Home
Gadgets

அடடே., 40-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் இவ்வளவு கம்மி விலையில் கிடைக்குதா? வாங்க பார்ப்போம்.!

தற்போது பண்டிகைக் காலம் என்பதால் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட முன்னணி ஆன்லைன் தளங்களில் டிவி, ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் உள்ளிட்ட பல சாதனங்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளன.

சரியான நேரம்

குறிப்பாக டிவிகளை வாங்க இதுதான் சரியான நேரம் என்றே கூறலாம். அதாவது அனைத்து தளங்களிலும் ஸ்மார்ட் டிவிகள் மிகவும் கம்மியான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது அமேசான் தளத்தில் கம்மியான விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலைப் பார்ப்போம்.

40-இன்ச் Coocaa ஸ்மார்ட் டிவி (40S3U Pro)

40-இன்ச் Coocaa ஸ்மார்ட் டிவி (40S3U Pro)

அமேசான் தளத்தில் 40-இன்ச் Coocaa ஸ்மார்ட் டிவி (40S3U Pro) மாடலை ரூ.14,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 1920x1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், Coolita 2.0 OS உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

மேலும் 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், டால்பி ஆடியோ போன்ற தரமான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது நிறுவனம்.

40-இன்ச் எம்ஐ Horizon Edition ஸ்மார்ட் டிவி 4ஏ

40-இன்ச் எம்ஐ Horizon Edition ஸ்மார்ட் டிவி 4ஏ

அமேசான் தளத்தில் 40-இன்ச் கொண்ட எம்ஐ ஸ்மார்ட் டிவி 4ஏ மாடலுக்கு தற்போது சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவி மாடலை தற்போது ரூ.19,999-விலையில் வாங்க முடியும். 1920x1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி.

40-இன்ச் எம்ஐ Horizon Edition  ஸ்மார்ட் டிவி 4ஏ அம்சங்கள்

40-இன்ச் எம்ஐ Horizon Edition ஸ்மார்ட் டிவி 4ஏ அம்சங்கள்

40-இன்ச் எம்ஐ Horizon Edition ஸ்மார்ட் டிவி 4ஏ ஆனது 20 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு டிவி 9 இயங்குதளம், க்ரோம்காஸ்ட் ஆதரவு, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் வெளிவந்துள்ளது இந்த எம்ஐ ஸ்மார்ட் டிவி மாடல்.

40-இன்ச் டிசிஎல் ஸ்மார்ட் டிவி (40S6505)

40-இன்ச் டிசிஎல் ஸ்மார்ட் டிவி (40S6505)

அமோன் தளத்தில் 40-இன்ச் கொண்ட டிசிஎல் ஸ்மார்ட் டிவி (40S6505) மாடலை ரூ.17,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

அதேபோல் 64-பிட் குவாட் கோர் பிராசஸர், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், 20 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட், ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல்.

40-இன்ச் ஏசர் ஸ்மார்ட் டிவி (AR40AR2841FDFL)

40-இன்ச் ஏசர் ஸ்மார்ட் டிவி (AR40AR2841FDFL)

40-இன்ச் கொண்ட ஏசர் ஸ்மார்ட் டிவி மாடலை அமேசான் தளத்தில் ரூ.17,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

மேலும் ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம், கூகுள் அசிஸ்டண்ட், க்ரோம்காஸட் ஆதரவு, டால்பி ஆடியோ, 1.5ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், புளூடூத் 5.0, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி மாடல்.

40-இன்ச் கோடாக் ஸ்மார்ட் டிவி (40FHDX7XPRO)

40-இன்ச் கோடாக் ஸ்மார்ட் டிவி (40FHDX7XPRO)

40-இன்ச் கோடாக் ஸ்மார்ட் டிவி ((40FHDX7XPRO) மாடலை அமேசான் தளத்தில் ரூ.14,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம், க்ரோம்காஸ்ட் ஆதரவு, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு
அம்சங்களைக் கொண்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Best 40-inch Smart TVs to Enhance the Viewing Experience: Here's the List: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X