அதிகரித்தது வெயில்.. கவலை வேண்டாம்.. இந்த 5 ஏர் கூலர்கள் போதும்.. வீட்டை கொடைக்கானல் போல மாற்றலாம்..
தமிழ்நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டி வருகிறது. குறிப்பாக இந்த வெப்பத்தில் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள் மக்கள் இளநீர், குளிர்பான கடைகளை நாடி வருகின்றனர்.
இன்னும் சிலர் ஏசி, ஏர் கூலர், மினி ஏர் கூலர் (Air Cooler) போன்ற சாதனங்களை வாங்கத் தொடங்கிவிட்டனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்தியாவில் தரமான வசதிகளுடன் கிடைக்கும் ஐந்து சிறந்த பிராண்டட் ஏர் கூலர் மாடல்களின் பட்டியலை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

1.ஓரியண்ட் எலக்ட்ரிக் Tornado 88எல் டெசர்ட் ஏர் கூலர் (Orient Electric Tornado 88L Desert Air Cooler) மாடல் ஆனது தற்போது அமேசான் தளத்தில் ரூ.9,299 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது.
குறிப்பாக 88 லிட்டர் வாட்டர் டேங்க், ஹனிகோம்ப் கூல் பேட், இன்வெர்ட்டர் இணக்கமானது, 3650 mch ஏர் டெலிவரி, 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection), ஐஸ் சேம்பர் (Ice Chamber), 3 ஸ்பீடு கண்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த ஓரியண்ட் எலக்ட்ரிக் Tornado 88எல் டெசர்ட் ஏர் கூலர் மாடல் வெளியானது.
2.கிராம்ப்டன் ஆப்டிமஸ் 100 எல் டெசர்ட் ஏர் கூலர் (Crompton Optimus 100 Litres Desert Air Cooler) மாடல் தற்போது அமேசான் தளத்தில் ரூ.13,440 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.2500 வரை தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த சாதனத்தை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.
100 லிட்டர் வாட்டர் டேங்க், ஹனிகோம்ப் கூல் பேட்,இன்வெர்ட்டர் இணக்கமானது, 5500 m3/hr ஏர் டெலிவரி, 3 ஸ்பீடு கண்ட்ரோல், எவர்லாஸ்ட் பம்ப், Auto-Fill உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த கிராம்ப்டன் ஆப்டிமஸ் 100 எல் டெசர்ட் ஏர் கூலர் மாடல் வெளியாகி உள்ளது.
3.பஜாஜ் டிஎம்எச் 90 நியோ 90எல் டெசர்ட் ஏர் கூலர் (Bajaj DMH 90 Neo 90L Desert Air Cooler) மாடல் அமேசான் தளத்தில் ரூ.10,999 விலையில் வாங்க கிடைக்கிறது. 90 லிட்டர் வாட்டர் டேங்க், 3 ஸ்பீடு கண்ட்ரோல், இன்வெர்ட்டர் இணக்கமானது, பாக்டீரியா எதிர்ப்பு கொண்ட ஹனிகோம்ப் கூல் பேட், ஐஸ் சேம்பர், 5600 CMH ஏர் டெலிவரி உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளன.

4.சிம்பொனி ஸ்டார்ம் சி100 எக்ஸ்எல் டெசர்ட ஏர் கூலர்(Symphony Storm C100 XL Desert Air Cooler) மாடல் ஆனது தற்போது அமேசான் தளத்தில் ரூ.11,991 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.2500 வரை தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த சாதனத்தை கம்மி விலையில் வாங்கிவிட முடியும். மூன்று பக்கமும் ஹனிகோம்ப் கூல் பேட், 89 லிட்டர் வாட்டர் டேங்க், CFD டெக்னாலஜி உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.
5.கென்ஸ்டார் ஏர்குரூஸர் 125எல் டெசர்ட் ஏர் கூலர் (Kenstar AirCruzer 125L Desert Air Cooler) மாடல் ஆனது ரூ.13,190 விலையில் வாங்க கிடைக்கிறது. 125 லிட்டர் வாட்டர் டேங்க், ஹனிகோம்ப் கூல் பேட், இன்வெர்ட்டர் இணக்கமானது, 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection), ஐஸ் சேம்பர் (Ice Chamber), 3 ஸ்பீடு கண்ட்ரோல் போன்ற பல வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளன.


Click it and Unblock the Notifications








