24W ஸ்பீக்கர்கள்.. பெசல் லெஸ் டிசைன்.. பிரபல நிறுவனத்தின் பிரீமியம் டிவிக்கு விலைகுறைப்பு.. எந்த மாடல்?
Vu நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள் இந்தியச் சந்தையில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. காரணம் என்னவென்றால், தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்நிறுவனத்தின் டிவிகள் வெளிவருகின்றன. எனவே தான் Vu நிறுவனத்தின் டிவிகளுக்கு அதிக வரவேற்பு உள்ளன.
இந்நிலையில் Vu நிறுவனம் தனது 43-இன்ச் பிரீமியம் டிவிக்கு தள்ளுபடி வழங்கி உள்ளது. அதாவது பிளிப்கார்ட் தளத்தில் Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (43GA-Android) மாடலுக்கு 42 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டிவி முன்பு ரூ.35,000 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் இப்போது அறிவிக்கப்பட்ட விலை குறைப்பின் மூலம் Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (43GA-Android) மாடலை ரூ.19,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த டிவியை வாங்கும் பயனர்களுக்கு ரூ.500 தள்ளுபடி கிடைக்கும். இப்போது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். பின்பு 300 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல். அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
டூயல் கோர் குவாட்-கோர் பிராசஸர் வசதியுடன் இந்த Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்தலாம். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த கேமிங் அனுபவத்தைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவைக் கொண்டு இந்த Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.
இந்த Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது பெசல்-லெஸ் டிசைன் மற்றும் ஐபிஎஸ் பேனல் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் மூலம் காட்சிகளை மிகவும் துல்லியமாகப் பார்க்க முடியும். அதற்குத் தகுந்த வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதியைக் கொண்டுள்ளது அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த இந்த Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல். அதேபோல் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, யூடியூப், யூடியூப் மியூசிக் போன்ற ஹாட்கீகள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவியின் ரிமோட்.
குறிப்பாக சியோமி, ஒன்பிளஸ், சாம்சங் நிறுவனங்களின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் சற்று உயர்வான விலைகளில் விற்பனைக்கு வருகிறது. ஆனால் இந்த Vu பிரீமியம் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி கம்மி விலையில் பல அசத்தலான அம்சங்களுடன் விற்பனைக்கு வருவதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








