Amazon அதிரடி தள்ளுபடி: 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை கம்மி விலையில் வாங்க சரியான நேரம்.!
பண்டிகை காலம் என்பதால் Amazon தளத்தில் தொடர்ந்து சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட பல சாதனங்களுக்குச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

அமேசான் தள்ளுபடி
அதேபோல் அமேசான் நிறுவனத்திற்குப் போட்டியாக பிளிப்கார்ட் நிறுவனமும் தொடர்ந்து சலுகைகளை அறிவித்து வருகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இன்று அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலை இப்போது பார்ப்போம்.

1.சியோமி எம்ஐ எல்இடி டிவி 4சி
அமேசான் தளத்தில் 43-இன்ச் கொண்ட சியோமி எம்ஐ எல்இடி டிவி 4சி மாடலுக்கு 43 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.19,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.
மேலும் 1920x1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

சியோமி எம்ஐ எல்இடி டிவி 4சி ஆடியோ
டிடிஎஸ்-எச்டி ஆதரவு கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி. மேலும் 20 வாடஸ் ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இவற்றுள் அடக்கம். அதேபோல் ஆண்ட்ராய்டு டிவி 9 இயங்குதளத்தை கொண்டுவெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி.
குறிப்பாக குவாட்-கோட் பிராசஸர், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், Vivid பிக்சர் எஞ்சின், கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி.
பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார், யூடியூப், ஆப்பிள் டிவி போன்ற பல ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். அதேபோல் சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும் இந்த 43-இன்ச் எம்ஐ எல்இடி டிவி 4சி மாடல்.

2.கோடாக் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி (43UHDX7XPROBL)
கோடாக் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி மாடலுக்கு அமேசான் தளத்தில் 41 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது அமேசான் தளத்தில் ரூ.19,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 3840x2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன்
வெளிவந்துள்ளது இந்த கோடாக் ஸ்மார்ட் டிவி மாடல்.
Trusurround தொழில்நுட்பம் மற்றும் 40 வாட்ஸ் ஆடியோ அவுட்புட் வழங்குகிறது இந்த கோடாக் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக கார்டெக்ஸ் ஏ53 பிராஸசர் உடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கோடாக் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி அம்சங்கள்
ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம், 3 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட், புளூடூத், டூயல் பேண்ட் வைஃபை ஆதரவு, குரோம் காஸ்ட் ஆதரவு, கூகுள் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், ஜீ5 உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த கோடாக் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.

3. 43-இன்ச் Hyundai ஸ்மார்ட் டிவி(SMTHY43FHDB52VRYVT)
43-இன்ச் கொண்ட Hyundai ஸ்மார்ட் டிவி மாடலுக்கு அமேசான் தளத்தில் 45 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.22,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி பெசல்-லெஸ் டிசைன்-ஐ கொண்டுள்ளது.
1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த 43-இன்ச் Hyundai ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளம், 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான வசதியை கொண்டுள்ளது இந்த Hyundai ஸ்மார்ட் டிவி மாடல்.

4.43-இன்ச Vu பிரீமியம் சீரிஸ் ஸ்மார்ட் எல்இடி டிவி ((43GA)
அமேசான் தளத்தில் 43-இன்ச Vu பிரீமியம் சீரிஸ் ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலுக்கு 43 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்டிவியை ரூ.19,799-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த டிவி linux ஓஸ் மூலம் இயங்குகிறது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் 1920x1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட், டால்பி ஆடியோ, டிடிஎஸ் எச்டி, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், வைஃபை, ஸ்கிரீன் மிரரிங், பெசல்-லெஸ் டிசைன் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது.

5. 43-இன்ச் iFFALCON ஸ்மார்ட் டிவி (43K72)
43-இன்ச் கொண்ட iFFALCON ஸ்மார்ட் டிவி மாடலுக்கு அமேசான் தளத்தில் 54 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.21,999-விலையில் வாங்க முடியும். டால்பி ஆடியோ ஆதரவுடன் 24 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது இந்த
43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்.
ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம்,யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த 43-இன்ச் iFFALCON ஸ்மார்ட் டிவி மாடல்.


Click it and Unblock the Notifications