Home
Gadgets

இனி எல்லாமே தாம் தூம் தான்; Realme டெக்லைப் இயர்பட்ஸ் அறிமுகம்.!

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் உடன் புதிய ரியல்மி டெக்லைப் பட்ஸ் T100 மாடலை அறிமுகம் செய்துள்ளது ரியல்மி நிறுவனம். இந்த புதிய இயர்பட்ஸ் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

ஏர்கோனோமிக் டிசைன்

ஏர்கோனோமிக் டிசைன்

குறிப்பாக இந்த புதிய ரியல்மி டெக்லைப் இயர்பட்ஸ் ஆனது ஏர்கோனோமிக் டிசைன், டூயல் டோன் மற்றும் 10 மில்லிமீட்டர் டிரைவர்களைகொண்டுள்ளது. எனவே இந்த இயர்பட்ஸ் தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும்.

2500UIC சிப்

2500UIC சிப்

மேலும் இந்த ரியல்மி டெக்லைப் இயர்பட்ஸ் 2500UIC சிப் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு இந்த இயர்பட்ஸ் மாடல் ஸ்டெம் டிசைன் மற்றும் டைட்டானியம் பிளேட் செய்யப்பட்ட டையகிராம் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி

வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி

அதேபோல் ஏஐ சார்ந்து இயங்கும் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, IPX5 ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி எனப் பல சிறப்பான வசதிகளுடன் வெளிவந்துள்ளது இந்த ரியல்மி டெக்லைப் இயர்பட்ஸ்.

குறிப்பாக ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி இருப்பதால் அனைத்து இடங்களிலும் இந்த சாதனத்தை அருமையாக பயன்படுத்த முடியும்.

பேட்டரி எப்படி?

பேட்டரி எப்படி?

இந்த ரியல்மி டெக்லைப் இயர்பட்ஸ் ஆனது 28 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. மேலும் இந்த சாதனம் குறைந்த எடையில் எர்கோனோமிக் டிசைன், கேமிங்கின் போது 88 மில்லி செகண்ட்ஸ் லேடன்சி ரேட் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டச் கண்ட்ரோல் வசதி

டச் கண்ட்ரோல் வசதி

குறிப்பாக ரியல்மி டெக்லைப் பட்ஸ் T100 மாடல் ஆனது ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆதரவைக் கொண்டுள்ளது. இதுதவிர இந்த புதிய இயர்பட்ஸ் அழைப்புகளை நிராகரிப்பது, வால்யும் கண்ட்ரோல் போன்ற ஆப்ஷன்களுக்கு டச் கண்ட்ரோல் வசதியும் வழங்குகிறது.

டெக்லைப் பட்ஸ் T100  விலை

டெக்லைப் பட்ஸ் T100 விலை

புதிய ரியல்மி டெக்லைப் பட்ஸ் T100 மாடல் பாப் வைட் மற்றும் பிளாக் நிறங்களில்வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த புதிய இயர்பட்ஸ் மாடலின் விலை ரூ.1499-ஆக உள்ளது. வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி ரியல்மி டெக்லைப் பட்ஸ் T100 மாடல் அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்போது ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி 9ஐ 5ஜி

ரியல்மி 9ஐ 5ஜி

ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. 1,080x2,400 பிக்சலஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

அருமையான சிப்செட்

அருமையான சிப்செட்

ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 810 5G சிப்செட் வசதி உள்ளது. பின்பு 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி
இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போன்.

 சூப்பரான கேமரா

சூப்பரான கேமரா

புதிய ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + மேக்ரோ கேமரா + போர்ட்ரெயிட் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமானஸ்மார்ட்போன்.

என்ன விலை?

என்ன விலை?

ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு இந்த போனின் ஆரம்ப விலை ரூ.14,999-ஆக உள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Best cheap Realme TechLife Buds T100 launched in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X