பெஸ்ட் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி: மி எல்இடி டிவி 4ஏ vs தாம்சன் ஸ்மார்ட் டிவி.!

தாம்சன் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் பொறுத்தவரை கார்டெக்ஸ்-ஏ53 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மாலி டி720எம்பி2 ஆதரவைக் கொண்டுள்ளது.

|

இந்திய சந்தையில் மலிவு விலையில் ஸ்மார்ட்டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம் மற்றும் தாம்சன் நிறுவனம், மேலும் இந்த டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. முதலில் சியோமி நிறுவனம் அதன் மி எல்இடி டிவி 4ஏ மாடலை அறிமுகம் செய்யதது, அதற்கு போட்டியாக தாம்சன் நிறுவனம் ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி நிறுவனம் மற்றும் தாம்சன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களில் 1366 x 768 பிக்சல் திர்மானம் மற்றும் 60Hz வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த இரண்டு டிவி மாடல்களும் 178டிகிரி கோணங்களை ஆதரிக்கிறது. ஆனால் தாம்சன் ஸ்மார்ட் டிவி மட்டும் அதன் டிஸ்பிளேவில் 450 nits of brightness வசதியைக் கொண்டுள்ளது. மேலும் சியோமி டிவியில்
இந்த சிறப்பு வசதி இல்லை.

சியோமி:

சியோமி:

சியோமி 32-இன்ச் ஸ்மார்ட் டிவி(32எம்3277) மாடல் பொறுத்தவரை குவாட்-கோர் ஏம்லாஜிக் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மாலி டி720எம்பி2 ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம். மேலும் வைபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி 2.0, ஈத்தர்நெட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 2 x 5 வாட் ஸ்பீக்கர், டால்பி விர்ச்சுவல் சரவுண்ட் சவுண்ட், DTS மற்றும் பாஸ் பூஸ்ட்வசதிகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

 தாம்சன்:

தாம்சன்:

தாம்சன் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் பொறுத்தவரை கார்டெக்ஸ்-ஏ53 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மாலி டி720எம்பி2 ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம். குறிப்பாக யூஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்ச்வால்:

பேட்ச்வால்:

இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் & செயற்கை நுண்ணறிவு சார்ந்த பேட்ச்வால் யூசர் இன்டர்ஃபேஸ் தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது. ஆன்லைன் தரவுகள் மற்றும் செட்-டாப் பாக்ஸ் போன்றவற்றை ஒற்றை தளத்தில் வழங்கும் வேலையை பேட்ச்வால் வேலை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 5.1.1:

ஆண்ட்ராய்டு 5.1.1:

தாம்சன் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 5.1.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின்பு ஸ்மார்ட் டிவியில் தேவைப்படும் பெரும்பாலான பயன்பாடுகள், நெட்ஃபிக்ஸ், யூடியூப், சவுண்ட் கிளவுட் போன்றவை தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடல்களில் பயன்படுத்த முடியும்.

ரிமோட்:

ரிமோட்:

சியோமி டிவியின் ரிமோட் பொறுத்தவரை ப்ளூடூத் மற்றும் 11பட்டன் அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் ஸ்மார்ட் டிவி மற்றும் செட்-டாப் பாக்ஸ் அனுபவத்தை ஒற்றை ரிமோட் வழங்குவதால், ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட ரிமோட் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.

How to check PF Balance in online (TAMIL)
 விலை:

விலை:

சியோமி நிறுவனத்தின் 32-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலைப் பொறுத்தவரை ரூ.13,999-ஆக உள்ளது, அதே போன்று தாம்சன் 32-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலைப் பொறுத்தவரை ரூ.13,490-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Best 32 inch Smart TV Mi LED TV 4A vs Thomson Smart TV; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X