Home
Gadgets

எந்த ஸ்மார்ட்பேண்ட் வாங்கலாம்? 2019 -ஆம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்பேண்ட்கள்

புது வருடம் துவங்கி இன்னும் முழுதாக ஒரு மாதம் கூட ஆகவில்லை, அனால் சந்தையில் ஏரளமான புதிய ஸ்மார்ட் பேண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

புது வருடம் துவங்கி இன்னும் முழுதாக ஒரு மாதம் கூட ஆகவில்லை, அனால் சந்தையில் ஏரளமான புதிய ஸ்மார்ட் பேண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் தாக்கம் தற்பொழுது உள்ள மக்களிடையே மிகவும் அதிகரித்துள்ளது. இந்த அற்புதமான ஸ்மார்ட் பேண்ட்கள் உதவியுடன், நம்மால் தினசரி நடவடிக்கைகள், கலோரி எரித்த மற்றும் எடுத்த அளவு, உணவு வழக்கங்களை திறம்பட கண்காணிக்க முடிகிறது.

எந்த ஸ்மார்ட்பேண்ட் வாங்கலாம்? 2019 -ஆம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்பேண்ட்

அதுமட்டுமில்லாமல், நாம் உடற்பயற்சி செய்து கொண்டிருக்கும் போதே, நம்மால் ஸ்மார்ட் பேண்ட் திரையில் நாம் எரித்த கலோரியின் அளவை உடனடியாக காண முடியும். அப்படிப்பட்ட ஸ்மார்ட் பேண்ட்களில் சிறந்த சிலவற்றை நாங்கள் உங்களுக்காக இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

இந்த ஸ்மார்ட் பேண்ட்கள் வெவேறு நிறுவங்களின் தயாரிப்புகள். எனவே ஒன்றின் தரம் அதிலுள்ள சிறப்பம்சங்களை பொறுத்ததே மதிப்பீடு செய்யப்படுகிறது. இவற்றில் உடல் அசைவை நினைவூட்டும் சிறப்பம்சம், அழைப்பு / குறுஞ்செய்தி நினைவூட்டும் சிறப்பம்சம் போன்ற சிறப்பம்சங்கள் இருக்கின்றன. எனவே இந்த சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு ஸ்மார்ட் பேண்ட் நம்மை எப்போதும் நல்ல உடல் தகுதியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.

மேலும், இந்த ஸ்மார்ட் பேண்ட்களில், GPS கருவி, 5 ATM நீர் உட்புக திறன், தூக்க கண்காணிப்பு அமைப்பு மற்றும் பல சிறப்பம்சங்களை கொண்டிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த ஸ்மார்ட் பேண்ட்களின் மேலும் சில சிறப்பசங்களை நீங்கள் பார்த்தால், உங்களால் இவற்றை வாங்காமல் இருக்க முடியாது. வாருங்கள் ஒவொன்றாக காணலாம்.

லெனோவா HX06 :

லெனோவா HX06 :

விலை மதிப்பு: 999 ரூபாய்

முக்கியமான அம்சங்கள்:

* ௦.87 இன்ச் OLED திரை(128 * 32 பிக்சல்ஸ்)

* நடை, நடந்த தூரம், கலோரி மற்றும் தூக்கத்தை கண்காணிக்கவல்லது

* நமக்கு வரும் அழைப்புகளை தெரியப்படுத்தவல்லது. ஒலியில்லா அலாரம்

* கைரோ சென்சார், அதிர்வு (Vibration) மோட்டார்

* நீரை உட்புகாமல் தடுக்கவல்லது (IP67)

* எடை: 20 கிராம்

* ப்ளூடூத் 4.2 LE , ஆண்ட்ராய்டு 4.4 அல்லது ஐஒஸ் 8.0 பதிப்பிற்கு மேலே வந்த அனைத்து மொபைல்களுடனும் இயங்கவல்லது.

* 60 mAh பேட்டரி 8 நாட்கள் வரை தாக்குப்பிடிக்க கூடியது

சாம்சங் கியர் பிட் 2 ப்ரோ

சாம்சங் கியர் பிட் 2 ப்ரோ

விலை மதிப்பு: 8,999 ரூபாய்

முக்கியமான அம்சங்கள்:

* 1.5 இன்ச் AMOLED திரை(216 * 432 பிக்சல்ஸ்), 310 ppi

* கார்னெரிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது

* 1 GHz டூயல் கோர் ப்ராசசர்

* 512 MB ராம், 4 GB சேமிப்பு

* 5 ATM நீரை உட்புக விடாமல் தடுக்கும் திறன், MIL STD 810G

* டைசன் OS (ஆண்ட்ராய்டு 4.4 அல்லது ஐஒஸ் 9.0 பதிப்பிற்கு மேலே வந்த அனைத்து மொபைல்களுடனும் இயங்கவல்லது.

* தனியாக ஒரு மியூசிக் பிளேயர் ஒன்றும் உள்ளது.

* ப்ளூடூத் V4.2 ,wifi b/g/n, GPS/GLONASS/Beidou

* சென்சார்கள்: ஆக்சிலரோமீட்டர், கைரோ, HRM, GPS, பாரோமீட்டர்

* 200 mAh பேட்டரி, பெரிதாக உபயோகிக்காத போது 5 நாட்களும், சுமாராக உபயோகிக்கும் போது 3 -4 நாட்களும் தாக்குப்பிடிக்க கூடியது

ஹுவாய் பேண்ட் 2 ப்ரோ மற்றும் ஹுவாய் பேண்ட் 2

ஹுவாய் பேண்ட் 2 ப்ரோ மற்றும் ஹுவாய் பேண்ட் 2

விலை மதிப்பு: 4,899 ரூபாய்

முக்கியமான அம்சங்கள்:

* POLED திரை

* நடை, நடந்த தூரம், கலோரி மற்றும் தூக்கத்தை கண்காணிக்கவல்லது

* ஓட்டப்பயற்சி, நீச்சல் பயற்சி மற்றும் மூச்சுப்பயிற்சியை கண்காணிக்கவல்லது

* 5 ATM நீரை உட்புக விடாமல் தடுக்கும் திறன்

* உறக்க கண்காணிப்பு மற்றும் தகவல் சேகரிப்பு

* நமக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்தி, இ-மெயில் மற்றும் வாட்ஸாப் போன்ற சமுக வலைத்தளங்களின் அறிவுப்புகளையும் உடனுக்குடன் தெரியப்படுத்தவல்லது.

* தன்னிச்சையாக இயங்கும் GPS அமைப்பு (பேண்ட் 2 ப்ரோ-ல் மட்டும்)

* இதய துடிப்பை கண்காணிக்கவல்லது

* 100 mAh பேட்டரி, 21 நாட்கள் வரை தாக்குப்பிடிக்க கூடியது. GPS முறையில் 3.5 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் (பேண்ட் 2 ப்ரோ-ல் மட்டும்).

சியோமி எம் ஐ பேண்ட் 3

சியோமி எம் ஐ பேண்ட் 3

விலை மதிப்பு: 1,999 ரூபாய்

முக்கியமான அம்சங்கள்:

* ௦.87 இன்ச் சாக்லேட் தொடுதிரை(128 * 80 பிக்சல்ஸ்). கீறல்கள் விழாத மற்றும் கைரேகை பதிய விடாத திரை. இந்த திரையில் நேரம், இதய துடிப்பு, வானிலை நடவடிக்கைகளை பற்றி பார்த்து கொள்ளலாம்.

* போடொப்லெதிஸ்மோகிராபி (Photoplethysmography -PPG )/ இதய துடிப்பு கண்காணிப்பு கருவி

* உடற்தகுதியை கண்காணிப்பதுடன் தூக்கத்தையும் ஆராயவல்லது.

* வெறும் 8.5 கிராம் மட்டுமே எடை உள்ளது.

* 5 ATM நீரை உட்புக விடாமல் தடுக்கும் திறன்

* ப்ளூடூத் V4.2 LE

* 110mAh பாலிமெர் பேட்டரி ஆனது 20 நாட்கள் வரக்கூடியது.

லெனோவா HV03F ஸ்பெக்ட்ரா

லெனோவா HV03F ஸ்பெக்ட்ரா

விலை மதிப்பு: 1,999 ரூபாய்

முக்கியமான அம்சங்கள்:

* டிஎப்டி- எல்சிடி திரை

* ப்ளூடூத் V4.௨

* லித்தியம் பாலிமர் பேட்டரி

ஜெப்ரோனிக்ஸ் ZEB - FIT400

ஜெப்ரோனிக்ஸ் ZEB - FIT400

விலை மதிப்பு: 1,250 ரூபாய்

முக்கியமான அம்சங்கள்:

* 70mAh லித்தியம் பாலிமர் பேட்டரி

* பேட்டரி சுமார் 15 நாட்களுக்கு மேலும் வரக்கூடியது.

* இதய துடிப்பு கண்காணிப்பு

* ஜெப்ரோனிக்ஸ்-ன் இலவச உதவி எண்: 1800-102-0000

சிஸ்கா ஸ்மார்ட் பிட் ஆக்ட்டிவ் SF - 31

சிஸ்கா ஸ்மார்ட் பிட் ஆக்ட்டிவ் SF - 31

விலை மதிப்பு: 1,438 ரூபாய்

முக்கியமான அம்சங்கள்:

* தொடர்ச்சியான இதய துடிப்பு கண்காணிப்பு

* நடக்கும் காலடி தூரம் கணக்கீடுதல்

* தூக்க கண்காணிப்பு

* அழைப்பவர் மற்றும் குறுஞ்செய்தி அறிவிப்பு

லெனோவா HX03 கார்டியோ

லெனோவா HX03 கார்டியோ

விலை மதிப்பு: 1,799 ரூபாய்

முக்கியமான அம்சங்கள்:

* ௦.96 இன்ச் செவ்வக வடிவ திரை (128 * 64 பிக்ஸெல்ஸ்)

* வாகனத்தை ஓட்டும் போது நமக்கு களைப்பு உண்டாகி கவனம் சிதறும் முன்பு, நமக்கு இந்த பேண்ட் எச்சரிக்கை செய்கிறது

* நிலையான மற்றும் தொடர்ச்சியான இதய துடிப்பு கண்காணிப்பு

* இதில் உள்ள இயக்கத்தை கண்காணிக்கும் சென்சார் மூலம் நீண்ட நேரம் ஒரு இடத்தில இருக்கும் பொழுது இந்த பேந்து நமக்கு எச்சரிக்கை செய்தி அனுப்புகிறது.

போர்ட்ரோனிக்ஸ் யோகிக் HR

போர்ட்ரோனிக்ஸ் யோகிக் HR

விலை மதிப்பு: 1,999 ரூபாய்

முக்கியமான அம்சங்கள்:

* தொடர்ச்சியாக இதய துடிப்பை கண்காணித்து நாம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

* 3 - ஆக்ஸிஸ் ஆக்சிலரோமீட்டர் உதவியுடன், நம் கைகளை தூக்கும் பொழுது தானாகவே திரையை ஒளிரச்செய்கிறது.

* நடை, நடந்த தூரம், கலோரி மற்றும் தூக்கத்தை கண்காணிக்கவல்லது

* இதன் வாரினை நாமல் மாற்றிக்கொள்ள முடியும்

* காந்த சார்ஜெர்

* நீரை உட்புகாமல் தடுக்கவல்லது (IP67)

* ப்ளூடூத் 4.2 , ஆண்ட்ராய்டு 4.4 பதிப்பிற்கு மேலே வந்த அனைத்து மொபைல்களுடனும் இயங்கவல்லது.

* மொபைல் அறிவிப்புகளை பேண்டிலேயே அறிவிக்கவல்லது

ஃபிட்பிட் அல்டா HR

ஃபிட்பிட் அல்டா HR

விலை மதிப்பு: 8,285 ரூபாய்

முக்கியமான அம்சங்கள்:

* மிகவும் மெலிதான வடிவைப்புடன் உள்ள இந்த பேண்ட், தொடர்ச்சியாக இதய துடிப்பை கண்காணிக்கவல்லது

* இதில் உள்ள அம்சத்தின் மூலம், நம் குறிக்கோள்களுக்கு ஏற்றவாறு சரியான பயிற்சி முறையை கண்டறியலாம்

* ஆள் நிலை உறக்கம், துரித கண்ணசைவுகளுடன் கூடிய உறக்கத்தை நன்றக கண்காணிக்கவல்லது

* தானாகவே நடை, நடந்த தூரம், கலோரி மற்றும் தூக்கத்தை கண்காணிக்கவல்லது

* ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும்

போர்ட்ரோனிக்ஸ் யோகிக் எக்ஸ்

போர்ட்ரோனிக்ஸ் யோகிக் எக்ஸ்

விலை மதிப்பு: 2,089 ரூபாய்

முக்கியமான அம்சங்கள்:

* OLED தொடுதிரை(64* 32 பிக்சல்ஸ்)

* நடை, நடந்த தூரம், கலோரி மற்றும் தூக்கத்தை கண்காணிக்கவல்லது

* மொபைலை மறந்துவிட்டால் எச்சரிக்கை செய்யும் அம்சம்

* அதிர்வு அலாரம்

* நமக்கு ஆண்ட்ராய்டு அல்லது ஆப்பிள் மொபைல்களில் இருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் அறிவுப்புகளையும் உடனுக்குடன் தெரியப்படுத்தவல்லது.

* ப்ளூடூத் V4.0LE

* நீர் மற்றும் தூசியை தடுக்கும் அம்சம்(IP67)

* சென்சார் 3 -ஆக்சிஸ் ஆக்சிலரோமீட்டர்

* 55 mAh பேட்டரி 5 நாட்கள் வரை தாக்குப்பிடிக்க கூடியது

ஹுவாய் பிட்

ஹுவாய் பிட்

விலை மதிப்பு: 9,999 ரூபாய்

முக்கியமான அம்சங்கள்:

* 1.04 இன்ச் எல்சிடி தொடுதிரை(208* 208 பிக்சல்ஸ்)

* ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐஒஸ் 8.௦ மொபைல்களுடன் இயங்கவல்லது

* சென்சார்கள்: 6 -ஆக்சிஸ் (ஆக்சிலரோமீட்டர் + கைரோ) சென்சார், CAP சென்சார், இதய துடிப்பு சென்சார், சுற்றுப்புற ஒளி சென்சார்

* தூக்க கண்காணிப்பு

* ப்ளூடூத் 4.2 LE

* நீர் மற்றும் தூசியை தடுக்கும் அம்சம்(IP67)

* 80 mAh பேட்டரி 6 நாட்கள் வரை தாக்குப்பிடிக்க கூடியது

லெனோவா ஸ்மார்ட் பேண்ட் HW01

லெனோவா ஸ்மார்ட் பேண்ட் HW01

விலை மதிப்பு: 1,648 ரூபாய்

முக்கியமான அம்சங்கள்:

* 0.91 இன்ச் OLED தொடுதிரை(128* 32பிக்சல்ஸ்)

* இதய துடிப்பு கண்காணிப்பு

* அதிர்வு அலாரம், தூக்க கண்காணிப்பு

* எடை: 22 கிராம்

* ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஸ் மொபைல்களுடன் இயங்கவல்லது

* நீர்புகா பாதுகாப்பு (IP67 )

* ப்ளூடூத் 4.2 LE

* 85 mAh பேட்டரி 5 நாட்கள் வரை தாக்குப்பிடிக்க கூடியது

ஃபிட்பிட் சார்ஜ் 2

ஃபிட்பிட் சார்ஜ் 2

விலை மதிப்பு: 7,499 ரூபாய்

முக்கியமான அம்சங்கள்:

* 24/7 தொடர்ச்சியான இதய கண்காணிப்பு

* நாள்முழுவதும் நடை, நடந்த தூரம், கலோரி மற்றும் தூக்கத்தை கண்காணிக்கவல்லது

* வழிகாட்டுதல் மூலம் சுவாச பயிற்சி செய்யலாம்

* OLED திரை

* GPS சென்சார் கண்காணிப்பு

* நீர் உட்புகா திறன்

சோனி ஸ்மார்ட்பேண்ட் SWR10

சோனி ஸ்மார்ட்பேண்ட் SWR10

விலை மதிப்பு: 2,972 ரூபாய்

முக்கியமான அம்சங்கள்:

* எடை: 21 கிராம்

* ப்ளூடூத் 4.௦

* சிறிய மற்றும் பெரிய நீளத்தில் இரண்டு வார்கள்

* ஆண்ட்ராய்டு 4.4 பதிப்பிற்கு மேலே வந்த அனைத்து மொபைல்களுடனும் இயங்கவல்லது.

* என்எப்சி அல்லது ப்ளூடூத் உதவியடன் இதனை மிகவும் எளிதாக மொபைல் உடன் இணைத்துக்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Best Buying Guide Good smart bands to buy in 2019 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X