Home
Gadgets

ஜெப்ரானிக்ஸ் முதல் போர்ட்ரானிக்ஸ் வரை.. ரூ.20,000க்குள் சிறந்த 4கே ப்ரொஜெக்டர்கள்.. பட்டியல் இதோ..

இந்தியாவில் ஸ்மார்ட் டிவிகளை விட தற்போது ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. அதாவது தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் அனுபவத்தைக் கொடுக்கிறது இந்த ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல்கள். அதுவும் பில்ட்-இன் ஸ்பீக்கர்கள், கூகுள் டிவி ஓஎஸ் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் தற்போது ப்ரொஜெக்டர் மாடல்கள் வாங்க கிடைக்கின்றன.

100-இன்ச் முதல் 150-இன்ச் டிவிகள் வரை 2 லட்சம் அல்லது 3 லட்சம் விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அதைவிட பெரிய திரை அனுபவத்தை கொடுக்கும் ப்ரொஜெக்டர்கள் பட்ஜெட் விலையில் கிடைக்கின்றன. குறிப்பாக இதுபோன்ற ப்ரொஜெக்டர்கள் உங்கள் வீட்டின் சுவரையே பெரிய திரையாக மாற்றி குடும்பத்துடன் பார்க்கும் சிறந்த அனுபவத்தை கொடுக்கிறது.

எனவே தான் பலர் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் ரூ.20,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 4கே ப்ரொஜெக்டர் மாடல்களை இங்கே பார்க்கலாம்.

ரூ.20,000க்குள் சிறந்த 4கே ப்ரொஜெக்டர்கள்.. பட்டியல் இதோ..

1.ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் (Zebronics ZEB PixaPlay 77G Projector) மாடல் ரூ.19,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ப்ரொஜெக்டர் மாடலை அமேசான் தளத்தில் வாங்க முடியும். குறிப்பாக இதில் 200 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே பெரிய திரை அனுபவம் கிடைக்கும். 8W இன்-பில்ட் ஸ்பீக்கர்களும் இந்த சாதனத்தில் உள்ளன.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS), குவாட் கோர் பிராஸசர் (Quad core processor), 4K ரெசல்யூஷன், ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (Auto Keystone Correction), 7500 லுமன்ஸ் பிரைட்னஸ் போன்ற அம்சங்கள் பிக்சாபிளே 77ஜி மாடலில் உள்ளன. மேலும் 270 டிகிரி டில்ட் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த சாதனம். எனவே வீட்டில் எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் இதைப் பயன்படுத்தலாம்.

2. Wzatco யுவா இன்ஃபினிட்டி கூகுள் டிவி ப்ரொஜெக்டர் (Wzatco Yuva Infinity Google TV Projector) மாடல் சீல் செய்யப்பட்ட ஆப்டிகல் எஞ்சின் உடன் வெளியாகி உள்ளது. இது தூசி படிவதைத் தடுக்கவும், வழக்கமான பராமரிப்பின் தேவையைக் குறைக்கும். இந்த ப்ரொஜெக்டரின் விலை ரூ.19,990-ஆக உள்ளது. மேலும் இதை அமேசானில் வாங்க முடியும்.

டால்பி டிஜிட்டல் MS12 ஆதரவு கொண்ட ஸ்பீக்கர்கள் உடன் இந்த Wzatco ப்ரொஜெக்டர் வெளியானது. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். 1200 ஏஎன்எஸ்ஐ (1200 ANSI) லுமன்ஸ் பிரைட்னஸ், 4K ரெசல்யூஷன், ஆட்டோ போகஸ், ஆட்டோ கீஸ்டோன், கூகுள் டிவி ஓஎஸ் போன்ற அசத்தலான அம்சங்கள் இதில் உள்ளன. அதேபோல் இந்த ப்ரொஜெக்டர் மூலம் 120 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும்.

ரூ.20,000க்குள் சிறந்த 4கே ப்ரொஜெக்டர்கள்.. பட்டியல் இதோ..

3. எக்ஸ்எலெக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 2 (XElectron iProjector 2) 1080p நேட்டிவ் ரெசல்யூஷன் (Native Resolution) மற்றும் 4K எச்டிஆர் சப்போர்ட் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மூலம் 300 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். தற்போது இந்த மாடல் பிளிப்கார்ட்டில் ரூ.17,990 விலையில் வாங்க கிடைக்கிறது.

20000 லுமன்ஸ் பிரைட்னஸ், 32ஜிபி மெமரி, ஆட்டோ போகஸ், ஆட்டோ கீஸ்டோன், ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ், ஆட்டோ டில்ட் கரெக்ட், ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ், ஏ53 குவாட் கோர் சிபியு போன்ற அம்சங்கள் இந்த எக்ஸ்எலெக்ட்ரான் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. டூயல் 10W ஸ்பீக்கர்கள் இந்த மாடலில் உள்ளன. இந்த எக்ஸ்எலெக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 2 மாடலுக்கு தற்போது இந்தியா முழுவதும் அதிக வரவேற்பு உள்ளது.

4. இ கேட் டஸ்டர் 5எக்ஸ் (E Gate Duster 5X) ப்ரொஜெக்டர் மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவைக் கொண்டுள்ளது. இது மேம்பட்ட கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும். 8ஜிபி மெமரி வசதியும் இந்த மாடலில் உள்ளது. ரூ.15,990 விலையில் இ கேட் டஸ்டர் 5எக்ஸ் மாடல் அமேசான் தளத்தில் வாங்க கிடைக்கிறது.

500 ஐஎஸ்ஒ லுமன்ஸ் பிரைட்னஸ், ஆட்டோ 4D+4P கீஸ்டோன், ஆட்டோ போகஸ், 60000 மணி நேர லேம்ப் லைஃப், 10W பில்ட்-இன் ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் போன்ற அம்சங்கள் இ கேட் டஸ்டர் 5எக்ஸ் மாடலில் உள்ளன. மேலும் இந்த ப்ரொஜெக்டர் மூலம் 300 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே இதில் பெரிய திரை அனுபவம் கிடைக்கும்.

5.போர்ட்ரானிக்ஸ் பீம் 510 (Portronics Beem 510) ப்ரொஜெக்டர் மாடல் 4K அல்ட்ரா HD ரெசல்யூஷன் மற்றும் 5W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (5W Stereo Speakers) உடன் வெளிவந்துள்ளது. அதேபோல் 5300 லுமன்ஸ் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர் 10 சப்போர்ட் இதில் உள்ளது. தற்போது இந்த ப்ரொஜெக்டர் பிளிப்கார்ட்டில் ரூ.18,999 விலையில் வாங்க கிடைக்கிறது.

ஆட்டோமேட்டிக் போகஸ், ஆட்டோ கீஸ்டோன், வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 510 மாடலில் உள்ளன. மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் உடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் ஆதரவுடன் வருகிறது இந்த போர்ட்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர்.

ரூ.20,000க்குள் சிறந்த 4கே ப்ரொஜெக்டர்கள்.. பட்டியல் இதோ..

யார் வாங்கலாம்?
ஓடிடி மூலம் திரைப்படங்களைப் பார்க்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த பெரிய திரை கொண்ட ப்ரொஜெக்டர்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் இவை 4கே ப்ரொஜெக்டர்கள் என்பதால் சிறந்த கேமிங் அனுபவம் கிடைக்கும். ஆகவே கேமிங் பயனர்கள் இவற்றை வாங்கலாம். மேலும் நிறுவனங்கள் மற்றும் அலுவலக மீட்டிங் அறைகளுக்கு (Meeting Rooms) தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த ப்ரொஜெக்டர்களில் இருப்பதால் வாங்கலாம்.

தனியாக சவுண்ட்பார் வாங்கலாமா?
மேலே பட்டியலிடப்பட்டுள்ள ப்ரொஜெக்டர்கள் 10W முதல் 20W வாட்ஸ் வரை உள்ள ஸ்பீக்கர்கள் உடன் தான் வருகின்றன. இவை ஒரளவு தான் ஆடியோ அனுபவத்தை வழங்கும் ஆனால் நீங்கள் இந்த ப்ரொஜெக்டர்கள் உடன் தனியாக சவுண்ட்பார் அல்லது 5.1 ஹோம் தேயேட்டர் ஸ்பீக்கர்கள் போன்றவற்றை இணைக்க முடியும். இதுபோன்று தனியாக ஸ்பீக்கர்கள் வாங்கினால் சினிமா தியேட்டர் போன்ற ஆடியோ அனுபவத்தை பெறமுடியும்.

குறிப்பாக மேலே பட்டியலிடப்பட்டுள்ள ப்ரொஜெக்டர்கள் 1 வருட வாரண்டி (Warranty) உடன் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த ப்ரொஜெக்டர்கள் அனைத்து சிறப்பான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Best 4K Projectors Under Rs 20000: From Zebronics to Portronics, Check the List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X