Home
Gadgets

கம்மி பட்ஜெட்டில் 50 இன்ச் டிவி தேடுறீங்களா.. 16ஜிபி மெமரி.. டால்பி ஆடியோ.. இதோ சிறந்த 3 டிவிகள்..

இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பட்ஜெட் விலையில் 50 இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கின்றன. குறிப்பாக இந்த பட்ஜெட் விலை டிவிகளுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கம்மி பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த 50 இன்ச் டிவிகளைBest 50 inch smart TVs) ( இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தாம்சன் ஒபி மேக்ஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு (Thomson OP MAX 50 inch 4K Smart Google TV) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது.

கம்மி பட்ஜெட்டில் 50 இன்ச் டிவி தேடுறீங்களா.. இதோ சிறந்த 3 டிவிகள்..

50 இன்ச் தாம்சன் ஸ்மார்ட் டிவி ஆனது 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்கள், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1 பில்லியன் கலர் டெப்த், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த டிவி இயங்குகிறது. அதேபோல் குவாட் கோட் மீடியாடெக் பிராசஸர் கொண்டுள்ளது தாம்சன் ஒபி மேக்ஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி. பின்பு மாலி 450 ஜிபியு (Mali 450 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் எம்இஎம்சி (MEMC) ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான தாம்சன் ஸ்மார்ட் டிவி.

அதேபோல் 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி, இன்-பில்ட் குரோம்காஸ்ட் (In-built Chromecast), கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistan), கூகுள் டிவி கிட்ஸ் மோட் (Google TV Kids Mode), கூகுள் டியோ (Google Duo)போன்ற பல அசத்தலான அம்சங்கள் இந்த 50 இன்ச் தாம்சன் டிவியில் உள்ளன.

மேலும் டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus), டிடிஎஸ் ட்ரூசவுண்ட் (DTS TruSurround) போன்ற ஆடியோ அம்சங்கள் தாம்சன் டிவியில் உள்ளன. பின்பு 40W ஆடியோ அவுட் கொண்ட 2 பாக்ஸ் ஸ்பீக்கர்கள் பேக் செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி தரமான ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் இந்த டிவியுடன் வருகிறது.

ஏசர் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் 50 இன்ச் 4K ஸ்மார்ட் கூகுள் டிவி (Acer Advanced I Series 50 inch 4K Smart Google TV) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.25,999 விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த ஏசர் அட்வான்ஸ்டு டிவி. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 ஆதரவு (HDR10), 1.07 மில்லியன் கலர்ஸ் (16.7 Million Colours), டால்பி விஷன் (Dolby Vision), வைடு கலர் காமட் (Wide Colour Gamut) உள்ளிட் பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. அதேபோல் அல்ட்ரா எச்டி அப்ஸ்கேலிங் (UHD Upscaling), மைக்ரோ டிம்மிங் (Micro Dimming) ஆதரவுகளும் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன.

தரமான குவாட் கோர் பிராசஸர் உடன் இந்த ஏசர் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் 50 இன்ச் டிவி மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV) ஓஎஸ் மூலம் இந்த டிவி இயங்குகிறது. எனவே கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast built-in), கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) போன்ற அனைத்தையும் இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.

அதேபோல் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar) போன்ற பல்வேறு ஓடிடி ஆப்ஸ்களை இந்த ஏசர் டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வெளிவந்தது. குறிப்பாக டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 30W ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த ஏசர் அட்வான்ஸ்டு டிவி மாடல்.

மேலும் ப்ளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், கேமிங் கன்சோல் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஏசர் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் 50 இன்ச் டிவியில் உள்ளன. மேலும் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது.

மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (MOTOROLA EnvisionX 50 inch Ultra HD 4K LED Smart Google TV) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.26,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினர்ல 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது.

மோட்டோரோலா 50 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 1.07 பில்லியன் கலர்ஸ், எச்டிஆர் 10 மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன. குறிப்பாக இந்த டிவி பெசல்-லெஸ் டிஸ்பிளே (Bezel-less Display) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS)மற்றும் குவாட் கோர் மீடியாடெக் 9602 (Quad Core MediaTek 9602) பிராசஸர் உடன் இந்த மோட்டோரோலா 50 இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்தது. மாலி ஜி52 எம்சி1 ஜிபியு (Mali G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் உள்ளது. மேலும் இந்த டிவியில் லேன்(LAN), 2 யுஎஸ்பி போர்ட் (USB Port), 3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), மினி ஏவி போர்ட் (Mini AV Port) மற்றும் ஆப்டிகல் போர்ட் (Optical Port) போன்ற கனெக்டிவிடிட்டி ஆதரவுகளும் உள்ளன.

தனித்துவமான டால்பி அட்மாஸ்(Dolby Atmos), டால்பி டிஜிட்டல் (Dolby Digital), டிடிஎஸ் உள்ளிட்ட பல ஆடியோ அம்சங்கள் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 50 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியில் உள்ளன. குறிப்பாக 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி உடன் இந்த மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 50 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), பில்ட்-இன் குரோம்காஸ்ட் (Built-in Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant), வை-பை (Wi-Fi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) போன்ற பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த மோட்டோரோலா டிவியில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best 50 inch smart TVs available at low prices in India: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X