கொளுத்தும் கோடை வெயில்.. பட்ஜெட் விலையில் கிடைக்கும் 5 AC.. அள்ளித் தரும் அமேசான் ஆஃபர்.. எந்தெந்த மாடல்?
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்து வருகிறது. அதுவும் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததில் இருந்து வெப்பநிலை அதிகமாகப் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் கோடை மழை பெய்தாலும் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை தான் நிலவி வருகிறது.
குறிப்பாக மதிய நேரத்தில் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு வெப்பநிலை பதிவாகி வருகிறது. அதேபோல் ஏசி விற்பனையும் நாடு முழுவதும் 100 மடங்கு அதிகரித்து உள்ளது. அதாவது மக்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஏசி சாதனங்களை வாங்கி வருகின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்தியாவில் வாங்கச் சிறந்த 5 ஏசி மாடல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

1.Lloyd AC:அமேசான் தளத்தல் Lloyd 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்ப்ளிட் ஏசி (Lloyd 1.5 Ton 3 Star Inverter Split AC) மாடலுக்கு அமேசான் தளத்தில் 44 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.32,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்த இந்த ஏசி மாடலை வாங்கினால் ரூ.850 தள்ளுபடியும் உள்ளது.
Lloyd 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்ப்ளிட் ஏசி ஆனது எல்இடி டிஸ்ப்ளே, டர்போ கூல், 1.5 டன் கெப்பாசிட்டி, ரிமோட் கண்ட்ரோல் உள்ளிட்ட பல ஆதரவுகளுடன் வெளிவந்தது. மேலும் இது 5 இன் 1 கன்வெர்டிபிள் ஏசி ஆகும். அதேபோல் இந்த ஏசி குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும், ஆனாலும் கோடைக் காலங்களிலும் சீரான குளிர்ச்சியை வழங்குகிறது.

2.ப்ளூ ஸ்டார் ஏசி: ப்ளூ ஸ்டார் 1 டன் 3 ஸ்டார் கன்வெர்டிபிள் 5 இன் 1 கூலிங் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி (Blue Star 1 Ton 3 Star Convertible 5 in 1 Cooling Inverter Split AC) ஆனது அமேசான் தளத்தில் ரூ.34,920-க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏசி மாடலை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது.
3 ஸ்டார், 5 இன் 1 மோட், ஸ்லீப் மோட், ஆட்டோ-ரீஸ்டார்ட் செயல்பாடு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ப்ளூ ஸ்டார் ஏசி. மேலும் கூல் மோட், ஃபேன் மோட், ட்ரை மோட் போன்ற உங்கள் தேவைகளின் அடிப்படையில் வெவ்வேறு கூலிங் மோடுகளைத் தேர்வுசெய்ய இது உங்களை அனுமதிக்கிறது. ப்ளூ ஸ்டாரின் ஸ்மார்ட் ஆப்ஸைப் பயன்படுத்தி, வாய்ஸ் கமாண்ட் மூலம் மூலம் இந்த ஏசி இயக்க முடியும்.
3. வோல்டாஸ் ஏசி: வோல்டாஸ் 1.5 டன் 3 ஸ்டார் அட்ஜஸ்டபிள் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி (Voltas 1.5 Ton 3 Star, Inverter Split AC) அமேசானில் ரூ.33,100 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏசி மாடலை வாங்கினால் கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும். குறிப்பாக 4 கூலிங் மோட், எல்இடி டிஸ்பிளே, ஸ்லீப் மோட், டர்போ, அட்ஜெஸ்டபிள் கூலிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது.
4.எல்ஜி ஏசி: எல்ஜி 1 டன் 4 ஸ்டார் டூயல் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி (LG 1 Ton 4 Star DUAL Inverter Split AC) மாடலுக்கு அமேசானில் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.36,290-க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏசி மாடலை வாஙகினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது.
ஏஐ கன்வெர்டிபிள் 6 இன் 1 கூலிங், 4வே ஸ்விங்க் (4 Way Swing), எச்டி பில்டர், ஆண்டிவைரஸ் ப்ரொடெக்ஷன், உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த எல்ஜி ஏசி மாடல். மேலும் மேஜிக் டிஸ்ப்ளே, டூயல் இன்வெர்ட்டர் கம்ப்ரசர், கம்ஃபோர்ட் ஏர், ஆட்டோ கிளீன், ஆஃப் டைமர், ஸ்லீப் மோட், ஆட்டோ ரீஸ்டார்ட் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த எல்ஜி ஏசி வாங்க கிடைக்கும்.

5.பானாசோனிக் 1.5 டன் 3 ஸ்டார் வைஃபை இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி (Panasonic 1.5 Ton 3 Star Wi-Fi Inverter Smart Split AC) மாடலுக்கு அமேசானில் 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.36,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏசி மாடலை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது.
7 இன் 1 கன்வெர்டிபிள் மோட், ஏஐ அம்சம், வாய்ஸ் அசிஸ்டண்ட், லோ நாய்ஸ் லெவல், இன்வெர்ட்டர் கம்ப்ரசர் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களுடன் இந்த பானாசோனிக் 1.5 டன் 3 ஸ்டார் வைஃபை இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி வெளிவந்துள்ளது. மேலும் இது சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








