Just In
- 10 hrs ago
Google Pay, Paytm-இல் சைலன்ட் ஆக காணாமல் போகும் பணம்! உடனே "இதை" செய்யுங்க!
- 13 hrs ago
பேய் மாதிரி வேலை செஞ்சிருக்கும் Samsung: இதோ Galaxy Z Fold 4-இன் Quick Review!
- 13 hrs ago
ரூ.25,000-க்குள் கிடைக்கும் பெஸ்ட் டேப்லெட் மாடல்கள்: இதோ பட்டியல்.!
- 13 hrs ago
இந்தியாவில் தடை செய்யப்பட்ட VLC Media Player: ஹேக்கிங் குழு லீலை- சைபர் தாக்குதல் காரணமா?
Don't Miss
- News
திட்டமிடப்பட்டு செருப்பு வீச்சு! நேராக பிடிஆர் வீட்டுக்கே போன சரவணன்! 12 மணி நேரத்தில் நடந்தது என்ன?
- Sports
ஆசிய கோப்பை 2022 - 17 புலிக்குட்டிகளை களமிறக்கும் வங்கதேசம்.. 5 ஆண்டுக்கு பிறகு கேப்டனாகும் ஷகிபுல்
- Movies
நைட் ஷோவெல்லாம் அதிகரிக்குது.. விரட்டி விரட்டி வசூலிக்கும் விருமன்.. விநியோகஸ்தர்கள் ஹேப்பி!
- Lifestyle
இந்த உணவுகள மட்டும் நீங்க சாப்பிட்டா... சும்மா ஹீரோயின் மாதிரி மின்னுவீங்களாமாம்!
- Automobiles
சூர்யகுமார் யாதவ் உண்மையில் வாங்கியிருக்கும் கார் இதுதான்... விலையை கேட்டு வாயை பிளக்கும் ரசிகர்கள்!
- Finance
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம்... ஆயிரக்கணக்கில் குவியும் வேலைவாய்ப்புகள்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
ரூ.25,000-க்கு கீழ் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்க ஆசையா? இதோ டாப் 5 லிஸ்ட்.!
இந்தியாவில் ரியல்மி, ரெட்மி, ஏசர் போன்ற பல நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கின்றன. குறிப்பாக சில நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் தரமான அம்சங்களுடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கின்றன.

ஸ்மார்ட் டிவி
சோனி, பிலிப்ஸ், பிபிஎல் நிறுவனங்களின் டிவிகளுக்கு இப்போது இந்தியாவில் அவ்வளவு வரவேற்பு இல்லை என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இப்போது குறிப்பிட்ட நிறுவனங்களின் டிவிகளை பின்னுக்கு தள்ளும் வகையில் சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட் டிவிகளைஅறிமுகம் செய்து வருகிறது.
மேலும் இப்போது இந்தியாவில் ரூ.25,000-க்கு கீழ் கிடைக்கும் தரமான 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலைப் பார்ப்போம்.

5.ரெட்மி 43-இன்ச் ஸ்மார்ட் டிவி
ரெட்மி 43-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலை அமேசான் தளத்தில் ரூ.23,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்
டிவி 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1920x1080 பிக்சல்ஸ், ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம், vivid picture engine உள்ளிட்டபல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

ரெட்மி 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆடியோ எப்படி?
டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரெட்மி 43-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி. எனவே இது ஒரு சிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம். மேலும் குரோம்காஸ்ட் ஆதரவு, கூகுள் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி டிவி.
டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் வி 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி 43-இன்ச் ஸ்மார்ட் டிவி. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி.
8GB மற்றும் 12GB ரேம் Oppo ஸ்மார்ட்போன்கள்- பட்ஜெட் டூ ப்ரீமியம், உங்க காசுக்கு நிச்சயம் கேரண்டி!

4.Westinghouse டிவி
அமேசான் தளத்தில் 43-இன்ச் Westinghouse டிவி மாடலை ரூ.20,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி UHD 4கே ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே ஒரு சிறந்த திரை அனுபவம் கொடுக்கும் இந்த Westinghouse டிவி.
Westinghouse டிவி மாடலில் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரோம் ஆதரவு உள்ளது. பின்பு மூன்று எச்டிஎம் போர்ட் மற்றும் இரண்டு யுஎஸ்பி போர்ட் ஆதரவுகளும் உள்ளன. அதேபோல் 40W ஸ்பீக்கர்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

Westinghouse டிவி பிராசஸர்
Westinghouse டிவி மாடலில் சக்தி வாய்ந்த கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர் வசதி உள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளம், கூகுள் அசிஸ்டன்ட்,பெசல்-லெஸ் டிசைன், ஐபிஎஸ் பேனல், டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த Westinghouse டிவி.
கையும் களவுமாக மாட்டிய Elon Musk: நண்பர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு?- மஸ்க் சொன்ன பதில்!

3.ஏசர் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி
ஏசர் 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி டிவியின் விலை ரூ23,990-ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியை பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 3840x2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.
அதேபோல் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி. மேலும் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், கூகுள் அசிஸ்டன்ட், குரோம்காஸ்ட் ஆதரவு போன்ற பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஏசர் டிவி.
அச்சச்சோ.. என்ன இப்படி சொல்லிட்டாங்க? Airtel, Jio யூசர்களுக்கு ஒரு 'பேட்' நியூஸ்!

ஏசர் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியின் பிராசஸர்
ஏசர் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 64பிட் குவாட்-கோர் பிராசஸர், 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது ஏசர் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்.

2.கோடாக் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி
கோடாக் 43-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.21,999-விலையில் வாங்க முடியும். பின்பு இந்த ஸ்மார்ட் டிவியில் டிஜிட்டல் டால்பி பிளஸ் ஆடியோ மற்றும் DTS TruSurround ஆடியோ ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை நம்பி வாங்கலாம். அதேபோல் குவாட்-கோர் சிபியு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.
பின்பு ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம், ஏ பிளஸ் கிரேடு DLED பேனல், எச்டிஆர் +ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைகொண்டு வெளிவந்துள்ளது இந்த கோடாக் டிவி. அதேபோல் யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், புளூடூத் 5.0 போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது கோடாக் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்.

1.ஒன்பிளஸ் Y1 43-இன்ச் ஸ்மார்ட் டிவி
ஒன்பிளஸ் Y1 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.24,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.
மேலும் டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் டிடிஎஸ்-எச்டி ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், குரோம்காஸ்ட் ஆதரவு, ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம், 64-பிட் பவர்ஃபுல் பிராசஸர், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அமசங்களை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் Y1 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்.

ஒன்பிளஸ் Y1 43-இன்ச் ஸ்மார்ட் டிவி கனெக்டிவிட்டி
2 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட், வைஃபை போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியில் Gamma Engine இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086