குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்: இதோ பட்டியல்.!
தற்போது பெரிய ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட் டிவிகளை வாங்குவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அப்படி பெரிய ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட் டிவிகளை வாங்க நினைக்கும் பயனர்கள் 40-இன்ச், 50-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை வாங்குவதை விட 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்குவது மிகவும் நல்லது.

அதாவது சில நிறுவனங்கள் 43-இன்ச் கொண்ட ஸ்மார்ட் டிவிகளை குறைந்த விலையில் அறிமுகம் செய்து வருகின்றன. அதேபோல் இந்த 43-இன்ச் கொண்ட ஸ்மார்ட் டிவிகள் சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும். மேலும் இப்போது இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலைப் பார்ப்போம்.

43-இன்ச் இன்பினிக்ஸ் எக்ஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (43X3)
பிளிப்கார்ட் தளத்தில் 43-இன்ச் கொண்ட இன்பினிக்ஸ் எக்ஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலை ரூ.19,999-விலையில் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட் டிவி 1920 X 1080 பிக்சல், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்டபல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
அதேபோல் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 36W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான 43-இன்ச் ஸ்மார்ட்போன். எனவே இதுஉங்களுக்கு சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

இன்பினிக்ஸ் எக்ஸ் ஸ்மார்ட் டிவி பிராசஸர்
இன்பினிக்ஸ் எக்ஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ஆனது Realtek RTD2841 பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், EPIC 3.0 Picture Engine போன்ற பலசிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி.

2.தோஷிபா 43-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் VIDAA டிவி (43L5865)
பிளிப்கார்ட் தளத்தில் 43-இன்ச் கொண்ட தோஷிபா புல் எச்டி ஸ்மாரட் VIDAA டிவி (43L5865) மாடலை ரூ.17,499-விலையில் வாங்க முடியும்.
அதேபோல் 1920 x 1080 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், குவாட் கோர் கார்டெக்ஸ்-A53 64-பிட் பிராசஸர்,1ஜிபி ரேம், 4ஜிபி ஸ்டோரேஜ்
உள்ளிட்ட தரமான ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. பின்பு 16W வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டு வெளிவந்துள்ளது
இந்த அசத்தலான டிவி
இதுதவிர எச்டிஎம்ஐ போர்ட்,யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட் லேன் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான தோஷிபாஸ்மார்ட் டிவி மாடல்.

3. 43-இன்ச் எம்ஐ 4சி ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி
பிளிப்கார்ட் தளத்தில் 43-இன்ச் கொண்ட எம்ஐ 4சி ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலை ரூ.19,999-விலையில் வாங்க முடியும்.
குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது Amlogic 64-bit Quad Core வசதியை கொண்டு வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும்.
அதேபோல் 1920 x 1080 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், குரோம்காஸ்ட் ஆதரவு, Vivid Picture Engine மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்.

4.கோடாக் 7XPRO Series ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (43FHDX7XPRO)
43-இன்ச் கொண்ட கோடாக் 7XPRO Series ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.19,999-விலையில்
வாங்க முடியும்.
இந்த கோடாக் ஸ்மார்ட் டிவி 1920 x 1080 பிக்சல்ஸ், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 24W ஸ்பீக்கர்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஆண்ட்ராய்டு டிவி.
ARM கார்டெக்ஸ்-A53 பிராசஸர் மூலம் இந்த டிவி இயங்குகிறது. பின்பு 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், குரோம்காஸ்ட்
ஆதரவு, புளூடூத் 5.0 போன்ற பல சிறப்பு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

5.Coocaa ஃபுல் எச்எ எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி
43-இன்ச் கொண்டCoocaa ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ17,999-விலையில் வாங்க முடியும்.
இந்த ஸ்மார்ட் டிவி 1920 x 1080 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், Eye கேர் டெக்னாலஜி போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
அதேபோல் டால்பி ஆடியோ, சரவுண்ட் சவுண்ட் ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஆண்ட்ராய்டு டிவி. எனவேஇது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
மேலும் 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், ARM A55 குவாட் கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், குரோம்காஸ்ட்ஆதரவு போன்ற பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான Coocaa ஸ்மார்ட் டிவி.


Click it and Unblock the Notifications