Home
Gadgets

குழப்பமே வேணாம்.. ரூ.15000 பட்ஜெட்ல 32 இன்ச் டிவி.. இந்த 5 மாடல்களே பெஸ்ட்.. எந்தெந்த பிராண்ட்?

அமேசான் (Amazon) தளத்தில் ரூ.15000 பட்ஜெட்டுக்குள் 32 இன்ச் டிவி வாங்க திட்டம் போட்டவர்களுக்கு அதில் கிடைக்கும் 5 பெஸ்ட் டிவி மாடல்களை கொண்டு வந்துள்ளோம். இதில் சாம்சங், எல்ஜி, எம்ஐ, ஒன்பிளஸ் மற்றும் ரெட்மி போன்ற முன்னணி பிராண்ட்கள் இருக்கின்றன.

சாம்சங் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி (Samsung 32 inch Smart TV): இதுவொரு UA32T4340BKXXL மாடல் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவியாகும். இந்த டிவியில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 32 இன்ச் (1366x768 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது. டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆடியோ சப்போர்ட் கொண்ட 20W ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ரூ.15000 பட்ஜெட்ல 32 இன்ச் டிவி.. இந்த 5 மாடல்களே பெஸ்ட் சாய்ஸ்!

எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, ஸ்கிரீன் ஷேரிங், ப்ளூடூத் மற்றும் வை-பை போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். ஒரு வருட வாரண்டி வழங்கப்படுகிறது. இந்த டிவியின் விலை ரூ.13,990ஆக இருக்கிறது. எச்டிஎப்சி கார்டுகளுக்கு ரூ.750 தள்ளுபடி கிடைக்கிறது.

எம்ஐ 32 இன்ச் ஸ்மார்ட் டிவி (MI 32 inch Smart TV): இதுவொரு எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி L32M8-5AIN மாடலாகும். 32 இன்ச் ஏ சீரிஸில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிவியில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 32 இன்ச் (1366x768 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது. டிடிஎஸ் எச்டி மற்றும் டால்பி ஆடியோ சப்போர்ட் கொண்ட 20W ஸ்பீக்கர் கொண்டிருக்கிறது.

ரூ.15000 பட்ஜெட்ல 32 இன்ச் டிவி.. இந்த 5 மாடல்களே பெஸ்ட் சாய்ஸ்!

கூகுள் டிவி ஓஸ்யுடன் டூயல் பேண்ட் வை-பை, ப்ளூடூத், எச்டிஎம்ஐ, யுஎஸ்பி போன்ற கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். இந்த டிவிக்கு 1 வருட வாரண்டி கிடைக்கிறது. இந்த கூகுள் டிவியின் விலை ரூ.12,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி (OnePlus 32 inch Smart TV): இதுவொரு ஒய் சீரிஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 32Y1 மாடலாகும். இந்த டிவியில் 32 இன்ச் எச்டி டிஸ்பிளே வருகிறது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. டால்பி ஆடியோ சப்போர்ட்டுடன் 20W அவுட்புட் கொண்டுள்ளது.

ரூ.15000 பட்ஜெட்ல 32 இன்ச் டிவி.. இந்த 5 மாடல்களே பெஸ்ட் சாய்ஸ்!

குரோம் காஸ்ட் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ப்ளூடூத், வை-பை, எச்டிஎம்ஐ, யுஎஸ்பி போன்ற கனெக்டிவிட்டிகள் வருகின்றன. முன்னணி ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். இந்த ஒன்பிளஸ் டிவிக்கும் 1 வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது. இந்த டிவியின் விலை ரூ.14,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி 32 இன்ச் ஸ்மார்ட் டிவி (Redmi 32 inch Smart TV): இந்த டிவி எப் சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி L32R8-FVIN மாடலாகும். இந்த டிவியில் ஃபயர் ஓஎஸ் 7 பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஓஎஸ் ஓடிடி ஆப்கள் உள்பட பல்வேறு ஆப்கள் சப்போர்ட் கொண்டிருக்கிறது. டால்பி ஆடியோ, டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் சப்போர்ட் வருகிறது.

ரூ.15000 பட்ஜெட்ல 32 இன்ச் டிவி.. இந்த 5 மாடல்களே பெஸ்ட் சாய்ஸ்!

20W ஆடியோ அவுட்புட் கிடைக்கிறது. இந்த டிவியிலும் ப்ளூடூத், வை-பை, யுஎஸ்பி, எச்டிஎம்ஐ போன்ற கனெக்டிவிட்டிகள் வருகின்றன. இந்த ரெட்மி டிவியின் விலை ரூ.11,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிவிக்கும் 1 வருட வாரண்டி வழங்கப்படுகிறது. அதோடு வாய்ஸ் ரிமோட் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

எல்ஜி 32 இன்ச் ஸ்மார்ட் டிவி (LG 32 inch Smart TV): இந்த டிவி எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி 32LM563BPTC மாடலாகும். இந்த டிவி 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே கொண்டுள்ளது. ப்ளூ ரே கேமிங் கன்சோல் சப்போர்ட் வருகிறது. டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் சப்போர்ட் கொண்ட 10W ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு யுஎஸ்பி, எச்டிஎம்ஐ, வை-பை, ப்ளூடூத் கனெக்டிவிட்டி இருக்கிறது.

ரூ.15000 பட்ஜெட்ல 32 இன்ச் டிவி.. இந்த 5 மாடல்களே பெஸ்ட் சாய்ஸ்!

வெப் ஓஎஸ் கொண்டிருக்கிறது. மினி டிவி பிரவுசர் கொடுக்கப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ போன்ற முக்கிய ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். இந்த டிவிக்கும் 1 வருட வாரண்டி கிடைக்கிறது. இந்த எல்ஜி டிவியின் விலை ரூ.13,490ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 32 இன்ச் டிவி வாங்க நினைத்தால் இந்த 5 டிவிகளை ஆப்சனில் எடுத்து கொள்ளுங்கள்.
Best Mobiles in India

English summary
Best 32 inch Smart TV Under Rs 15000 in Amazon With Samsung, MI, OnePlus, Redmi, LG Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X