யாரு விடுவா சொல்லுங்க..ரூ.15000க்கு கீழ் 43 ஸ்மார்ட் டிவிகள்.. கூகுள் டிவி OS.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
இந்தியாவில் 32 இன்ச் ஸ்மார்ட் டிவிகளை விட 43 இன்ச் ஸ்மார்ட் டிவிகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதுவும் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்ட 43 இன்ச் ஸ்மார்ட் டிவிகளை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்கின்றன. சரி இப்போது இந்தியாவில் ரூ.15,000க்கு கீழ் கிடைக்கும் 43 இன்ச் ஸ்மார்ட் டிவிகளை (smart TVs) இந்த பதிவில் பார்க்கலாம்.
1.மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (MOTOROLA EnvisionX 43 inch Full HD LED Smart Google TV) மாடல் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.14,999 விலையில் வாங்க கிடைக்கிறது. மீடியாடெக் 9602 (ஏ53 குவாட் கோர்) பிராசஸர் வசதியுடன் இந்த 43-இன்ச் மோட்டோரோலா டிவி வெளிவந்துள்ளது.

அதேபோல் பெசல்-லெஸ் டிசைன், ஃபுல் எச்டி டிஸ்பிளே, எச்டிஆர் (HDR10) ஆதரவு, 16.7 மில்லயன் கலர்ஸ், 7 பிக்சர் மோட் ( 7 picture modes), கூகுள் டிவி ஒஎஸ் (Google TV OS), 1.5ஜிபி ரேம், 8ஜிபி மெமரி, வாய்ஸ் அசிஸ்டண்ட், பில்ட்-இன் குரோம்காஸ்ட் போன்ற அம்சங்கள் இந்த மோட்டோரோலா டிவியில் உள்ளன. மேலும் டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் வசதியும் இந்த டிவியில் உள்ளது.
2. தாம்சன் 43-இன்ச் வேர்ல்டு கப் ஃபுல் எச்டி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2023 எடிஷன் (Thomson World Cup Full HD LED Smart Linux TV 2023 Edition) மாடல் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.14,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.ஃபுல் எச்டி டிஸ்பிளே, 178 டிகிரி வியூ ஆங்கிள் (View Angle), விவிட் (Vivid) கலர்ஸ் உள்ளிட்ட தரமான அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.
பெசல்-லெஸ் டிசைன் உடன் இந்த தாம்சன் டிவி வெளிவந்துள்ளது. மேலும் குவாட் கோர் அம்லாஜிக் பிராசஸர், 4ஜிபி ஸ்டோரேஜ், 512எம்பி ரேம், வைஃபை, மிராகாஸ்ட், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், லினக்ஸ் ஓஎஸ் உள்ளிட்ட அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன. அதேபோல் 40W ஸ்பீக்கர்கள் இந்த தாம்சன் டிவியில் உள்ளது.

3.கேண்டி 43 இன்ச் 4கே அல்ட்ரடி எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி (CANDY 43 inch 4K Smart Google TV) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. மேலும் டால்பி விஷன், 16.7 மில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.
குறிப்பாக 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட்
(Google Voice Assistant), 16W டால்பி ஆடியோ ஸ்பீக்கர்கள், மல்டிடாஸ்கிங் பிராசஸர் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த கேண்டி 43 இன்ச் டிவியில் உள்ளன.
4.கோடாக் ஸ்பெஷல் எடிஷன் 43 இன்ச் ஸ்மார்ட் லினக்ஸ் டிவி (KODAK Special Edition Smart Linux TV) ஆனது பிளிப்கார்ட தளத்தில் ரூ.13,999-க்கு வாங்க கிடைக்கிறது. குவாட்-கோர் (Quad-cord) பிராசஸர் மற்றும் மாலி ஜி31 ஜிபியு (Mali G31 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த டிவியில் உள்ளது.
ஃபுல் எச்டி டிஸ்பிளே, 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், விவிட் கலர்ஸ் (vivid colors), 178 டிகிரி வைடு வியூ ஆங்கிள் (Wide Viewing Angle) உள்ளிட்ட அசத்தலான அம்சங்களுடன் இந்த கோடாக் டிவி வெளிவந்துள்ளது. மேலும் சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) ஆதரவு கொண்ட 30W ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளன.

5. டைவா 43 ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி (Daiwa 43 inch Full HD LED Smart Linux TV) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.12,999 விலையில் வாங்க கிடைக்கிறது. ஃபுல் எச்டி டிஸ்பிளே இந்த டிவியில் உள்ளது. பின்பு 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
அதேபோல் குவாட் கோர் பிராசஸர் (QUAD Core Processor), 20W பாக்ஸ் ஸ்பீக்கர்கள் (Box Speaker), மாலி-ஜி31 கிராபிக்ஸ் பிராசரஸர், மிராகேஸ்ட் (Miracast), ஆப்பிள் ஏர்பிளே சப்போர்ட் (Apple Airplay support), லினக்ஸ் (Linux) இயங்குதளம் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த டைவா டிவியில் உள்ளன.


Click it and Unblock the Notifications








