பிச்சிக்குது ஆர்டர்.. ரூ.25,000 பட்ஜெட்ல 43 இன்ச் டிவி.. 4K வீடியோ.. LED பேனல்.. DOLBY ஆடியோ.. டாப் 3 லிஸ்ட்!
ரெட்மி (Redmi) மற்றும் சியோமி (Xiaomi) பிராண்டில் 43 இன்ச் 4K எல்இடி வாங்க நினைப்பவர்களுக்கு டாப் 3 மாடல்களின் அம்சங்களை கொடுத்துள்ளோம். இந்த டிவிகள் அமேசான் (Amazon) தளத்தில் பக்காவான தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இதுகுறித்த முழு விவரம் இதோ.
சியோமி எக்ஸ் சீரிஸ் 43 இன்ச் டிவி அம்சங்கள் (Xiaomi X Series 43 inch TV Specifications): இதுவொரு L43M7-A2IN மாடல் 4K அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவியாகும். மெட்டல் பெசல்லெஸ் டிசைன் (Metal Bezel-less Design) கொண்டிருக்கிறது. இந்த டிவியில் 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது.

இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 178 டிரிகி வியூ ஆங்கிள் கிடைக்கிறது. டால்பி விஷன், எச்டிஆர்10 மற்றும் விவிட் பிக்சர் என்ஜின் சப்போர்ட் கொண்டிருக்கிறது. 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி வருகிறது. 30W ஆடியோ அவுட்புட் கொண்டிருக்கிறது. அதோடு டால்பி ஆடியோ, டிடிஎஸ் விர்ச்சுவல் மற்றும் டிடிஎஸ் எச்டி சப்போர்ட் வருகிறது.
ஆண்ட்ராய்டு டிவி 10 ஓஎஸ் கொண்டிருக்கிறது. எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, ப்ளூடூத், வை-பை, ஈதெர்நெட் கனெக்டிவிட்டி வருகிறது. கூகுள் பிளே ஸ்டோர் வருகிறது. ஆகவே, அனைத்து ஓடிடி ஆப்களையும் பயன்படுத்தலாம். இந்த டிவியின் விலை அமேசான் தளத்தில் ரூ.26,499ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிவிக்கு ஒரு வருட வாரண்டி கிடைக்கிறது.
ரெட்மி 43 இன்ச் எக்ஸ்43 டிவி அம்சங்கள் (Redmi 43 inche X43 Specifications): இதுவொரு L43R7-7AIN மாடல் 4K அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி எக்ஸ்43 டிவியாகும். இந்த டிவியில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது. டூயல் பேண்ட் வை-பை, ப்ளூடூத், எச்டிஎம்ஐ, யுஎஸ்பி போன்ற கனெக்டிவிட்டிகள் வருகின்றன.

இந்த டிவியில் டால்பி விஷன், எச்டிஆர்10, எச்எல்சி, விவிட் பிக்சர் என்ஜின், ரியலிட்டி ஃப்லோவ் போன்ற டிஸ்பிளே பீச்சர்கள் வருகின்றன. அதேபோல டால்பி ஆடியோ, டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ், டிடிஎஸ் எச்டி மற்றும் டால்பி அட்மாஸ் சப்போர்ட் 30W ஆடியோ அவுட்புட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு டிவி 10 ஓஎஸ் கொண்டிருக்கிறது. 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி வருகிறது.
இந்த டிவியில் அனைத்து ஓடிடி ஆப்களையும் பயன்படுத்தலாம். ஒரு வருட வாரண்டி வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் ரிமோட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெட்மி டிவியின் விலையும் ரூ.26,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய டிவியின் அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்தாலும், பெசல்லெஸ் டிசைன் மட்டும் கொண்டிருக்கவில்லை.
ரெட்மி எப் சீரிஸ் 43 இன்ச் டிவி அம்சங்கள் (Redmi F Series 43 inch Specifications): இதுவொரு L43R8-FVIN மாடல் 4K அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவியாகும். இந்த டிவியில் ஃபயர் டிவி ஓஎஸ் (Fire TV OS) வருகிறது. இருப்பினும் ஓடிடி ஆப்கள் உள்பட அனைத்து ஆண்ட்ராய்டு ஆப்களையும் பயன்படுத்தலாம். இந்த டிவியில் 24W ஆடியோ அவுட்புட் வருகிறது.
அதோடு டால்பி ஆடியோ, டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் மற்றும் டிடிஎஸ் எச்டி சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 2 ஜிபி ரேம் + 8 ஜிபி மெமரி வருகிறது. இந்த டிவியும் மெட்டல் பெசல்லெஸ் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் டிஸ்பிளேவை பொறுத்தவரை, 4K எச்டிஆர், எச்டிஆர்10, விவிட் பிக்சர் என்ஜின் மற்றும் எச்எல்சி சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டிவிக்கு 1 வருட வாரண்டி கிடைக்கிறது. இந்த மாடலின் விலை ரூ.26,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும், அமேசான் தளத்தில் எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,250 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த ரெட்மி டிவியை ரூ.25,749க்கு வாங்கி கொள்ள முடியும். சியோமி அல்லது ரெட்மி பிராண்ட்டில் 43 இன்ச் டிவி வாங்க விரும்பினால், இந்த 3 மாடலை ஆப்சனில் எடுத்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








