அதிரவைக்கும் விலை.. 200 இன்ச்.. டால்பி அட்மாஸ்.. புதிய 4K புரொஜெக்டர் இந்தியாவில் அறிமுகம்.. எந்த மாடல்?
நமது வீட்டிலேயே ஒரு மினி சினிமா தியேட்டரை (Mini Cinema Theatre) செட்டப் செய்ய வேண்டும் என்கிற ஆசை, கனவு நம்மில் பலருக்கும் உள்ளது. அதற்குத் தகுந்தபடி பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் அதிநவீன புரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன.
குறிப்பாக இப்போது வரும் புரொஜெக்டர் மாடல்கள் ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கின்றன என்றே கூறலாம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பென்கியூ நிறுவனம் இந்தியாவில் பென்கியூ டபிள்யூ5800 4கே யுஎச்டி ஹோம் சினிமா புரொஜெக்டர் மாடலை(BenQ W5800 4K UHD Home Cinema Projector) அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய மாடல் சற்று உயர்வான விலையில் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது பென்கியூ டபிள்யூ5800 4கே யுஎச்டி மாடலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
பென்கியூ டபிள்யூ5800 4கே யுஎச்டி ஹோம் சினிமா புரொஜெக்டர் அம்சங்கள் (BenQ W5800 Specifications): 4கே யுஎஸ்டி ரெசல்யூஷன் (4K UHD resolution) ஆதரவுடன் இந்த அசத்தலான புரொஜெக்டர் வெளிவந்துள்ளது. எனவே சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ், 100% டிசிஐ பி3 கலர் காமட் (DCI P3 Colour Gamut) சப்போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது பென்கியூ புரொஜெக்டர் மாடல்.
லேசர் லைட் (laser light) ஆதரவு மற்றும் 2600 ஏஎன்எஸ்ஐ லுமென்ஸ் ப்ரைட்னஸ் (ANSI Lumens brightness) ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான பென்கியூ டபிள்யூ5800 4கே யுஎச்டி ஹோம் சினிமா புரொஜெக்டர் மாடல். குறிப்பாக இந்த புரொஜெக்டர் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது பென்கியூ நிறுவனம்.

இந்த புரொஜெக்டர் மாடலில் சினிமா மோட்-ஐ பயன்படுத்தினால் 1700 ஏஎன்எஸ்ஐ லுமென்ஸ் ப்ரைட்னஸ் (ANSI Lumens brightness), 100% டிசிஐ-பி3 (100% DCI-P3) போன்ற அம்சங்கள் கிடைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. குறிப்பாக வீட்டில் ஒரு மினி தியேட்டர் அனுபவம் கிடைக்கும்
அதேபோல் 1.6x மோட்டார் ஜூம் லென்ஸ் (1.6x motorised zoom lens), 2டி லென்ஸ் ஷிப்ட் (2D lens shift), கார்னர் ஃபிட் (Corner Fit) போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த பென்கியூ டபிள்யூ5800 4கே யுஎச்டி ஹோம் சினிமா புரொஜெக்டர் மாடல்
குறிப்பாக 7.1 சேனல், டால்பி அட்மாஸ் ஆடியோ பாஸ் (Dolby Atmos audio pass), ஏஆர்சிஃஈஏஆர்சி (ARC/eARC) போன்ற ஆடியோ ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய புரொஜெக்டர் மாடல். மேலும் எச்டிஎம்ஐபோர்ட், யுஎஸ்பி டைப் ஏ போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளது.

பென்கியூ டபிள்யூ5800 4கே யுஎச்டி ஹோம் சினிமா புரொஜெக்டரில் 200 இன்ச் வரையிலான கஸ்டமைசபிள் புரொஜெக்சன் சைஸ் (Customizable Projection Size) கிடைக்கிறது. மேலும் ஃபிலிம்மேக்கர் மோட்(Filmmaker Mode) சப்போர்ட் இதில் உள்ளது. இதுதவிர 24fps இல் பிளேபேக்கை ஆதரிக்கிறது இந்த புரொஜெக்டர்.
எனவே இந்த பென்கியூ டபிள்யூ5800 4கே யுஎச்டி ஹோம் சினிமா புரொஜெக்டரில் நீங்கள் விரும்பியபடி திரைப்படங்களை மிகவும் தெளிவாகப் பார்க்க முடியும். அதேபோல் இந்த புதிய பென்கியூ டபிள்யூ5800 4கே யுஎச்டி ஹோம் சினிமா புரொஜெக்டரின் விலை ரூ.6,50,000-ஆக உள்ளது. நாடு முழுவதும் உள்ள ஹோம் ஏவி சிஸ்டம் இன்டக்ரேட்டர்களில் (Home AV System Integrators) இந்த புரொஜெக்டர் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








