Home
Gadgets

இனி வீடே தியேட்டர் தான்.. 200 இன்ச்.. டால்பி அட்மாஸ்.. BenQ புரொஜெக்டர் அறிமுகம்.. தலைசுற்ற வைக்கும் விலை..

பென்கியூ (BenQ) நிறுவனம் இன்று இந்தியாவில் பென்கியூ டபிள்யூ2720ஐ 4கே எல்இடி ஏஐ ஹோம் சினிமா புரொஜெக்டர் (BenQ W2720i 4K LED AI Home Cinema Projector) மாடலை அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் இந்த புதிய புரொஜெக்டர் வெளிவந்துள்ளது. இப்போது. பென்கியூ டபிள்யூ2720ஐ 4கே எல்இடி ஏஐ ஹோம் சினிமா புரொஜெக்டர் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

பென்கியூ டபிள்யூ2720ஐ 4கே எல்இடி ஏஐ ஹோம் சினிமா புரொஜெக்டர் அம்சங்கள் (BenQ W2720i Specifications): இந்த புதிய புரொஜெக்டரில் 200 இன்ச் வரையில் வீடியோக்களை பார்த்து கொள்ளலாம். குறிப்பாக இந்த புரொஜெக்டர் சிறந்த மற்றும் பெரிய திரை அனுபவத்தை வழங்கும். எனவே 75 இன்ச் மற்றும் 100 இன்ச் அளவு கொண்ட ஸ்மார்ட் டிவிகளை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.

இனி வீடே தியேட்டர் தான்.. BenQ புரொஜெக்டர் அறிமுகம்.. என்ன விலை?

மேலும் 3840×2160 பிக்சல்ஸ், 4கே அல்ட்ரா எச்டி ஆதரவு, 2500 ஏஎன்எஸ்ஐ லுமன்ஸ் ப்ரைட்னஸ் (2500 ANSI lumens brightness), 16:9 அஸ்பெக்ட் ரேசியோ (16:9 aspect ratio), 2,000,000:1 கான்ட்ராஸ்ட் 30-பிட் கலர், டிஎல்பி ப்ரொஜெக்ஷன் (DLP projection) உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.

இதுதவிர எச்டிஆர், எச்டிஆர் 10 பிளஸ், எச்எல்ஜி (HLG), ஏஐ சினிமாடிக் மோட் (Cinematic mode), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), ஐஎஸ்எப் கலிப்ரேஷன் (ISF Calibration) போன்ற அம்சங்களும் இந்த பென்கியூ டபிள்யூ2720ஐ 4கே எல்இடி ஏஐ ஹோம் சினிமா புரொஜெக்டர் மாடலில் உள்ளன.

அதேபோல் 1.3X ஜூமிங் சப்போர்ட், வெர்டிக்கல் லென்ஸ் ஷிப்ட் (vertical lens shift), ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (auto keystone correction) போன்ற வசதிகளுடன் இந்த அசத்தலான பென்கியூ புரொஜெக்டர் வெளிவந்துள்ளது. பின்பு கேமிங் வசதிகளுக்கு தகுந்தபடி பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புரொஜெக்டரில் உள்ளன.

மூன்று எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5மிமீ ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆடியோ ஆதரவுடன் இந்த பென்கியூ டபிள்யூ2720ஐ 4கே எல்இடி ஏஐ ஹோம் சினிமா புரொஜெக்டர் வெளிவந்தது. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

ஆண்ட்ராய்டு டிவி டாங்கிள் ( Android TV dongle), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant), நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி+ (Disney+), யூடியூப் (YouTube) உள்ளிட்ட அனைத்தையும் இந்த புரொஜெக்டரில் பயன்படுத்த முடியும்.

இனி வீடே தியேட்டர் தான்.. BenQ புரொஜெக்டர் அறிமுகம்.. என்ன விலை?

ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit), 8-பாயிண்ட் கார்னர் ஃபிட் (8-Point Corner Fi), ஃபோகஸ் ரிங் லாக் (focus ring lock) போன்ற தனித்துவமான அம்சங்களும் இந்த புரொஜெக்டரில் உள்ளன. பின்பு 4எல்இடி லைட் சோர்ஸ் (4LED light source), 30,000-hour lifespan ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் புரொஜெக்டர் உடன் ரிமோட், 3மீ பவர் கார்டு, லென்ஸ் கவர் போன்றவை கிடைக்கிறது.

பென்கியூ டபிள்யூ2720ஐ 4கே எல்இடி ஏஐ ஹோம் சினிமா புரொஜெக்டர் விலை ரூ.3,50,000-ஆக உள்ளது. பென்கியூ ரீடெய்ல் ஸ்டோர்களில் இந்த புதிய சாதனம் வாங்க கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BenQ W2720i 4K LED AI Home Cinema Projector launched in India: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X