Home
Gadgets

இந்தியாவில் கம்மி விலையில் கிடைக்கும் 43 இன்ச் டிவிகள்.. டால்பி ஆடியோ.. 16GB மெமரி.. கூகுள் டிவி OS..

தற்போது இந்தியாவில் அதிநவீன ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக 32 இன்ச், 40 இன்ச் டிவிகளை விட 43 இன்ச் டிவிகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் கம்மி விலையில் கிடைக்கும் சிறந்த 43 இன்ச் ஸ்மார்ட் டிவிகளை (Smart TVs) இங்கே பார்க்கலாம்.

43 இன்ச் இன்பினிக்ஸ் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (Infinix QLED Full HD Smart Google TV) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

இந்தியாவில் கம்மி விலையில் கிடைக்கும் 43 இன்ச் டிவிகள்..

43 இன்ச் இன்பினிக்ஸ் கியூஎல்இடி டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 (HDR 10), 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது. குவாட் கோர் பிராசஸர் (QUAD Core Processor) உடன் 43 இன்ச் இன்பினிக்ஸ் கியூஎல்இடி ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல் வெளிவந்துள்ளது.

Take a Poll

கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி 470 ட்ரிபிள் கோர் (Mali470 Triple Core) கிராபிக்ஸ் கார்டு இந்த இன்பினிக்ஸ் டிவியில் கொடுக்கப்பட்டுள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம்இந்த டிவி இயங்குகிறது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கும்.

1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த அசத்தலான இன்பினிக்ஸ் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல். அதேபோல் வாய்ஸ் கண்ட்ரோல் உடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 40W பாக்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டு வெளிவந்தது இந்த 43 இன்ச் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் கூகுள் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஆனது தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும்.

அதேபோல் 3 யுஎஸ்பி போர்ட் (USB Port), யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) வருகிறது. மேலும் ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளது. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகள் 43-இன்ச் இன்பினிக்ஸ் கியூஎல்இடி டிவியில் உள்ளன.

43 இன்ச் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் ஸ்மார்ட் கூகுள் டிவி (MOTOROLA EnvisionX 43 inch Smart Google TV) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ஃபுல் எச்டி டிஸ்பிளே, 1920 x 1080 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக பெசல்-லெஸ் டிசைன் உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த டிவியில் எச்டிஆர் (HDR10) ஆதரவு, 16.7 மில்லயன் கலர்ஸ், 7 பிக்சர் மோட் ( 7 picture modes) மற்றும் கிரிஸ்டல் கிளியர் டிஸ்பிளே இருப்பதால் ஒரு மினி தியேட்டர் அனுபவம் கிடைக்கும்.

மீடியாடெக் 9602 (ஏ53 குவாட் கோர்) பிராசஸர் வசதியுடன் இந்த அசத்தலான 43-இன்ச் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்துள்ளது. கூகுள் டிவி ஒஎஸ் (Google TV OS) மூலம் இந்த டிவி இயங்குகிறது. மேலும் மாலி ஜி31 எம்பி2 (Mali G31 MP2) கிராஃபிக் பிராசஸர், 1.5ஜிபி ரேம், 8ஜிபி மெமரி டால்பி டிஜிட்டல் மற்றும் டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி வெளிவந்தது.

ஏசர் 43 இன்ச் ஐ ப்ரோ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி (Acer I PRO Series 43 inch Smart Google TV) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.18,999 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஏசர் டிவி ஃபுல் எச்டி டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. மேலும் 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், சூப்பர் ப்ரைட்னஸ், 16.7 மில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.

குவாட் கோர் பிராசஸர் (Quad Core Processor) உடன் இந்த ஏசர் 43 இன்ச் ஐ ப்ரோ சீரிஸ் புல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்துள்ளது. மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு, கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற பல வசதிகள் இந்த டிவியில் உள்ளன.

இந்தியாவில் கம்மி விலையில் கிடைக்கும் 43 இன்ச் டிவிகள்..

1.5ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த 43 இன்ச் ஏசர் ஐ ப்ரோ சீரிஸ் 4கே டிவி. டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 30W ஸ்பீக்கர்கள் இந்த ஏசர் டிவியில் உள்ளது. யுஎஸ்பி போர்ட் (USB Port), யுஎஸ்பி போர்ட், ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) போன்ற பல அம்சங்கள் இந்த ஏசர் டிவியில் உள்ளன.

மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் உடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஏசர் டிவி மாடல். பின்பு இந்த ஸ்மார்ட் ரிமோட் ஆனது ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த ஏசர் டிவியில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best 43 inch TVs available to buy at affordable prices in India: Heres The List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X