Home
Gadgets

ஆளுக்கொன்னு வாங்கும் பட்ஜெட்.. 16GB ஸ்டோரேஜ்.. 40W ஸ்பீக்கர்கள்.. டாப் 5 பெஸ்ட் 43-இன்ச் டிவிகள்..

இந்தியாவில் 32-இன்ச், 40-இன்ச், 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை விட 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. எனவே தான் பல முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் போட்டிப்போட்டுக் கொண்டு பட்ஜெட் விலையில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கின்றன.

அதுவும் சியோமி, ஒன்பிளஸ், சாம்சங், எல்ஜி போன்ற நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் பட்ஜெட் விலையில் சிறந்த ஐந்து 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

16GB ஸ்டோரேஜ்.. 40W ஸ்பீக்கர்கள்.. டாப் 5 பெஸ்ட் 43-இன்ச் டிவிகள்..

டாப்-1: ரெட்மி 43-இன்ச் எப் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி ஃபையர் டிவி (Redmi F Series 4K Ultra HD Smart LED Fire TV) ஆனது அமேசானில் ரூ.25,499 விலையில் கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும்.

இந்த 43-இன்ச் ரெட்மி டிவி 3840 x 2160 பிக்சல்ஸ், ஆட்டோ லோ லேட்டன்சி மோட், விவிட் பிக்சர் என்ஜின், குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர், ஃபயர் ஓஎஸ் 7, 2ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், அலெக்ஸா வாய்ஸ் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் ரிமோட், டால்பி ஆடியோ, டிடிஎஸ்-எச்டி, விர்ச்சுவல் எக்ஸ், 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், வைஃபை 802.11 ஏசி, ஏர்ப்ளே 2, மிராகாஸ்ட், புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஈதர்நெட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் கொண்டுள்ளது.

டாப்-2: ஒன்பிளஸ் ஒய்1எஸ் 43-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (OnePlus Y1S Full HD LED Smart Android TV) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.24,770 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும்.

16GB ஸ்டோரேஜ்.. 40W ஸ்பீக்கர்கள்.. டாப் 5 பெஸ்ட் 43-இன்ச் டிவிகள்..

இந்த 43-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி ஆனது பெசல்-லெஸ் டிசைன், 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் வசதி, 64-பிட் பவர்ஃபுல் பிராசஸர், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

டாப்-3: சாம்சங் Crystal iSmart 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவியை அமேசான் தளத்தில் ரூ.30,990-க்கு வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும். மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், கிரிஸ்டல் பிராசஸர் 4கே, ஸ்மார்ட் ஹப், 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, ஆப் காஸ்டிங், ஸ்மார்ட் திங்ஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.

16GB ஸ்டோரேஜ்.. 40W ஸ்பீக்கர்கள்.. டாப் 5 பெஸ்ட் 43-இன்ச் டிவிகள்..

டாப்-4: ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Acer Advanced I Series Full HD Smart LED Google TV) மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.19,999 விலையில் வாங்கலாம். குறிப்பாக 1080 x 1920 பிக்சல்ஸ், 30W ஸ்பீக்கர்கள், 16ஜிபி ஸ்டோரேஜ், 1.5ஜிபி ரேம், கார்டெக்ஸ்-ஏ55 பிராஸசர், ஸ்மார்ட் ரிமோர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

டாப்-5: தாம்சன் 9ஆர் ப்ரோ 43-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிவி(Thomson 9R PRO Ultra HD (4K) LED Smart Android TV) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.19,999 விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த தாம்சன் டிவி 3840 x 2160 பிக்சல்ஸ், 40 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர், 2ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Best 43 inch android tv in india 2023: Here Top 5 List : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X