எது பெஸ்ட் ப்ளூடூத் ஸ்பீக்கர்? ரூ.899 முதல் அலறவிடும் சவுண்ட்.. இந்த மாத டாப் 5 Speaker இதுதான்..
ரூ.999 முதல் ரூ.2000 விலைக்குள் உங்களுக்கு பெஸ்டான புது போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் (portable bluetooth speaker) வாங்க வேண்டுமா? அப்படியானால், இந்த டாப் 5 பெஸ்ட் ப்ளூடூத் ஸ்பீக்கர் (Top 5 best bluetooth speaker November 2023) மாடல்களை பாருங்கள்.
1. மிவி ரோம் 2 (Mivi Roam 2):
இந்த மிவி ரோம் 2 (Mivi Roam 2) ப்ளூடூத் ஸ்பீக்கர் 5W போர்ட்டபிள் ஸ்பீக்கர் ஆக வருகிறது. இது அமேசான் (Amazon) மற்றும் Mivi சைட் வழியாக ரூ.899 என்ற மிகவும் மலிவான விலையில் வாங்க கிடைக்கிறது. இது மிகவும் குட்டியான வடிவமைப்புடன் உயர்தர பாஸ் மற்றும் துல்லியமான சவுண்ட் அம்சத்துடன் வருகிறது. இது 2000mAh பேட்டரி (battery) உடன் 24 மணிநேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது.

2. போட் ஸ்டோன் 352 ப்ளூடூத் ஸ்பீக்கர் (boAt Stone 352 Bluetooth Speaker):
போட் ஸ்டோன் 352 ப்ளூடூத் ஸ்பீக்கர் (boAt Stone 352 Bluetooth Speaker) 10W RMS ஸ்டீரியோ சவுண்ட் (stereo sound) உடன் வருகிறது. இது இப்போது அமேசான் வழியாக ரூ.1,698 விலையில் கிடைக்கிறது. இது அவுட்டோர் IPX7 அம்சத்துடன் வருகிறது. இது 12 மணிநேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. இது முழுமையாக சார்ஜ் செய்ய 2 மணிநேரம் எடுத்துக்கொள்கிறது.
3. ஜேபிஎல் கோ 2 (JBL Go 2):
இந்த ஜேபிஎல் கோ 2 (JBL Go 2) ப்ளூடூத் ஸ்பீக்கர் மைக் அம்சத்துடன் வருகிறது. இது ரூ.1,999 விலை வருகிறது. ஃபுல் வால்யூம் உடன் இது 5 மணிநேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. இது IPX7 வாட்டர் ப்ரூப் அம்சத்துடன் வருகிறது. இது 3.7V, 730mAh பேட்டரி உடன் வருகிறது. இது 2.5 மணி நேர சார்ஜ் நேரத்தை கொண்டுள்ளது. தரமான ஆடியோ வேண்டுமென்றால் இது பெஸ்ட் சாய்ஸ்.
4. ஜெப்ரானிக்ஸ் சவுண்ட் பீஸ்ட் 91 (ZEBRONICS Sound Feast 91):
ஜெப்ரானிக்ஸ் சவுண்ட் பீஸ்ட் 91 போர்ட்டபிள் ஸ்பீக்கர் ரூ.1,999 என்ற விலையில் அமேசான் (Amazon) வாங்க கிடைக்கிறது. இது 24W அவுட்புட், ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), எப்எம் ரேடியோ (FM Radio), இது 6.3mm வயர்டு மைக் சப்போர்ட் (wired mic support), யுஎஸ்பி (USB), எம்எஸ்டி (mSD), ஆக்ஸ் (AUX), மொபைல் ஹோல்டர் (Mobile Holder) மாற்று RGB லைட் அம்சத்துடன் வருகிறது.
5. ஜேபிஎல் கோ 3 (JBL Go 3):
இந்த ஜேபிஎல் கோ 3 புதிய வரவு மாடலாகும். இது நாம் எதிர்பார்த்த விலை புள்ளியில் இருந்து சற்று விலகி இருக்கிறது. ஆனால், இது மிகவும் அட்டகாசமான ஸ்பீக்கர் அம்சத்துடன் வருகிறது. இது 5 மணி நேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. இது ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) அம்சத்துடன் வருகிறது. இது பல அதிநவீன ஆடியோ அம்சத்தை கூட ஆதரிக்கிறது.
நீங்கள் புதிதாக இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் வாங்க ஐடியா வைத்திருந்தால், நீங்கள் இந்த 5 டாப் பெஸ்ட் ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் இருந்து ஏதேனும் ஒரு மாடலை தேர்வு செய்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








