விடாதீங்க.. 30W ஸ்பீக்கர்கள்.. 16ஜிபி ஸ்டோரேஜ்.. இந்தியாவில் வாங்க சிறந்த 40-இன்ச் டிவிகள்.. லிஸ்ட் இதோ
இந்தியாவில் அதிநவீன 40-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது சியோமி, ஒன்பிளஸ், ஏசர் போன்ற நிறுவனங்களின் 40-இன்ச் டிவிகள் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பல முன்னணி நிறுவனங்கள் 40-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றன.
அதுவும் பட்ஜெட் விலையில் அதிநவீன அம்சங்களுடன் வெளிவரும் 40-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றுதான் கூற வேண்டும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்தியாவில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த 40-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

டாப்-1: சியோமி எம்ஐ 5ஏ சீரிஸ் 40-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை (MI 5A Series Full HD Smart Android LED TV) அமேசான் தளத்தில் ரூ.21,990-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த டிவியை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் கிடைக்கும்.
குறிப்பாக 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம், டால்பி ஆடியா, டிடிஎஸ்:எக்ஸ் ஆதரவு, 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், 1.5ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், விவிட் பிக்சர் என்ஜின், குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ55, கூகுள் அசிஸ்டணட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த சியோமி எம்ஐ 5ஏ சீரிஸ் 40-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி.

டாப்-2: ஒன்பிளஸ் ஒய்1எஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (OnePlus Y1S Full HD LED Smart Android TV) மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.23,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் கிடைக்கும்.
இந்த ஒன்பிளஸ் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், டால்பி ஆடியோ, 20று ஸ்பீக்கர்கள், குரோம்காஸ்ட் ஆதரவு, ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
டாப்-3: ஏசர் 40-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (Acer Advanced I Series Full HD Smart LED Google TV) மாடலை அமேசான் தளத்தில் ரூ.17,999 விலையில் வாங்க முடியும். 16ஜிபி ஸ்டோரேஜ், 1.5ஜிபி ரேம், டால்பி ஆடியோ, 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், 64-பிட் குவாட்-கோர் பிராசஸர், எச்டிஆர் 10 ஆதரவு, டூயல் பேண்ட் வைஃபை, கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.

டாப்-4: 40-இன்ச் மோட்டோரோலா என்விஷன் எக்ஸ் எச்டி ரெடி எல்இடிஸ்மார்ட் கூகுள் டிவி (MOTOROLA Envision X HD Ready LED Smart Google TV) மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.17,999 விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த டிவி மீடியாடெக் 9602 பிராசஸர், 1.5ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், கூகுள் டிவி இயங்குதளம், டால்பி டிஜிட்டல் ஆடியோ, 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
டாப்-5: தாம்சன் எப்ஏ சீரிஸ் 40-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 (Thomson FA Series Full HD LED Smart Android TV 2023) மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.15,999 விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த டிவி ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம், 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆடியோ, கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








