Home
Gadgets

இதான்பா தியேட்டர்.. 150 இன்ச் புரொஜெக்டர்.. 4K எச்டிஆர் ரெசொலூஷன்.. 3D கீஸ்டோன்.. எந்த மாடல்?

வீட்டுக்குள்ளயே மினி தியேட்டர் செட்டப் வேண்டுமென்று கேட்கும் கஸ்டமர்களுக்கு 4K அல்ட்ரா எச்டி ரெசொலூஷன், எச்டிஆர்10 வீடியோ சப்போர்ட், 3டி கீஸ்டோன் போன்ற பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், 150 இன்ச் ஸ்கிரீன் அவுட்புட் உடன் பென்கியூ டிகே710 (BenQ TK710) புரொஜெக்டர் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. கேமிங் கன்சோல் கனெக்டிவிட்டி, எச்டிஎம்ஐ ஆடியோ ரிட்டர்ன் போன்ற மற்ற பீச்சர்களிலும் மார்கெட்டை அதிரவிட்டுள்ளது. இந்த பென்கியூ டிகே710 புரொஜெக்டரின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் இதோ.

பென்கியூ டிகே710 அம்சங்கள் (BenQ TK710 Specifications): இந்த மாடலில் 150 இன்ச் புரொஜெக்சன் செய்து கொள்ளலாம். 4K (3840 x 2160 பிக்சல்கள்) ரெசொலூஷன் வருகிறது. இதுவொரு லேசர் அவுட்புட் மாடலாகும். 1.07 பில்லியன் கலர் டெப்த் மற்றும் 3200 ஏஎன்எஸ்ஐ லுமென்ஸ் (ANSI Lumens) சப்போர்ட் வருகிறது.

இதான்பா தியேட்டர்.. 150 இன்ச் புரொஜெக்டர்.. 4K எச்டிஆர் ரெசொலூஷன்!

ரெக்.709 வைடு கலர் காமட் (Rec.709 Wide Color Gamut) கொண்டுள்ளது. ஆகவே, வீடியோ அவுட்புட் கிளாரிட்டி மட்டுமல்லாமல் கலர் அவுட்புட்டில் பக்கா அக்கியூரசி கிடைக்கும். இதன் மூலம் தியேட்டர் லெவல் வீடியோ அனுபவத்தை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இதுபோக டியூரபிலிட்டியும் இந்த பென்கியூ டிகே710 கிடைக்கிறது.

கிட்டத்தட்ட 20000 மணி நேரங்களுக்கு லைட் சோர்ஸ் லைப் (Light Source Life) கிடைக்கும். டிஎல்பி (DLP) புரொஜெக்சன் சிஸ்டம் வருகிறது. 1.3x வரையில் ஜூம் ரேசியோ கிடைக்கிறது. 3.18 மீட்டர்கள் தூரம் அவுட்புட் கொடுக்கும். இந்த மாடலின் கீஸ்டோன் அட்ஜட்ஸ்மெண்ட்டை (Keystone Adjustment) பார்க்கையில் 3டி சப்போர்ட் உள்ளது.

அதேபோல 30 டிகிரி வெர்டிகல், 30 டிகிரி அரிசான்டல் மற்றும் 30 டிகிரி ரோட்டேஷன் செய்து கொள்ளலாம். கேமிங் மோட் (Gaming Mode), 3டி மோட் (3D Mode), சினிமா மோட் (Cinema Mode), ஃஎப்பிஎஸ் மோட் (FPS), எச்டிஆர் ஆர்பிஜி (HDR RPG) மற்றும் எச்டிஆர் ஃஎப்பிஎஸ் (HDR FPS) போன்ற பிக்சர் மோட்களை கொண்டிருக்கிறது.

இதான்பா தியேட்டர்.. 150 இன்ச் புரொஜெக்டர்.. 4K எச்டிஆர் ரெசொலூஷன்!

மேலும், எச்ஆர்10 (HDR10), எச்எல்ஜி (HLG), லிவ்விங் ரூம் (Living Room), ஆர்பிஜி (RPG) போன்ற மோட்களும் இடம் பெற்றுள்ளன. 1080p ரெசொலூஷனில் 240Hz ரெஃப்ரெஷ் ரேட், 2K ரெசொலூஷனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4K ரெசொலூஷனில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் எதிர்பார்க்கலாம். எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port) சப்போர்ட் உள்ளது.

அதேபோல யுஎஸ்பி போர்ட் (USB Port), டிபி 9 பின் (DB9pin) கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இந்த பென்கியூ டிகே710 மாடலின் ஆடியோவை பார்க்கையில், 5W ஸ்பீக்கர் வருகிறது. 3.5 மிமீ ஆடியோ அவுட் மற்றும் எச்டிஎம்ஐ ஆடியோ ரிட்டர்ன் (HDMI Audio Return) வருகிறது. பிரீமியம் புரொஜெக்டராக இருப்பதால், 3.0 கிலோ எடை கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த பீரிமியம் பீச்சர்களையும் இந்த பென்கியூ டிகே710 புரொஜெக்டர் கொண்டிருப்பதால், விலையும் பிரீமியாகவே இருக்கிறது. ரூ.3,49,000 பட்ஜெட்டில் விலை நிர்ணயம் இருக்கிறது. இதற்கேற்ப பீச்சர்களும் வருவதால், நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது. பென்கியூ இந்தியா ஈ-ஸ்டோரில் இந்த மாடலை ஆர்டர் செய்யலாம். இந்த மாதம் விற்பனைக்கு வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BenQ TK710 Projector With 4K Resolution, 5W Audio Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X