Home
Gadgets

பொட்டி வந்தாச்சு.. 13 இன்ச் கேப்பில் 120 இன்ச் டிஸ்பிளே.. டிவி மாதிரிதான்.. ஆனால், எஃபெக்ட் தியேட்டர் லெவல்!

வெறும் 13 இன்ச் கேப்பில் 120 இன்ச் டிஸ்பிளே புரொஜெக்சன், 4K அல்ட்ரா எச்டி ரெசொலூஷன் வீடியோ, டால்பி அட்மோஸ் ஆடியோ, 40W ஆடியோ அவுட், 15W வூப்பர்கள், 5W சேம்பர் ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு டிவி டாங்கிள் போன்ற ஒட்டுமொத்த அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் பென்கியூ வி5010ஐ புரொஜெக்டர் (BenQ V5010i Projector) இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. விலையை கேட்டால் தலையை சுற்றும்படி பட்ஜெட் இருக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு அதில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்போம்.

பென்கியூ வி5010ஐ புரொஜெக்டர் அம்சங்கள் (BenQ V5010i Projector Specifications): இந்த பென்கியூ மாடலானது, டிவியை போலவே டிஸ்பிளே அவுட்புட் கொடுக்கும். வெறும் 13 இன்ச் கேப்பில் 120 இன்ச் டிஸ்பிளேவை புரொஜெக்சன் செய்து கொள்ளலாம். 4K (3840×2160 பிக்சல்கள்) ரெசொலூஷன் மற்றும் 2500 லூமென்ஸ் பிரைட்னஸ் கிடைக்கிறது.

பொட்டி வந்தாச்சு.. 13 இன்ச் கேப்பில் 120 இன்ச் டிஸ்பிளே.. டிவி மாதிரி!

இதுபோக கலர் அகியூரசிக்காக 1.07 பில்லியன் கலர் டெப்த் வருகிறது. ஆகவே, அல்ட்ரா பிரீமியம் டிவிக்கு நிகரான வீடியோ அவுட்புட் எதிர்பார்க்கலாம். அதேபோல டிசிஐ பி3 (DCI P3) கலர் காமட் வருகிறது. மேலும், எச்டிஆர்10 ( HDR10), எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கேமிங் பிரியர்களுக்கான எச்எல்ஜி (HLG) பிக்சர் பீச்சர்கள் கிடைக்கின்றன.

இதுபோக எச்டிஆர் கேம் (HDR Game) சப்போர்ட் உள்ளது. 3டி பிக்சர் மோட் (3D Picture Mode), ஃபிலிம் மேக்கர் மோட் (Flim Maker Mode) உள்ளிட்ட பல்வேறு மோட்கள் இருக்கின்றன. 2D கீஸ்டோன் அட்ஜெட்மெண்ட் கிடைக்கிறது. விஜிஏ (VGA), அல்ட்ரா எச்டி (UHD) ரெசொலூஷன் சப்போர்ட் உள்ளது. 5W சேம்பர் ஸ்பீக்கர் உள்ளது.

15W வூப்பர்கள் வருகின்றன. டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) உள்ளது. ஆடியோ அவுட் (Audio Out) மற்றும் எச்டிஎம்ஐ ஆடியோ ரிட்டர்ன் (HDMI Audio Return) கிடைக்கிறது. மல்டி சேனல் சப்போர்ட் உள்ளது. எச்டிஎம்ஐ (HDMI) மற்றும் யுஎஸ்பி டைப் மினி பி (USB Type Mini B) போர்ட் உள்ளது.

பொட்டி வந்தாச்சு.. 13 இன்ச் கேப்பில் 120 இன்ச் டிஸ்பிளே.. டிவி மாதிரி!

மேலும், யுஎஸ்பி டைப்-ஏ (USB Type A), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), டிபி09 பின் (DB-9pin) போர்ட்களும் வருகின்றன. கேமிக் கன்சோல் கிடைக்கிறது. வயர்லெஸ் கனெக்டிவிட்டியை பார்க்கையில், ப்ளூடூத் வி5.0 (Bluetooth v5.0), டூயல் பேண்ட் வை-பை (Dual-Band Wi-Fi), ஏர்பிளே (AirPlay), கூகுள் காஸ்ட் (Google Cast) சப்போர்ட் உள்ளது.

பென்கியூ வி5010ஐ புரொஜெக்டரில் ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் (Android TV OS) வருகிறது. கூகுள் பிளே (Google Play) சப்போர்ட் கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் யூடியூப் போன்ற ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) பயன்படுத்தலாம்.

பில்ட்-இன் குரோம்காஸ்ட் (Built-in Chromecast) கிடைக்கிறது. ஸ்மார்ட் பீச்சர்களை பார்க்கையில், ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit), ஆட்டோ 2டி கீஸ்டோன் (Auto 2D Keystone) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு டிவி டாங்கிள் (Android TV Dongle) மற்றும் ரிமோட் (Remote) வருகிறது. மொத்தமாக 40W ஆடியோ பெற்று கொள்ளலாம்.

ஆகவே, 13.21 கிலோ எடை வருகிறது. 3 வருடங்கள் வாரண்டி கிடைக்கிறது. மினி தியேட்டர் லெவலுக்கான அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொண்டிருப்பதால், விலையானது ரூ. 6,50,000ஆக இருக்கிறது. பென்கியூ இ-ஸ்டோரில் அல்லது பார்ட்னர் ஸ்டோர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்தியாவில் விற்பனை தொடங்கிவிட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BenQ V5010i Projector With Ultra Short Throw Laser 4K Display Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X