Home
Gadgets

இந்தியாவில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த 43 இன்ச் டிவிகள்.. சியோமி முதல் Vu வரை.. பட்டியல் இதோ..

இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு 43 இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கின்றன. அதுவும் பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவிகளுக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்தியாவில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த 43 இன்ச் ஸ்மார்ட் டிவிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

1.மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (Motorola 43 inch 4K Smart Google TV 2025 Edition) ஆனது ரூ.22,499 விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த ஸ்மார்ட் டிவி பெசல் லெசஸ் டிசைன் மற்றும் எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

 இந்தியாவில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த 43 இன்ச் டிவிகள்..

அதேபோல் குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர் (Quad Core Mediatek Processor), கூகுள் டிவி ஓஸ் 5.0 (Google TV OS 5.0), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 48W ஸ்பீக்கர்கள், 2ஜிபி ரேம், 32ஜிபி மெமரி, இன்-பில்ட் கிராபிக்ஸ் யூனிட் (In-Built Graphics Unit) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது.

2.சியோமி எம்ஐ ஏ சீரிஸ் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (XIAOMI by Mi A Series 43 inch Full HD LED Smart Google TV 2025 Edition) ஆனது ரூ.21,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ப்ரீமியம் மெட்டல் பெசல் லெஸ் டிசைன்(Premium Metal Bezel-less Design) மற்றும் சக்திவாய்ந்த ஏ53 குவாட் கோர் (A53 Quad Core) பிராசஸர் உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது.

அதேபோல் 1ஜிபி ரேம், 8ஜிபி மெமரி, கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டிடிஎஸ் எக்ஸ் (DTS X), டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் சவுண்ட் (DTS Virtual X Sound), 20W ஸ்பீக்கர்கள், குரோம் காஸ்ட் (Chromecast), 1ஜிபி ரேம், 8ஜிபி மெமரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சியோமி டிவி வெளிவந்தது.

3.தாம்சன் Phoenix 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (Thomson Phoenix 43 inch QLED 4K Smart Google TV) ஆனது ரூ.20,499 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது மீடியாடெக் எம்டி9602 பிராசஸர் உடன் வெளிவந்துள்ளது. அதுவும் இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் ட்ரூசரவுண்ட் சவுண்ட் (TruSurround sound), குரோம் காஸ்ட் (Chromecast), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), ட்ரூசரவுண்ட் சவுண்ட் (TruSurround sound), 40W ஸ்பீக்கர்கள், 2ஜிபி ரேம், 16ஜிபி மெமரி, கியூஎல்இடி 4கே டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த தாம்சன் டிவி வெளிவந்துள்ளது.

4.வியூ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (Vu 108 43 inch Ultra HD 4K LED Smart Google TV) ஆனது ரூ.22,999 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது அல்ட்ரா எச்டி 4K டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதில் கிரிக்கெட் பிக்சர் மோட் (Cricket Picture Mode), சினிமா மோட் (Cinema Mode) உள்ளிட்ட பல்வேறு மோட்கள் வருகின்றன.

 இந்தியாவில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த 43 இன்ச் டிவிகள்..

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS), Vuon பிராசஸர், ஜி52 கிராபிக்ஸ் வசதி, 2ஜிபி ரேம், 16ஜிபி ஸ்டோரேஜ், டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 50W ஸ்பீக்கர்கள், கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast),
கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.

5.ஏசர் 43 இன்ச் ஐ ப்ரோ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி (Acer I Pro Series Full HD Smart LED Google TV) ஆனது ரூ.18,999 விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த டிவி 30W டால்பி ஆடியோ, 16ஜிபி மெமரி, 1.5ஜிபி ரேம், கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS), 1.5ஜிபி ரேம், 16ஜிபி மெமரி, டால்பி ஆடியோ (Dolby Audio), 30W ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best 43 inch TVs available in India at budget prices: Here is the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X