில் எம்ஐ ஸமார்ட் பேண்ட் 6 மாடலை ரூ.3,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக எம்ஐ ஸமார்ட் பேண்ட் 6 ஆனது 1.56-இன்ச் AMOLED டச் ஸ்க்ரீன் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 152 x 486 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட் பேண்ட்.

அதேபோல் 450 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 50 மீட்டர் வரை நீர்ப்புகாத டிஸ்பிளே ஆதரவு இதில் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி, உட்புற டிரெட்மில், உள்ளிட்ட ஆறு செயல்பாடுகளைஇந்த பேண்ட் தானாகவே கண்டறியும் திறனை கொண்டுள்ளது.

எம்ஐ ஸமார்ட் பேண்ட் 6 நிறங்கள்

எம்ஐ ஸமார்ட் பேண்ட் 6 நிறங்கள்

கருப்பு, நீலம்,பச்சை, ஆரஞ்சு, வெள்ளை மற்றும் மஞ்சள் போன்ற நிறங்களில் சியோமி எம்ஐ ஸமார்ட் பேண்ட் 6 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் எம்ஐ ஸமார்ட் பேண்ட் ஆனது 125 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இது 14 நாட்கள் பேட்டரிபேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது.

3.ரியல்மி பேண்ட் 2

3.ரியல்மி பேண்ட் 2

ரியல்மி பேண்ட் 2 மாடலை அமேசான் தளத்தில் ரூ.3,144-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 1.4-இன்ச் கலர் டிஸ்பிளே ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி பேண்ட். அதேபோல் 194 x 368 பிக்சல்ஸ், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது இந்த ரியல்மி பேண்ட் 2 மாடல்.

இதய துடிப்பு சென்சார், ஆக்டிவிட்டி டிராக்கர், ஸ்லீப் மாணிட்டர் போன்ற பல சிறப்பு அம்சங்களை வழங்குகிறது இந்த ரியல்மி டிவைஸ். மேலும் 240 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இது 12 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது.

 4.ஒப்போ பேண்ட் ஸ்டைல்

4.ஒப்போ பேண்ட் ஸ்டைல்

அமேசான் தளத்தில் ஒப்போ பேண்ட் ஸ்டைல் மாடலை ரூ.2,093-விலையில் வாங்க முடியும். இந்த டிவைஸ் 1.1 இன்ச் கலர் AMOLED டிஸ்பிளேவுடன் வரும். இது பயனர்களின் இரத்த செறிவு அளவை (SpO2) தொடர்ந்து கண்காணிக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

ஒப்போ பேண்ட் ஸ்டைல் ​​நிகழ் நேர இதய துடிப்பு கண்காணிப்பு மற்றும் தூக்க கண்காணிப்புடன் வரும். அதேபோல் 200 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ பேண்ட் ஸ்டைல். குறிப்பாக 14 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் கிடைக்கும்.

மேலும் இந்த பிட்னஸ் பேண்ட் 12 வெவ்வேறு ஸ்போர்ட்ஸ் மோடு உடன் வெளிவருகிறது.

5.ஒன்பிளஸ் பேண்ட்

5.ஒன்பிளஸ் பேண்ட்

ஒன்பிளஸ் பேண்ட் மாடலை அமேசான் தளத்தில் ரூ.1599-விலையில் வாங்க முடியும். ஒன்பிளஸ் பேண்ட் டச் ஆதரவை கொண்டிருக்கிறது. இது அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த பேண்ட் இரத்த ஆக்சிஸன் அளவு மற்றும் இதய துடிப்பை கண்காணிக்க உதவுகிறது.

இதில் ஆப்டிகல் இதய துடிப்பு சென்சார், இரத்த ஆக்ஸிஜன் சென்சார் உள்ளிட்டவைகள் உள்ளன. வெளிப்புறத்தில் ஓடுவதற்கு, உள்புறத்தில் ஓடுவதற்கு, கொழுப்பு கரைக்கும் ஓட்டம், வெளிப்புற நடைபயிற்சி, வெளிப்புற சைக்ளிங், உள்புற சைக்ளிங்,கிரிக்கெட், பேட்மிண்டன், நீச்சல்,யோகா உள்ளிட்ட 13 உடற்பயிற்சி முறைகள் ஒன்பிளஸ் பேண்டில் இருக்கிறது.

இதில் 100 எம்ஏஎச் பேட்டரி இருக்கிறது. இதை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யும்போது 14 நாட்கள் வரை பயன்படுத்தலாம். மேலும் ஒழுங்கற்ற சுவாசத்தின்போது எச்சரிக்கும் அம்சமும் இதில் இருக்கிறது. ஒன்பிளஸ் பேண்ட் ஆண்ட்ராய்டு 6.0 இல் இயங்கும் எனவும் இது ப்ளூடூத் வி5.0 இணைப்பையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Best Cheap Smart Bands: Here's the Top 5 List: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X