சுட்டெரிக்கும் வெயில்.. ரூ.3299 பட்ஜெட்ல வீடு குளு குளுன்னு இருக்கும்.. இந்த ஏர் கூலர்கள் போதும்.. எந்த மாடல்?
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயில் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. அதேசமயம் கடந்த சில நாட்களாக மழை பெய்தாலும் கூட பெரும்பாலான இடங்களில் வெப்பம் உச்சத்தில் இருக்கிறது. குறிப்பாக வெயில் அதிகமாக காணப்படும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரையில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
அதேபோல் ஏசி, ஏர் கூலர், மினி ஏசி போன்ற சாதனங்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. தற்போது பல முன்னணி நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் ஏசி, ஏர் கூலர், மினி ஏசி சாதனங்களை விற்பனை செய்து வருகின்றன. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் கம்மி விலையில் வாங்க கிடைக்கும் ஏர் கூலர்களை (air coolers) இப்போது பார்க்கலாம்.

சன்சோய் 37 எல் ரூம்/ பெர்சனல் ஏர் கூலர் (Sansui 37 L Room/Personal Air Cooler) ஆனது முன்பு ரூ.8,799 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இந்த ஏர்கூலர் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.4,299 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சன்சோய் ஏர் கூலர் மாடலை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.3,299 விலையில் இந்த சாதனத்தை வாங்கிவிட முடியும்.
இந்த சன்சோய் 37 எல் ரூம்/ பெர்சனல் ஏர் கூலர் ஆனது 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection). அதேபோல் 37 லிட்டர் டேங்க் கெப்பாசிட்டி, ஹனிகோம்ப் பேட் (honeycomb pads), 1330 RPM மோட்டார் ஸ்பீடு உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த சன்சோய் ஏர் கூலர் மாடலில் உள்ளன.
ஓரியண்ட் எலக்ட்ரிக் 46 எல் ரூம்/ பெர்சனல் ஏர் கூலர்(Orient Electric 46 L Room/Personal Air Cooler) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தற்போது 45 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.5,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏர் கூலர் மாடலை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே ஓரியண்ட் எலக்ட்ரிக் 46 எல் ரூம்/ பெர்சனல் ஏர் கூலர் மாடலை ரூ.4,999 விலையில் வாங்கிவிட முடியும்.
2100 cfm ஏர் டெலிவரி, 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection),3 ஸ்பீடு கண்ட்ரோல், 46 லிட்டர் வாட்டங் டேங்க் கெப்பாசிட்டி உள்ளிட்ட பல வசதிகள் ஓரியண்ட் எலக்ட்ரிக் 46 எல் ரூம்/ பெர்சனல் ஏர் கூலர் மாடலில் உள்ளன. மேலும் இது இன்வெர்ட்டர் இணக்கமான ஏர் கூலர் ஆகும்.

கென்ஸ்டார் 45 எல் ரூம்/ பெர்சனல் ஏர் கூலர் (Kenstar 45 L Room/Personal Air Cooler) ஆனது முன்பு ரூ.10,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் இந்த ஏர் கூலர் மாடலுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடி மூலம் ரூ.5,499 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யயப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏர் கூலர் மாடலை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே கென்ஸ்டார் 45 எல் ரூம்ஃ பெர்சனல் ஏர் கூலர் மாடலை ரூ.4,499 விலையில் வாங்கிவிட முடியும்.
45 லிட்டர் வாட்டங் டேங்க், 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection), 2200 m3/h ஏர் டெலிவரி, ஹனிகோம்ப் பேட், 3 ஸ்பீடு கண்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் கென்ஸ்டார் 45 எல் ரூம்/ பெர்சனல் ஏர் கூலர் மாடல் வெளிவந்தது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.


Click it and Unblock the Notifications