Home
Gadgets

இந்தியாவில் வாங்கச் சிறந்த 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்: இதோ பட்டியல்.!

இந்தியாவில் 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை விட 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்க நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது தரமான டிஸ்பிளே, சூப்பர் பிரைட்நஸ் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது.

55-இன்ச் ஸ்மார்ட் டிவி

55-இன்ச் ஸ்மார்ட் டிவி

குறிப்பாக சில நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் இப்போது இந்தியாவில் வாங்கச் சிறந்த 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலைப் பார்ப்போம்.

1ரெட்மி 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி 55-இன்ச்

1ரெட்மி 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி 55-இன்ச்

அமேசானில் ரெட்மி 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி 55-இன்ச் மாடலை ரூ.39,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 4கே அல்ட்ரா எச்டி ஆதரவு மற்றும் டால்பி விஷன் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளதால் நல்ல திரை அனுபவத்தை கொடுக்கும்.

மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல சிறப்பான வசதிகளை கொண்டு வெளிவந்துள்ளது ரெட்மி ஸ்மார்ட்
டிவி. குறிப்பாக ஆண்ட்ராய்டு டிவி 10 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த 55-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்.

டால்பி ஆடியோ மற்றும் DTS Virtual ஆதரவு கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டு வெளிவந்துள்ளது ரெட்மி 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி 55-இன்ச் மாடல்.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

ரெட்மி 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி 55-இன்ச் மாடலில் நெட்ஃபிக்ஸ்,பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற அனைத்து ஆப்ஸ்களையும்பயன்படுத்த முடியும்.

பின்பு Chromecast ஆதரவு, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட்கள், யுஎஸ்பி போர்ட், ஆப்டிகல் போர்ட்எனப் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த 55-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி.

2.ஒன்பிளஸ் U Series 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி 55-இன்ச்

2.ஒன்பிளஸ் U Series 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி 55-இன்ச்

ஒன்பிளஸ் U Series 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி 55-இன்ச் மாடலை அமேசான் தளத்தில் ரூ.44,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாகஇந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி 3840 x 2160 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது.

மேலும் Dynaudio மற்றும் டால்பி ஆடியோ ஆதரவைக் கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த 55-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி.எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் காமா எஞ்சின், ஆண்ட்ராய்டு டிவி 10 இயங்குதளம், HDR10+ சான்றிதழ் மற்றும் பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி.

நம்பி வாங்கலாம்

நம்பி வாங்கலாம்

கேமிங் கன்சோலை இணைக்க 3எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட், கூகுள் அசிஸ்டன்ட், வைஃபை, ஈதர்நெட் போன்ற பல அசத்தலான வசதிகளுடன் வெளிவந்துள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக விலைக்கு தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி. எனவேஇந்த டிவியை நம்பி வாங்கலாம்.

3.எல்ஜி 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி 55-இன்ச்

3.எல்ஜி 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி 55-இன்ச்

எல்ஜி 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி 55-இன்ச் மாடலை அமேசான் தளத்தில் ரூ.44,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இதில் உள்ள
4கே அல்ட்ரா ஹை-டெபினிஷன் சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும்.

அதேபோல் ஆக்டிவ் எச்டிஆர் தொழில்நுட்பம் வசதியைக் கொண்டுள்ளது இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த டிவி குவாட்-கோர் பிராசஸர் 4கேஆதரவுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மேலும் 3840x2160 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது எல்ஜி 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி 55-இன்ச்மாடல். ஆனால் இந்த ஸ்மார்ட் 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த கேமிங் அனுபவம்

சிறந்த கேமிங் அனுபவம்

எல்ஜி 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி 55-இன்ச் மாடல் ஆனது சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும். மேலும் WebOS, AI ThinQ, பில்ட்-இன் கூகுள் அசிஸ்டன்ட் & அலெக்சா, புளூடூத், வைஃபை, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டு
வெளிவந்துள்ளது இந்தஎல்ஜி ஸ்மார்ட் டிவி மாடல்.

4.சாம்சங் Crystal 4K Series அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி-2021 மாடல்

4.சாம்சங் Crystal 4K Series அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி-2021 மாடல்

55-இன்ச் கொண்ட சாம்சங் Crystal 4K Series அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலை அமேசான் தளத்தில் ரூ.49,990-விலையில் வாங்க
முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி கிரிஸ்டல் 4K டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. எனவே இது உங்களுக்கு ஒரு தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும்.

அதேபோல் 3840 x 2160 பிக்சல்ஸ் மற்றும் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவி. மேலும் ஏர் ஸ்லிம் வடிவமைப்பு, HDR 10+ ஆதரவு, மெகா கான்டார்ஸ்ட், UHD டிம்மிங் போன்ற தனித்துவமான அம்சங்களை வழங்குகிறது இந்த சாம்சங் ஸ்மார்ட்டிவி.

குறிப்பாக டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் Q Symphony ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமானசாம்சங் Crystal 4K Series அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி.

சாம்சங் டிவி கனெக்டிவிட்டி

சாம்சங் டிவி கனெக்டிவிட்டி

வைஃபை, யுஎஸ்பி போர்ட்,எச்டிஎம்ஐ போர்ட், ஈதர்நெட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

5.சோனி பிராவ்யா 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி - 2022 மாடல்

5.சோனி பிராவ்யா 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி - 2022 மாடல்

55-இன்ச் கொண்ட சோனி பிராவ்யா 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலை அமேசான் தளத்தில் ரூ.63,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாகசோனி எகஸ்1 4கே பிராஸசர் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இதை பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும்.

மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ் மற்றும் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சோனி ஸ்மாரட் டிவி. இதுதவிர 4K X Reality Pro, மோஷன் ஃப்ளோ எக்ஸ்ஆர் 100, Chromecast ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சோனிஸ்மார்ட் டிவி.

கேமிங் கன்சோலை இணைக்க 3 எச்டிஎம்ஐ போர்ட், 2யுஎஸ்பி போர்ட், 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ ஆதரவு உள்ளிட்ட அட்டகாசமான
வசதிகளுடன் வெளிவந்துள்ளது இந்த சோனி ஸ்மார்ட் டிவி.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best 55-inch Smart TVs to Buy in India: Here's the List!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X