Home
Gadgets

அடேங்கப்பா.. ரூ.20,000-க்கு கீழ் இவ்வளவு 40-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் கிடைக்குதா? நோக்கியா முதல் சியோமி வரை.!

தற்போது இந்திய சந்தையில் 55-இன்ச், 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை விட 40-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு 40-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.

அதேபோல் இந்தியாவில் எல்ஜி, சோனி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளை விட சியோமி, ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் முன்னணி நிறுவனங்களின் 40-இன்ச் ஸ்மார்ட் டிவிகளைப் பார்ப்போம்.

ரூ.20,000-க்கு கீழ் இவ்வளவு 40-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் கிடைக்குதா?

ரியல்மி 40-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி
பளிப்கார்ட் தளத்தில் ரியல்மி நிறுவனத்தின் 40-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலை ரூ.19,399-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த 40-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி ஆனது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், மீடியாடெக் குவாட்-கோர் பிராசஸர், டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள்,கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு கூட மிகவும் அருமையாக உள்ளது.

நோக்கியா 40-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி

நோக்கியா 40-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.19,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடியும் கிடைக்கும். அதேபோல் இந்த நோக்கியா ஸ்மார்ட் டிவி ஆனது 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், குவாட்-கோர் பிராசஸர், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.20,000-க்கு கீழ் இவ்வளவு 40-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் கிடைக்குதா?

40-இன்ச் மோட்டோரோலா Revou 2 ஸ்மார்ட் டிவி
பிளிப்கார்ட் தளத்தில் 40-இன்ச் மோட்டோரோலா சுநஎழர 2 ஸ்மார்ட் டிவி ஆனது ரூ.18,999-க்கு வாங்க கிடைக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட் டிவி 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், குரோம்காஸ்ட் ஆதரவு, கூகுள் அசிஸ்டண்ட், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், மீடியாடெக் குவாட்-கோர் பிராசஸர், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களுடன் இந்த 40-இன்ச் மோட்டோரோலா Revou 2 ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

40-இன்ச் சியோமி எம்ஐ 5ஏ ஸ்மார்ட் டிவி
40-இன்ச் சியோமி எம்ஐ 5ஏ ஸ்மார்ட் டிவி ஆனது அமேசான் தளத்தில் ரூ.20,999-க்கு வாங்க கிடைக்கிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் இப்போது இந்த ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

40-இன்ச் சியோமி எம்ஐ 5ஏ ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளே, 1.5ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், பெசல்-லெஸ் டிசைன், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர், டூயல் பேண்ட் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்.

ரூ.20,000-க்கு கீழ் இவ்வளவு 40-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் கிடைக்குதா?

40-இன்ச் இன்பினிக்ஸ் எக்ஸ்1 ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி
பிளிப்கார்ட் தளத்தில் 40-இன்ச் இன்பினிக்ஸ் எக்ஸ்1 ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி மாடலை ரூ.18,999-க்கு வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி குரோம்காஸ்ட் ஆதரவு, கூகுள் அசிஸ்டண்ட், 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள்,மீடியாடெக் பிராசஸர், 1ஜிப ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், பெசல்-லெஸ் டிசைன், உள்ளிட்ட பல அட்டகாசமான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

ரூ.20,000-க்கு கீழ் இவ்வளவு 40-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் கிடைக்குதா?

சியோமி எம்ஐ 4ஏ 40-இன்ச் ஸ்மார்ட் டிவி
பிளிப்கார்ட் தளத்தில் சியோமி எம்ஐ 4ஏ 40-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது ரூ.19,999-க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி ஃபுல் எச்டி டிஸ்பிளே, டிடிஎஸ்-எச்டி ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, 64-பிட் குவாட்-கோர் பிராஸசர், 1ஜிபி ரேம்,8ஜிபி ஸடோரேஜ், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், வைஃபை ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best 40-inch Smart TVs under Rs 20,000: Here's the List! : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X