பட்ஜெட்டில் பெஸ்ட் Bluetooth Mouse தேடிட்டு இருக்கீங்களா? இதான் நம்பர் ஒன்!
நம்ம என்னதான் லேப்டாப் (Laptop) டேப்லெட்னு (Tablet) வாங்கிப் பயன்படுத்தினாலும், மவுஸ் (Mouse) பயன்படுத்தும் போது மட்டுமே கூடுதலா ஒரு கிரிப் கிடைக்கும். சும்மா மின்னல் வேகத்துல ஒரு வேலையை செஞ்சு முடிக்க முடியும். இதனால தான் டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்தும், மவுஸ் பயன்பாடு மட்டும் மாறாம அப்படியே இருக்கு.
இப்ப வரைக்கும் நிறைய பேர் லேப்டாப்ல கூட மவுஸ்தான் பயன்படுத்துறாங்க. சொல்லப்போனால், ஆண்ட்ராய்டு டேப்லெட்ஸ் (Android Tablet), ஆப்பிள் ஐபேட்ஸ்ல (Apple iPad) கூட மவுஸ் பயன்படுத்துற வசதி இருக்கு. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த மவுஸ், மார்கெட்டுல புதுப்புது டிசைன்ல கிடைக்குது. அதுல வயர்லெஸ் மவுஸ்களுக்கு கிராக்கி கொஞ்சம் அதிகமாவே இருக்கு. நிறையப்பேர் பல பிராண்ட் மவுஸ் வாங்கி பயன்படுத்திப் பாத்திருப்பிங்க.

சில மவுஸ் சீக்கரமாவே வேலை செய்யமா போயிருக்கும். அதிகமா காசு கொடுத்து வாங்குனாதான், நீண்ட காலம் உழைக்கும்னு கூட முடிவு பண்ணிருப்பீங்க. சில பேர் கம்மி விலையில பெஸ்ட் மவுஸ் தேடிட்டு இருப்பீங்க. அப்படிப்பட்டவங்களுக்கு அசுஸ் மார்ஷ்மெல்லோ மவுஸ் எம்டி 100 (Asus Marshmallow Mouse MD100) தான் முதல் சாய்ஸா இருக்கும். இந்த மவுஸ் இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்போது, ரூ.1499-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இப்போது சில இகாமர்ஸ் தளங்களில் ஆஃபர்களில் கிடைக்கிறது. இந்த மவுஸின் டிசைனை பார்த்தலே உங்களுக்கு வாங்கத் தோன்றும். அதேபோல அம்சங்களும் வேற லெவலில் இருக்கும். சில பேருக்கு கைக்கு அடக்கமான மவுஸ்தான் பிடித்தமானதான் இருக்கும். அவங்களுக்கு இந்த மவுஸ்தான் கரெக்ட்டா இருக்கும். நீங்க பாக்கெட்டுல போட்டு எடுத்துட்டு போற மாதிரி காம்பேக்ட்டா (Compact) இருக்கும்.
அசுஸ் மார்ஷ்மெல்லோ மவுஸ் எம்டி 100 அம்சங்கள் : இந்த ப்ளூடூத் மவுஸ் (Bluetooth Mouse) RF 2.4GHz வயர்லெஸ் இணைப்பு திறன் கொண்டது. 10 மீட்டர் தூரம் சுற்றளவு வரையில் இணைத்துக்கொள்ள முடியும். ஆப்டிக்கல் (Optical) டிராக்கிங் கொண்டது. இந்த மவுஸை குரோம் ஒஎஸ் (Chrome OS), மேக்ஒஎஸ் 12 (macOS 12), விண்டோஸ் 10 (Windows 10 and 11) மற்றும் 11 ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
107 மிமீ நீளம், 60 மிமீ அகலம், 27.8 மிமீ அகலம் கொண்டது. எடையை பொறுத்தவரையில் வெறும் 56 கிராம் மட்டுமே உள்ளது. 800dpi, 1000dpi, 1600dpi ரெசொலுஷன் (Resolution) உடையது. இதில் AA*1 டைப் பேட்டரியை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு பேட்டரிக்கு 12 மாதங்கள் வரை பேக்-அப் கிடைக்கும். இது கொய்ட் ப்ளூ செட் (Quiet Blue set) மற்றும் லைலேக் மிஸ்ட் பர்ப்பிள் செட் (Lilac Mist Purple set ) கலர்களில் மேட் ஃபினிஷிங் உடன் கிடைக்கிறது.
இந்த மவுஸை நீங்கள் வாங்கினால், அந்த பேக்கிங்கில் மவுஸ் (Mouse), டாங்கிள் (Dongle), பேட்டரி (Battery), வாரண்டி கார்டு (Warranty Booklet ), மவுஸ் கவர் (Extra Mouse Cover) ஆகியவை இருக்கும். இதன் முக்கியமான அம்சம் என்னவென்றால், நீங்கள் ஒவ்வொரு முறை கிளிக் செய்யும்போதும் ஏற்படும் சத்தம் துளிக்கூட வெளியே கேட்காது.


Click it and Unblock the Notifications








