Home
Gadgets

வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. கம்மி விலையில் கிடைக்கும் செக்யூரிட்டி கேமராக்கள்.. 128ஜிபி மெமரி.. 2K ரெசல்யூஷன்..

தற்போது செக்யூரிட்டி கேமரா (Security Camera)இல்லாத வீடுகளை எளிதாக விரல் விட்டு எண்ணி விடலாம். அதாவது எங்கு பார்த்தாலும் வீட்டின் முன் ஒரு கேமரா தொங்கி கொண்டிருக்கிறது. அதுவும் வீட்டில் யாராவது ஒரு இருந்து பார்த்துக் கொள்ளும் நம்பிக்கையைக் கொடுக்கிறது இந்த செக்யூரிட்டி கேமராக்கள்.

அதேபோல் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு செக்யூரிட்டி கேமரா மாடல்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகின்றன. இதுதவிர மழை, வெயில் காலங்களுக்கு தகுந்தபடி சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் செக்யூரிட்டி கேமரா மாடல்கள் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது கம்மி விலையில் வாங்க கிடைக்கும் சிறந்த செக்யூரிட்டி கேமரா மாடல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

கம்மி விலையில் கிடைக்கும் செக்யூரிட்டி கேமராக்கள்.!

சியோமி 360° ஹோம் செக்யூரிட்டி கேமரா 1080p 2i (Xiaomi Mi Wireless Home Security Camera 2i) மாடல் ஆனது அமேசான் தளத்தில் ரூ.2,099 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த செக்யூரிட்டி கேமரா மாடலை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே சியோமி செக்யூரிட்டி கேமராவை கம்மி விலையில் வாங்கிவிட முடியும். அதுவும் இதில் 2MP கேமரா உள்ளது. இது 1080p தரத்தில் வீடியோவை ரெக்கார்ட் செய்கிறது.

அதேபோல் சியோமி 360° ஹோம் செக்யூரிட்டி கேமரா 1080p 2i ஆனது முழு 360° வியூவில் நேராகவும் 108° செங்குத்தாகவும் திரும்பக் கூடியது. டூயல் IR LED உடன் கூடிய நைட் மோட் வீடியோ ரெக்கார்டிங் அம்சம் மற்றும் AI ஹியூமன் ரெகக்னிஷன் அம்சம் இதில் உள்ளது. இதுதவிர இந்த கேமராவை மொபைல் மூலம் கட்டுப்படுத்த முடியும். பின்பு பின்பு இது 64ஜிபி வரையிலான ஸ்டோரேஜை ஆதரிக்கிறது.

சிபி பிளஸ் சிபி-இ41ஏ 2கே 4எம்பி (CP PLUS CP-E41A 2K) செக்யூரிட்டி கேமரா ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.2099 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த செக்யூரிட்டி கேமராவை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. மேலும் இதில் உள்ள கேமராவில் 4எம்பி ரெசல்யூஷன் உள்ளது. அதேபோல் 360 டிகிரி வைட் ஆங்கிள் வியூ, மோஷன் டிடெக்சன் அலெர்ட், ஐஆர் லைட், அலெக்சா மற்றும் கூகுள் சப்போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த செக்யூரிட்டி கேமராவில் உள்ளது.

டிபி-லிங் Tapo 3MP 1296 ஹை டெபினிஷன் அவுட்டோர் சிசிடிவி கேமரா (TP-Link Tapo 3MP 1296p High Definition Outdoor CCTV Camera) ஆனது அமேசான் தளத்தில் ரூ2599 விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. 128ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆதரவு, எஸ்டி கார்டு ஸ்லாட் சப்போர்ட், 2 வே ஆடியோ, பில்ட் இன் லைட், அமேசான் அலெக்சா கண்ட்ரோல், எச்டி ரெசல்யூஷன் ஆதரவு உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன.

டிடிசிஎல் DuoXR 3எம்பி டூயல் லென்ஸ் வயர்லெஸ் வைஃபை ஸ்மார்ட் சிசிடிவி கேமரா (DDLC DuoXR 3MP Dual Lens Wireless WiFi Smart CCTV Camera) மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1899 விலையில் வாங்க முடியும். குறிப்பாக ஏபி ஹாட்ஸ்பாட், மோஷன் டிடெக்சன் அலெர்ட், நைட் விஷன், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த செக்யூரிட்டி கேமராவில் உள்ளன.

கம்மி விலையில் கிடைக்கும் செக்யூரிட்டி கேமராக்கள்.!

பிலிப்ஸ் 3எம்பி வைஃபை இன்டோர் 360 டிகிரி செக்யூரிட்டி கேமரா (PHILIPS 3MP Wi-Fi Indoor 360 Degree Security Camera) மாடல் அமேசான் தளத்தில் ரூ.2,799 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த கேமராவை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த கேமராவை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

குறிப்பாக பான்-டில்ட் ஜூம் (Pan Tilt Zoom), 2கே ரெசல்யூஷன், ஸ்மார்ட் அலெர்ட், நைட் விஷன், 128ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆதரவு, வைஃபை கனெக்டிவிட்டி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் பிலிப்ஸ் 3எம்பி வைஃபை இன்டோர் 360 டிகிரி செக்யூரிட்டி கேமரா வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best affordable security CCTV cameras available in India: Here is the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X