வச்சி செஞ்சிட்டாங்க.. மாதிரி இல்ல.. தியேட்டரேதான்.. 150 இன்ச் டிஸ்பிளே.. 4K வீடியோ.. Dolby ஆடியோ.. எந்த மாடல்?
தியேட்டர் லெவல்னு சொன்னா மட்டும் போதாது, அதுக்கு ஏத்த மாதிரி பீச்சர்கள் இருக்கனும் என்று கேட்கும் கஸ்டமர்களே மூக்கில் விரல் வைக்கும்படி அல்ட்ரா பிரீமியமாக பென்கியூ டிகே710எஸ்டிஐ லேசர் புரொஜெக்டர் (BenQ TK710STi Laser Projector) இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. சொல்லப்போனால், கேமிங் பிரியர்களுக்கான பீச்சர்கள் பேக் செய்யப்பட்டு இருப்பதால், குவாலிட்டியை பற்றி கவலையே இந்த மாடலில் இருக்காது. இந்த பென்கியூ டிகே710எஸ்டிஐ லேசர் புரொஜெக்டரின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பென்கியூ டிகே710எஸ்டிஐ அம்சங்கள் (BenQ TK710STi Specifications): இந்த புரொஜெக்டரில் 100 இன்ச், 120 இன்ச் மற்றும் 150 இன்ச் வரையில் வீடியோக்களை பார்த்து கொள்ளலாம். வெறும் 5.5 அடி முதல் 6.5 அடி இடைவெளியில் 100 இன்ச் புரொஜெக்சன் செய்து கொள்ளலாம். 4K அல்ட்ரா எச்டி (3840 × 2160 பிக்சல்கள்) ரெசொலூஷன் வருகிறது. 3200 ஏஎன்எஸ்ஐ லூமென்ஸ் வருகிறது.

1.07 பில்லியன் கலர் டெப்த் உள்ளது. 3டி கீஸ்டோன் (3D Keystone), 30 டிகிரி வெர்டிகல் மற்றும் 30 டிகிரி ஹரிசான்டல் கிஸ்டோன் அட்ஜஸ்ட்மென்ட் வருகிறது. எச்டிஆர்10 (HDR10), எச்டிஆர் ஃஎப்பிஎஸ் (HDR FPS), எச்டிஆர் ஆர்பிஜி (HDR RPG) மற்றும் எச்எல்ஜி (HLG) உள்ளிட்ட பிக்சர் சப்போர்ட் உள்ளது. ஆகவே, தியோட்டர் லெவல் வீடியோ அவுட்புட் எதிர்பார்க்கலாம்.
அதேபோல ஆர்பிஜி மற்றும் ஃஎப்பிஎஸ் சப்போர்ட் வருவதால், கேமிங் அவுட்புட் லாக்-ப்ரீ அவுட்புட் கொடுக்கும். மேலும், கேமிங் மோட்களுக்கு ஏற்ப 60Hz, 120Hz மற்றும் 240Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. 1.2X ஜூமிங் சப்போர்ட் உள்ளது. இந்த பென்கியூ டிகே710எஸ்டிஐ மாடலில் ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் (Android TV OS) வருகிறது.
ஆகவே, நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் (Amazon Prime) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள பயன்படுத்தலாம். இதுபோக ஆண்ட்ராய்டு டிவி டாங்கிள் (Android TV Dongle) சப்போர்ட் வருகிறது. ஆகவே, கிட்டத்தட்ட பிரீமியம் டிவியில் வரும் அனைத்தையும் இந்த புரொஜெக்டர் மூலம் பார்த்து கொள்ளலாம். இதற்காக ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கிறது.
ஆடியோவை பார்க்கையில் 5W ஸ்பீக்கர் வருகிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் எச்டிஎம்ஐ ஆடியோ ரிட்டர்ன் (HDMI Audio Return) கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் உள்ளது. மேலும், டைப்-சி ஏ (Type A) சப்போர்ட் வருகிறது. இந்த பென்கியூ டிகே710எஸ்டிஐ மாடலில் 20 ஆயிரம் ஹவர்ஸ் லேசர் லைப்டைம் கிடைக்கும்.
720p, 1080p மற்றும் 2160p ரெசொலூஷனில் வீடியோ அவுட்புட் கிடைப்பதால், 150 இன்ச் டிவி அனுபவத்தை கொடுக்கும். 8.3 மில்லியன் பிக்சல் ரென்டர்கள் வருவதால், கலர் அக்கியூரசி பட்டையை கிளப்பும். கேமிங் பிரியர்களுக்கு இது பக்காவாக பொருந்தும். டேபிள் டாப் (Tabletop) மட்டுமல்லாமல், சீலிங் மவுண்டெட் (Ceiling-Mounted) செய்து கொள்ளலாம்.
டிவியை போலவே கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் வருகிறது. கூகுள் பிளே கிடைக்கிறது. ஆகவே, ஆப்கள் மற்றும் வீடியோக்களை பயன்படுத்த முடியும். இதுபோக பில்ட்-இன் குரோம்காஸ்ட் (Buit-in Cromecast) வருகிறது. எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, கேமிங் கன்சோல் கனெக்டிவிட்டி வருகிறது. 3.1 கிலோ எடை கொண்டிருக்கிறது.
இந்த பென்கியூ டிகே710எஸ்டிஐ லேசர் புரொஜெக்டரில் அல்ட்ரா பிரீமியம் பீச்சர்கள் பேக் செய்யப்பட்டிருப்பதால், இதன் விலை ரூ.3,59,000ஆக இருக்கிறது. இந்த விலையிலேயே இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. பென்கியூ இந்தியா ஈ-ஸ்டோர் (BenQ India E-store) மற்றும் ரீடெய்ல் ஸ்டோர்களிலும் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








