யாரு விடுவா? 16ஜிபி ஸ்டோரேஜ்.. 30W ஸ்பீக்கர்கள்.. பட்ஜெட் விலை 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்.. இதோ டாப் 5 லிஸ்ட்..
இந்தியாவில் தற்போது பட்ஜெட் விலை 32-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது.
குறிப்பாக இந்தியாவில் எல்ஜி, சியோமி, ஒன்பிளஸ் நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் தான் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது இந்தியாவில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

1.ஒன்பிளஸ் 32-இன்ச் ஒய் சீரிஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ஆனது ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கிறது. குறிப்பாக அமேசான் மற்றும் ஒன்பிளஸ் தளங்களில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை கம்மி விலையில் வாங்க முடியும். குறிப்பாக 1366x768 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.
அதேபோல் ஆண்ட்ராய்டு டிவி 9.0 இயங்குதளம், டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், பெசல்-லெஸ் டிசைன், 64-பிட் பவர்ஃபுல் பிராசஸர், கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த 32-இன்ச் ஒன்பிளஸ் ஒய் சீரிஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி.
2. டிசிஎல் 32-இன்ச் பெசல்-லெஸ் எஸ் சீரிஸ் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (TCL Bezel-Less S Series Smart Android) ஆனது அமேசான் தளத்தில் ரூ.10,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிவி ஃபுல் எச்டி டிஸ்பிளே, 1920 x 1080 பிக்சல்ஸ், டால்பி ஆடியோ, 24W ஸ்பீக்கர்கள், 64-பிட் குவாட்-கோர் பிராஸசர், 1.5ஜிபி ரேம், 16ஜிபி ரோம், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

3. ரெட்மி 32-இன்ச் F சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி(Redmi F Series HD Ready Smart LED Fire TV) ஆனது அமேசானில் ரூ.11.999-க்கு வாங்க கிடைக்கிறது. 1366×768 பிக்சல்ஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள், விவிட் பிக்சர் என்ஜின், குவாட் கோர் கோர்டெக்ஸ் ஏ35 பிராசஸர், 20W ஸ்பீக்கர்கள், டிடிஎஸ்-எச்டி ஆதரவு, டால்பி ஆடியோ ஆதரவு, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவி.
4. எல்ஜி 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி (LG HD Ready Smart LED TV) ஆனது அமேசானில் ரூ.14,990-க்கு வாங்கக் கிடைக்கிறது. பின்பு 1366x768 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், வெப்ஓஎஸ் இயங்குதளம், 1.5ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், 16W ஸ்பீக்கர்கள், α5 AI பிராசஸர், எச்டிஆர் 10 ஆதரவு, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவி.

5. ஏசர் 32-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Acer Advanced I Series HD Ready Smart LED Google TV) ஆனது அமேசானில் ரூ.10,999-க்கு வாங்க கிடைக்கிறது. குறிப்பாக 30W ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ, குவாட்-கோர் பிராஸசர், 1.5ஜிபி ரேம்,16ஜிபி ஸ்டோரேஜ், 1366x768 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 ஆதரவு, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.


Click it and Unblock the Notifications