Home
Gadgets

கம்மி பட்ஜெட்டில் 43 இன்ச் டிவிகள்.. 30W ஸ்பீக்கர்கள்.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி OS.. யாரு விடுவா?

இந்தியாவில் பல முன்னணி நிறுவனம் போட்டிப்போட்டுக் கொண்டு பட்ஜெட் விலையில் 43 இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கின்றன. குறிப்பாக 32 இன்ச், 40 இன்ச் டிவிகளை விட 43 இன்ச் டிவிகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் கம்மி பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த 43 இன்ச் ஸ்மார்ட் டிவிகளை (best smart tvs) இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் 43 இன்ச் கூகுள் ஸ்மார்ட் டிவி (Acer G plus Series 43 inch Full HD LED Smart Google TV) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவி மாடலை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.17749 விலையில் வாங்கிவிட முடியும்.

கம்மி பட்ஜெட்டில் 43 இன்ச் டிவிகள்.. 30W ஸ்பீக்கர்கள்.. யாரு விடுவா?

ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் 43 இன்ச் கூகுள் ஸ்மார்ட் டிவி வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்இ எச்டிஆர் 10 ஆதரவு, 1.07 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. எனவே இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

இந்த டிவி ஃபிரேம்லெஸ் டிசைன்(Frameless Design) கொண்டுள்ளது. மேலும் கார்டெக்ஸ் ஏ55 பிராஸசர் உடன் இந்த ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 30W ஸ்பீக்கர்கள் உடன் ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் 43 இன்ச் கூகுள் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இது ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதி இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த ஏசர் டிவி வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.

இந்த ஏசர் டிவியில் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) வருகிறது. மேலும் ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளன. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த ஏசர் டிவியில் உள்ளன.

ஹைசென்ஸ் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (Hisense 43 inch Full HD LED Smart Google TV) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.17499 விலையில் வாங்கிவிட முடியும்.

ஃபுல் எச்டி டிஸ்பிளே உடன் இந்த ஹைசென்ஸ் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1920 x 1080 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 (HDR 10) ஆதரவு, 300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

டால்பி அட்மாஸ் (Dolby Audio) ஆதரவு கொண்ட 30W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த ஹைசென்ஸ் 43 இன்ச் டிவி ஸ்மார்ட் டிவி. குறிப்பாக ஸ்டான்டர்ட், மியூசிக். சினிமா, பர்சனல் உள்ளிட்ட பல்வேறு சவுண்ட் மோட்கள் இந்த டிவியில் உள்ளன. எனவே இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.

குறிப்பாக கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த ஹைசென்ஸ் டிவி இயங்குகிறது. ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.

மேலும் இந்த ஹைசென்ஸ் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளிவந்துள்ளது. மேலும் 3 யுஎஸ்பி போர்ட் (USB Port), மினி ஏவி (Mini AV) மற்றும் எல்ஏஎன் போர்ட் (LAN Port) வருகிறது. ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளது. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி கொண்டுள்ளது இந்த டிவி.

கோடாக் 43 ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (KODAK 43 inch Full HD LED Smart Android TV 439X5081) மாடல் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.16,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

1080 x 1920 பிக்சல்ஸ், எச்டிஆர் ஆதரவு, டால்பி டிஜிட்டல் பிளாஸ் ஆதரவு கொண்ட 30W ஸ்பீக்கர்கள், ரியல்டெக் பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், பெசல்லெஸ் டிசைன், கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் பில்ட்-இன், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், வைஃபை உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த கோடாக் டிவியில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best 43 inch smart TVs available at low prices in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X